திங்கள், 6 ஜூன், 2016

ஆதனூரானின் சிறுகதைகள் -

                         

                             அணிந்துரை
            தெய்வத்தமிழ்மணி, அபிநவபாரதி, கவிமாமணி மயன்

     கற்பனையும் சந்தமும் கருத்தினை ஈர்க்கும்படி, அற்புதமான கவிதைகளைப் புனையும் விற்பன்னராக விளங்கும் கவிமாமணி பாரதி எழிலவன் சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும், அருமையான நாவல்களைப் படைத்தளிக்கும் அற்புத நாவலாசிரியராகவும் விளங்க்குவதை தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறியும்.  ஆதனூரான் என்ற பெயரால், வாசமலர்கள், உயிரில் கலந்த உறவு, கடமை கண்ணியம் காதல் போன்ற நாவல்கள் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற நாவல்களின் வரிசையில் உருவாகி வெளிவந்திருக்கும் சிறுகதைத் தொகுப்பு வாழ்வியல் கதைகள் என்ற இந்த அற்புதப்படைப்பாகும். சமூகப் பிரச்சினைகளுக்கு அச்சுவடிவம் கொடுத்து அரங்கேறியிருக்கும் அரிய புத்தகமாகும்.

     தமிழகத்திலே கவிதைக்கும், இலக்கியத்துக்கும் அதிக முக்கியத் துவம் கொடுத்து, அறுநூறுக்கும் மேற்பட்ட கவியரங்குகளைத் தொய்வின்றி நடத்தி, சாதனை படைத்துவரும், சொல்லின் செல்வர் பாரதி சுராஜ் தலைமையில் நடைபெறும் பாரதி கலைக்கழத்தின் கவிமாமணி விருதுபெற்ற கவிஞர்களுள் ஒருவராகித் தனிப்பெருமை பெற்றவர். இவர் படைத்த எழில்மலர்கள், எழில் ஓவிங்கள், கவிதைப்பூங்கா எனும் கவிதை நூல்கள் கவிஞர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றவையாகும். பாரதி எழிலவனின்(ஆதனூரான் என்ற புனைப்பெயரால்) சிறுகதைத்தொகுப்பான, கவரிமான் பல்லோராலும் பாராட்டப்பெற்று, அவருக்குப் பெருமையையும் புகழையும் தேடித்தந்துள்ளதை இங்கு குறிப்பிடுதல் முக்கியமாகும்.

     ஆதனூரான், அருமைக் கவிஞரான கவிமாமணி பாரதி எழிலவன் படைத்துள்ள இந்த வாழ்வியல் கதைகளுள், முதல்கதை, தொணதொணப்பு.  அலுவலகம் சென்று வந்தபின் இல்லத்திலும்

பணியாற்றவேண்டிய பொறுப்புமிக்க மறுமகளாக விளங்கும் கல்யாணி, தனது சிறுவயதில், தனது தாய் கூறய குடும்ப வேலைகளைத் தவிர்த்து, விளையாட்டுப் பெண்ணாக வளர்ந்ததால், புகுந்த வீட்டில்படும் அல்லல் களை சுவைபட சித்தரிக்கிறது. பிறந்த வீட்டில், வாசலுக்கு  சாணம் தெளித்து கொலமிடச் சொல்லும் தாயின் சொற்களைப் பொருட்படுத்தாமல் இருந்ததையும், காபி டிகாஷன் இறக்கும் முறையை சரிவரத் தெரிந்துகொள்ளாமல் பட்ட அவஸ்த்தையையும் உணர்ந்து, தனது அறியாமைக்கும், புறக்கணிப்பிற்கும், சரியான பதிலடியாக, தற்போது  அவைகளை புக்கஹத்தில்  செய்யவேண்டிய கட்டாயத்தை நினைத்து வருந்தும் நிலையை வெகு அழகாக ஆசிரியர் வர்ணித்துள்ளது பாராட்டும்படி அமைந்துள்ளது. அவளது மாமியார், அவளது அறியாமையைப் புரிந்துகொண்டு, அவள் செய்த தவறுகளையெல்லாம் பொருள் படுத்தாது, அவற்றைச் சரிசெய்த மாமியார், பிறந்த வீட்டில், தாயார் குடும்ப வேலைகளைக் கற்றுக் கொடுக்காமல், பெண்களை வளர்க்கும் அவல நிலையைத் தனக்குள்ளே புலம்புவதை - தொண தொணப்பை-  ஒவ்வொருவரும் படித்து ரசிப்பது சுவாரஸ்யமாகும். புதிதாகத் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கும், அவர்களது தாய்மார்களுக்கும் அருமையான புத்திமதியாக இக்கதை விளங்குகிறது. சிறப்பாக நிகழ்ச்சியை விவரித்திருக்கும் ஆசிரியர் பாராட்டுக்குரியவர்.

     இரண்டாவது கதையான யதார்த்தம், இளவயதில் ஏற்படும் இனக் கவர்ச்சியினால், நளினி, ரமேஷ் அடைந்த தொல்லைகளும், ராமகிருஷ்ணனைத் திருமணம் செய்துகொண்டபின், வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொண்ட செய்திகளை விளக்கும் அருமையான கதையாகும். பணம் மட்டும் வாழ்க்கையில்லை, பணம் இருந்தால் எதையும் சுலபமாக சாதிக்க முடியும், என்ற பணம் படைத்தவர்களின் எண்ணத்திற்கு சரியான பாடமாக இக்கதை விளங்குகிறது.

     நாராயணன்-ஜானகி என்ற வயதான தம்பதிகளின் மனக்குமு ரல்களும் , சிறுவயதில் மகன்களின் திருமணத்தில் கோபப்பட்டு

நடந்து கொண்டதால், அவர்கள் தனியாகச் சென்று குடும்பம் நடத்தும் நிலையையும், பேரன், பேத்திகளிடம், தமது அன்பையோ பாசத்தையோ காட்டமுடியாமல் தவித்ததையும், கடைசிக் காலத்தில் சேரும்போது, எந்த ஒரு பாசத்தையும் அனுபவிக்காமல் மறைந்து போனதையும், தன்சினம் தன்னைச்சுடும் கதையில் எடுத்துக் காட்டும் ஆசிரியர் ஆதனூரான், இந்த நிகழ்வுகளை அருமையாகப் படம்பிடித் திருப்பதைப் படித்துத்தான் ரசிக்கவேண்டும்.

     அளவுக்குமேல் ஆசைப்பட்டு, கவுரவம் என்ற பெயரால் ஊதாரித் தனமாகச் செலவு செய்த, வசுந்தரா-சுந்தரேசன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும், நிகழ்வுகளும், சமூகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருந்தும்வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, ``எரிமுன்னர் வைத்தூரு போலக்கெடும்.என்ற வள்ளுவன் குறளுக்கு விளக்கமளிப்பதாக உள்ளது.  அவசியம் ஒவ்வொருவரும் படித்து உணர வேண்டிய  அருமையான கதை.

     மனம் சொல்லும் மாற்றங்கள் ஒரு அற்புதமான படைப்பு. குருஷ்ண சாமியும் நாராயணனும் வயது முதிர்ந்த நண்பர்கள்.  அவர்களின் சம்பாஷனைமூலம் கடந்தகால நிகழ்வுகளை அசை போடுவதுபோல கதை அமைந்துள்ளது. கிருஷ்ணசாமி தான் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள நடந்துகொண்ட விதத்தால், மனம் வருந்துவதாகவும், நாராயணன், நீ மட்டுமல்ல, அனைவரும் பழையகாலத்தில்  நடந்த செயல்களால் பாதிப்படையக்கூடும் என்ற நிலையை விளக்கி, தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் தன்னை எப்படிப் பாதித்துள்ளது, இப்பொழுது தான் எப்படி இருக்கிறார் என்ற உண்மைகளை எடுத்துச் சொல்லும்போது, கிருஷ்ணசாமி வாழ்வின் நிதர்சனத்தை உணர்ந்து கொள்வதாக கதை நகர்கிறது. வாழ்வில் அந்தந்த காலத்தில் நடந்தவற்றை, சுலபமாக எடுத்துக்கொண்டு, வயதான காலத்தில் குழம்பாமல் இருக்கவேண்டுமென்ற உண்மையைப் போதிப்பதாக இக்கதை இருக்கிறது.  ஒவ்வொருவர் வாழ்விலும் புதைந்துகிடக்கும், உண்மைகளை உணர்ந்து, அதற்காக

வருந்தாமல் இருக்க வேண்டும் என்ற போதனையை வெளிப் படுத்துகிறது. அவசியம் படிக்கவேண்டியது இக்கதை.

     பாசப்புலம்பல் என்ற சிறுகதை, ஐயங்கார் பெண்ணும் முஸ்லிம் இளைஞனும் கலப்புத் திருமணம் செய்துகொண்டபின், இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்பின், அவர்களது மகனுக்குத் திருமணம் நடக்கும் போது, தனது பழைய நினைவுகளை அசைபோட்டு, தன் உற்றார் உறவினர்களும், தாய் தந்தையும் தன்மகனது திருமணத்திற்கு வந்து கலந்துகொள்ள முடியாத நிலையில் தாம் இருக்கிறோமே தாம் செய்த கலப்பு மணத்தினால் தானே, நாம் எல்லா சுற்றங்களையும் இழந்து தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறோம் என்று மனம் வருந்தும் சம்பவங்கள் சுவையாக விவரிக்கப்பட்டு இருக்கிறது. கலப்புத் திருமணம் செய்துகொள் பவர்களுக்கு உபயோகமான கதையாகும் இது.

     அறுவடைகாலம் நல்லதொரு கும்பக்கதையாகும். நல்ல குடும்பத்தில் திருமணமான ஜனனிக்கு, அவளது தாயார் தனது தோழியின் சொல்லைக் கேட்டு, பெண்ணைத் தனிக்குடித்தனம்  செய்யும்படி தூண்டும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் ஒரு அருமையான கதையாகும். கடைசியில் அவர்கள் திருந்தி, ஜனனியின் புகுந்த வீட்டின் பெருமைகளை அறிந்துகொண்டு தங்கள் தவறை உணர்ந்து ஒன்று சேரும் சூழ்நிலை நன்றாக விவா¢க்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு புது தம்பதியும் பெற்றோரும் படித்துத் தெரிந்துகொள்ளும் சம்பவங்கள் பல இக்கதையில் உள்ளன.

     வாழ்வியல் கதைகள் என்ற இச்சிறுகதைத் தொகுப்பு, சமூக அவலங்களைச் சித்தரிப்பதோடு, அவைகளிலிருந்து மீட்டுவரும் நிலையையும் எடுத்துச் சொல்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்க வேண்டிய அருமையான சிறுகதை நூல் வாழ்வியல் கதைகளாகும். பாரதி எழிலவன், தான் ஒரு அற்புதமான எழுத்தாளர் என்பதை வாழ்வியல் கதைகள்மூலம் நிரூபித்துள்ளார். மேலும் பல அரிய நூல்களைப் படைத்து தமிழுக்குத் தொண்டு செய்யவேண்டுமென்றும், அதற்கான உடல் வலிவையும், நீண்ட ஆயுளையும் தரவேண்டுமென்றும் அன்னை மஹா சக்தியைப் ப்ரார்த்திக்கிறேன்.                                       
                                                         அன்புடன்
                                                     கவிமாமணி மயன்
1/301,மஹாகவி பாரதியார் தெரு,
M.G.நகர் - 9 வது வி¡¢வு,
ஆதனூர் - 603 202.
மாடம்பாக்கம் அஞ்சல்
கூடுவாஞ்சேரி - வழி.
கைபேசி: 9941502895


                   




               ஆதனூரான் பேசுகிறேன்.

     அன்பார்ந்த வாசகப்பெருமக்களுக்கு ஆதனூரானின் இனிய அன்பு வணக்கங்கள். இப்பொழுது எனது படைப்பில் அடுத்ததோர் இனிய சிறுகதைத் தொகுப்பு உங்களது கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பு வாழ்வியல் கதைகள் என்னும் பெயர் தாங்கி பவனி வருகிறது. இதை அச்சிட்டுக் கொடுத்த அச்சகத்தாருக்கும், அணிந்துரை அளித்த  கவிமாமணி மயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.

     இந்த சிறுகதைத் தொகுப்பில், மொத்தம் ஏழு சிறுகதைகள் இருக்கின்றன. அனைத்தும் நமது அன்றாட வாழ்வில் நடந்து வருகின்ற வாழ்க்கைச் சம்பவங்களாகும். நமது சமுதாயத்தில் நாம் எத்தனையோ வகை மனிதர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நாமும் நமது வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகளைச் சந்தித்துக் கொண்டும், அவைகளை எப்படி சமாளிப்பது என்று சிந்தனை செய்து கொண்டுமிருக்கிறோம். அதைத்தான் இந்த சிறுகதைத் தொகுப்பில் குறிப்பிட்டிருக்கிறேன்.

     இந்தக் கதையைப் படிப்பதின் மூலம் நாம் எப்படி இருக்கிறோம், எப்படி இருக்கக்கூடாது, அதனால் என்னயென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்னும் விழிப்புணர்வை இலேசாகக் காட்டி இருக்கிறேன்.

     நமது இளம் வயதில் நாம் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் அதன் விளைவுகள் எதிர்காலத்தில் எப்படியெல்லாம் இருக்கக்கூடும் என்பதை ஒரு கண்ணோட்டமாகக் காட்டியிருக்கிறேன்.

     இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கி என்னை வாழ்த்தியருளிய கவிமாமணி மயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்வாசகர்கள் இந்தத்தொகுப்பைப் படித்து அதனால் யாராவது ஒருவருக்கு மனத்தளவில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் அதுவே எனக்குக் கிடைத்த பாராட்டாகவும் வெற்றியாகவும் கருதுவேன்.
                                        இவண் தங்கள் அன்பன்
                                              ஆதனூரான்
                                    (கவிமாமணி பாரதி எழிலவன்)  



                       

                            பொருளடக்கம்
   
கதையின் பெயர்.                                பக்கம் எண்

1. தொணதொணப்பு

2. யதார்த்தம்

3. தன்சினம் தன்னைச் சுடும்

4. அளவுக்குமேல் ஆசை

5. மனம் சொல்லும் மாற்றங்கள்

6. பாசப் புலம்பல்

7. அறுவடைகாலம்

               









           


                      1.தொணதொணப்பு


     இன்று கல்யாணிக்கு அலுவலக விடுமுறை நாள்.  ஏதோ ஒரு காரணத்திற்காக அவளது அலுவலகம் இன்று விடுமுறையாக அறிவித்திருந்தார்கள். அலுவலகப் பணிக்குத்தான் விடுமுறையே தவிர, அவளது இல்லத்தில் அவளுக்கு விடுமுறை கிடையாது. அவளது இல்லத்தில் எவரும் அவளைக் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது கிடையாது. அவளது மாமியாராகட்டும், மாமனாராகட்டும் அவளிடம் அன்பாகவே நடந்து கொள்கிறார்கள்.
  
     அவளது புக்ககத்தில்  உள்ள பழக்க வழக்கங்களை அவளது மாமியாரும் மாமனாரும் அவளுக்குத் தெளிவாகவே எடுத்துரைத் திருக்கிறார்கள்.  அதன்படியே அவளும் கூடுமானவரையில் அவர்களை அனுசரித்தே நடந்து வருகிறாள்.  இருந்தாலும் ஒருசில தவறுகள் நடந்துவிடுகின்றன. அவைகளை மாமியார் நேரடியாக அவளிடம் குற்றமாகச் சொல்லமாட்டாள் எனினும், சிற்சில சமயங்களில் புலம்பித் தள்ளிவிடுவாள். அப்பொழுதெல்லாம் கல்யாணிக்குச் சிறிது சங்கடமாக இருந்தாலும் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது வேலைகளைச் செய்வதிலேயே முனைப்பாய் இருப்பாள்.
  
     காலையில் நாலரை மணிக்கே எழுந்துவிடவேண்டும், வீட்டின் வாயிலில் சாணம் தெளித்து, அரிசிமாக்கோலம் போடவேண்டும்.  இந்தக் காலத்தில் சாணம் தெளித்துக் கோலம் போடும் பழக்கம் எத்தனை வீடுகளில் உள்ளதுஇதையெல்லாம்  வாடகை வீடுகளில் செய்யமுடியுமா என்னமுதலில் சாணத்தை எங்கே தேடுவது.  அப்படிக் கிடைத்தாலும் அதைக்கரைத்து எங்கே தெளிப்பதுஇந்தக் காலத்தில் எல்லாமே ப்ளாட் வீடுகளாகத் தானே இருக்கிறது!  இல்லையென்றால் ஒண்டுக் குடித்தனமாக இருக்கும். இந்த  வாசல்தெளித்துக் கோலம்  போடுகிற  விவகாரமெல்லாவற்றையும் அந்த வீட்டின் சொந்தக் க்காரர்களேகுடித்தனக்  காரர்களிடம் மாதாமாதம் ஒரு தொகையை  வாங்கிக் கொண்டு, ஒரு வேலைக்காரியை வைத்தோ அல்லது தாங்களாகவோ செய்து கொண்டு விடுவார்கள்.  ஆனால் தனி வீடாகவோ சொந்த வீடாகவோ இருந்தால் நாம்தானே செய்து கொள்ள வேண்டும். காலையில் ஒரு நாலறை மணிக்கு இல்லாவிட்டாலும் ஒரு ஐந்தரை மணிக்குள்ளாகவேனும் செய்துவிட வேண்டுமல்லவாஅப்படித்தான் நமது கல்யாணியும் செய்யவேண்டிய தாகிவிட்டது.
    
     அவள் திருமணமாவதற்கு முன்னர் ஏதாவது வீட்டு வேலை களைச் செய்திருக்கிறாளோ. இல்லை சாணத்aதைத்தான் கையால் தொட்டுத்தானிருக்கிறாளாபட்டணத்திலேயே பிறந்து வளர்ந்த பெண்ணல்லவா, சாணத்தைப் பார்த்தாலே அருவெறுப்பாக இருக்கும்வாயிலுள்ள உமிழ் நீரெல்லாம் வெளியே வந்துவிடும். அப்படி குமட்டிக் கொண்டுவரும் அவளுக்கு.  அவளுக்கு மட்டும் தானா, அவளது தங்கை பவானிக்கும் அப்படியே.  அம்மா எவ்வளவோ முறை சொல்லிப்பார்த்தும் பலனிருக்காது. யாராவது அவளது சொல்லைக் காதுகொடுத்துக் கேட்டால்தானே:  அந்த அம்மாள் புலம்பிக்கொண்டே சாணத்தை வாசலில் தெளித்து விடுவாள், சிலநாட்கள் கோலமும் போட்டுவிடுவாள், ஆனால் பெரும்பாலான நாட்கள் கல்யாணியோ, பவானியோ கோலம்மட்டும் ஆசையோடு போடுவார்கள்.. 

     அம்மாவின் புலம்பல்மட்டும் ஓயாது. ``இப்போமட்டும் ஓடிவாங்கடி கோலம் போடறதுக்கு. புதுசுபுதுசா ஏதோ கத்துண்டு வந்து கோலம்போடறேளே, அழகா புள்ளிவெச்சு கோலம் போடத் தெரியுமோ? சாணத்தைத் தொடமட்டும்  குமட்டிண்டு வர்றதாக்கும். சாணம்னா என்ன அவ்வளவு மட்டமாபசுமாடு புல்லையும் வைக்கோலையும், புண்ணாக்கையும் மட்டும் சாப்டுட்டு, நாம் சத்தோட வாழறதுக்கு பாலைக் கொடுக்கிறதுகள்.  அந்த சாணம் மட்டும் எப்படீடி நாறும்.  அந்த சாணத்தை வீட்டு வாசல்லே தெளிச்சா விஷக்கிருமிகளெல்லாம் கிட்டே வராது, செத்துடும்டீ, செத்துடும்.  அது ஒரு கிருமிநாசினிடீ, அதை உங்க கையாலகூட தொடமாட்டேங்கறேளேடீ.  இந்தாத்துலதான், அதுவும் செல்லம் கொடுத்து, செல்லம் கொடுத்து கெடுத்துண்டிருக்கேனே, எங்கிட் டேதான் இதெல்லாம் செல்லுபடியாகும்.  இன்னொருத்தன் ஆத்துக்கு வாழ்க்கைப் பட்டுண்டுபோனா இதெல்லாம் நடக்குமோ.  என்னைத்தான் காரித்துப்புவா.  நாங்கள்லாம் உங்கள் வயசுல எங்காத்துல அப்படி சொல்லிடமுடியுமா என்ன? குமட்டுலேயே குத்துவா. உங்களுக்கெல்லாம் நான் நன்னா இடம் கொடுத்துட்டேன்.  இப்படியெல்லாம் புக்காத்துல நர்நாட்டியம் பண்ண முடியுமோ.  போங்கோ போங்கோ எப்படியானும் போங்கோ. எனக்கென்ன? நன்னா மொத்துப் பட்டேள்னா அப்போ புரியும்.  சரி சரி கோலத்தையாவது மத்தவா பார்த்து ரசிக்கற மாதிரி நன்னா புள்ளிவெச்சுப் போடுங்கோடி.அடிக்கடி தாயார் பொரிந்து தள்ளுவாள். அவள் அப்பொழுது முணுமுணுத்தது, தொணதொணப்பாக வேப்பங்காயாகக் கசந்தது.

     இப்பொழுது, இவளுடைய விருப்பு வெறுப்பெல்லாம் எடுபடுமா என்ன; கல்யாணியின் மாமியார் மிகவும் நல்லவள்தான், இருந்தாலும் கொஞ்சம் பழமையிலும், ஆசாரத்திலும் ஊறிய வள்தான்.  அவளுக்கு வீட்டில் அனைத்து வேலைகளும் ஒழுங்கா கவும் முறைப்படியும் நடக்கவேண்டும்.  அப்படியும் ஏதாவது வேலையில் தவறுகள் ஏற்பட்டால், அவள் மற்றவர்களை ஏதும் குறை சொல்லமாட்டாள். அவைகளை தனது உடல் தள்ளாமை யுடன் முக்கி முனகிக்கொண்டே, பலவிதமான புலம்பல்களினூடே செய்து முடிப்பாள்.  யாரையும் குறை கூறமாட்டாள், திட்ட வும்மாட்டாள்.

     அவள் அப்படி நேரடியாகக் கூப்பிட்டுத் திட்டினால்கூட, அந்த காரியத்தை எப்படிச்செய்வது என்று கேட்டு தெரிந்து கொண்டு செய்துவிடலாம்.  அதுவும் சாத்தியமில்லை. இருந்தாலும் அம்மா சொல்லிக் கொடுத்த காரியங்கள்தான் இப்போழுது அவளுக்குக் கைகொடுக்கிறது.  அம்மாவின் மூன்றுநாள் வீட்டு விலக்கின் பொழுது கல்யாணிதான் அம்மாவை கேட்டுக் கொண்டு சமையலும் மற்ற வேலைகளும் செய்வாள். அவளது சமயலை அவளது அப்பா மெச்சிக்கொண்டே சாப்பிடுவா     ஆனால் நம்  கல்யாணிக்குத் தனது மாமியாரின் புலம்பல் சற்று பயத்தையும் மனச்சுமையையும் கொடுத்தாலும் அவைகளைப் பொறுத்துக் கொண்டு, தனக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அந்த காரியங்களைச் செய்துமுடித்து விடுவாள்.  அப்பொழுதெல்லாம் அவள் தனது தாயாரை நினைத்துக் கொள்வாள். தனது தாயார் தலைதலையாக அடித்துக் கொள்ளும் பொழுது, அதை தொணதொணப்பாக நினைக்காமல் கேட்டிருந்தால் இப்படி மாமியாரின் புலம்பலைக் கேட்கவேண்டிய அவசியமி ருந்திருக்காதல்லவா!

     ``அப்பொழுது அம்மா சொல்லும் போதெல்லாம் பிடிவாதமாக இந்த சாணத்தைத்தொட மறுத்தேனேஆனால் இப்போ அதே வேலையை செய்துதான் தீரணும்கிற கட்டாயத்துல செய்யறேனே! அப்பவே அம்மா சொல்றபடி கேட்டு சகிச்சுண்டு செஞ்சிருந்தால் அப்போ அம்மாவும்க்கும் ஒத்தாசையா இருந்திருக்குமே.  பாவம் அம்மாஅவளது மன ஓட்டங்களுக்கிடையில் தனது பணிகளைச் செய்து முடித்தாள்.

     பிறகு, பரபரவென்று உள்ளே ஓடிப்போய், காப்பி ·பில்டாரில் காப்பிப் பொடியைத் திணித்து, வென்னீரை அதன் தலையில் ஊற்றி அதன்மேல் மூடியால் மூடிவிட்டுச் சமையல் அறையிலிருந்து வெளிப்போந்து குளியலறையை நோக்கி ஓடினாள். போகும் பொழுது ஒரு குச்சியால் தனது உள்ளாடைகளையும், துவாலையையும் கொத்தி எடுத்து, குளியலறையின் கதவின்மேல் வைத்துவிட்டுக் குளிக்கப் புகுந்தாள்.

     ``ஏண்டி கல்யாணி, நீ எழுந்திருக்கிறதோ ஏழுமணிக்கு மேலே. அப்படி அபூர்வமா ஆறு மணிக்கெல்லாம் எழுந்தாலும் பல்லுதேச்சு காப்பி குடிக்கவே ரொம்பநாழி எடுத்துக்குவே. ஏண்டி காலா  காலத்துல  குளிக்கப்படாதோ?   இப்படியே      மசமசன்னு உட்கார்ந்துண்டு காப்பியை சீப்பிக் குடிச்சுண்டே, T.V. பார்த்துண்டே இருந்துட்டு, எட்டு மணிக்குக் குளிக்கப்போறியே, ஒருத்தன் ஆத்துக்குப் போகவேண்டிய வயசுப் பொண்ணு இப்படி சோம்பரித் தனமா இருந்தா என்ன அர்த்தம்?”அம்மாவின் இத்தகைய புலம்பல் இன்னும் கல்யாணியின் காதில் சுப்ரபாதமாக ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதற்கு அப்பாவோ, `` ஏண்டி தினமும் குழந்தையைப் போட்டுக் கரிச்சுக் கொட்டறே? இவ கொழந்தைதானே வாயா வார்த்தையாச்சொன்னாக் கேட்டுக்கறா.  இன்னொருத் தராத்துக்குப் போனா, தானே கத்துண்டுடுவா. அதுக்காக இப்பவே இப்படி இவளை வறுத்துக் குத்தாதேடீ. குழந்தைகள் பொறந்தாத்துல இருக்கிற வரையிலும் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே.  விடுவியாஎன்று அவர்களுக்குப் பரிந்துகொண்டு பேசுவார்.

     ``இதோ பாருங்கோன்னா, இதுகளெல்லாம் பொண் கொழந்தைகள். வீணா செல்லம் கொடுத்துக் கெடுக்காதேங்கோ. உங்களால எனக்கு ஒத்தாசையா ஏதாவது பண்ணமுடியறதோ? பொழுது விடிஞ்சதிலேர்ந்து பேப்பரும் கையுமா இருந்துட்டு, ஆபீசுக்குப்போக நேரமாயிடுத்துன்னு என்னை விரட்டுவேள். வேரென்ன செய்வேள்.  பாவம் நம்ம ஆத்துக்காரி, ஒருத்தியா இருந்துண்டு கஷ்ட்டப்படறாளே, ஏதாவது ஒத்தாசை செய்வோம், அட்லீஸ்ட் ஒரு காய்கறியாவது அரிஞ்சு கொடுப்போம்னு தோணறதோ? இல்லையே.  பேசாம ஒங்க வேலையைப் பார்த்துண்டு இருங்கோ.  இந்த குழந்தைகளையும் செல்லம் கொடுத்துக் கெடுத்துடாதேங்கோஅம்மாவின் இத்தகைய பேச்சால் அப்பா வாயையே திறக்கமாட்டார். கப்சிப்.

     ``ஏண்டி சனியனே, இப்படியாடி விழுப்போட துணிகளை யெல்லாம் கையாலே எடுத்துண்டு போவே? ஒரு குச்சியிலே கொந்திண்டு போறதுதானே? ஒரு மடி விழுப்பு ஆசாரமெல்லாம் தரிஞ்சுக்கவேண்டாம்? என்னைப் பார்த்தாவது கத்துக்க வேண்டாமோ?” அம்மாவின் தொணதொணப்பு தாங்காது.

     ``போம்மா; எத்தனை துணிகளை குச்சியிலே எடுத்துண்டு போறது? அதெல்லாம் என்னாலே முடியாதும்மா. மடியாவது விழுப்பாவதுஇந்த இருபத்தோறாம் நூற்றாண்டிலும் இதெல்லாம்பார்த்துண்டிருக்கியே, நீ வேணும்னா அப்படியே இரு”  இவளது   பதில் கல்யாணியின் தாயாருக்கு எரிச்சலூட்டும். ``எப்படியாவது ஒழிஎன்று வாழ்த்துதான் கடைசியில் நிலைக்கும்.

     ``இப்போ? அம்மா அப்பொழுது என்னவெல்லாம் செய்யச் சொல்லி நான் மறுத்தேனோ, அதையெல்லாம் மாமியாரின் முணுமுணுப்புக்குப் பயந்துண்டு நானே செய்யறேன். ஹ்ம்..ஹ்ம்.. அப்பவே அம்மா சொல்படி கேட்டிருந்தேன்னா, இப்போ இந்த மாமியார் முணுமுணுக்க மாட்டாளே.நினைத்துக் கொண்டே குளித்து முடித்து வெளியே வந்து பக்கத்து அறைக்குள் புகுந்து கொண்டாள் கல்யாணி.

     உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த கல்யாணி, அடுப்பறைக்குப் போனாள். ·பில்டரில் டிகாக்ஷன் இறங்கி விட்டிருந்தது. மெதுவாக தனது புடவைத் தலைப்பால் ·பில்டரைத்தூக்கி, அடிப்பாத்திரத்தில் இறங்கியிருந்த டிகாக்ஷனை வேறு ஒரு பாத்திரத்தில் கவனமாக மாற்றிவிட்டு, பில்டரை மீண்டும் அதன்மீதே வைத்து மீண்டும் அதில் வென்னீர் வார்த்து வைத்தாள்.  இத்தனை செயல்களையும் பொறுமையாகச் செய்தாள். ஒரு பொட்டு டிகாக்ஷன்கூட கீழே சொட்டவில்லை.

     இப்படித்தான் ஒருமுறை பிறந்த வீட்டில்அம்மா தனக்கு உடல்நிலை முடியாமையால், கல்யாணியை டிகாக்ஷன் போடச் சொன்னாள்.  கல்யாணியும் அம்மா சொல்லிக் கொடுத்தபடிதான் செய்தாள்.  ஆனால் பில்டரிலிருந்து டிகாக்ஷனை மாற்றும் பொழுது பில்டாரின் சூடு தாங்காமல் ·பில்டரை கிழே நழுவ விட்டு விட்டாள்.  அத்தனை டிகாக்ஷனும் கிழே கொட்டி வீணாகியது.

     ``அய்யோ  அய்யோ  பாவி, பாவி, அத்தனை டிகாக்ஷனையும் கிழே கொட்டி விணாக்கிட்டியேடிகாப்பிப்பொடி விக்கற விலை  தரியுமாடி நோக்குஅந்த மனுஷன் மாடா உழைச்சு சம்பாதிச்சுண்டு வரபணம்டீ. நோக்கு எங்கே அதெல்லாம் தெரியப்போறதுபொம்மனாட்டிக்கு கொஞ்சமாவது பொறுமை வேணும்டீ. சூட்டை தாங்கிக்கத் தெரியணும். இல்லேன்னா பில்டர் சுடும்னு தெரிஞ்சு துணியைப் புடிச்சுத் தூக்கணும்.  எப்போ இதெல்லாம் தரிஞ்சுக்கப் போறியோதுக்கிரி..துக்கிரி..”  அம்மா அப்பொழுது திட்டியது மனதிற்கு வேதனையை அளித்தது. ஆனால் அதுதானே அவளது பாலபாடம்.  அது திருமணம் ஆகிய பிறகுதான் புரிந்தது.

     கல்யாணிக்குத் திருமணம் ஆனபிறகு இப்படித்தான் ஒரு முறை கை சூடுதாங்காமல் டிகாக்ஷன் கொட்டிவிட்டது. சப்தம் கேட்டு மாமியார் ஓடிவந்தாள்.  மாமியார் திட்டுவாள் என்று பயந்து நின்ற கல்யாணியை ஒருமுறை பார்த்தவள், அவளை ஜாடையால் அப்பால் போகச்சொல்லிவிட்டு, கீழே குனிந்து முக்கி முனகியபடி கீழே கிடந்த சூடான ·பில்டரை எடுத்து வைத்துவிட்டு, சொட்டிக்கிடந்த டிகாக்ஷனைத் துடைத்தாள்.  அவளது உதடுகள்  முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

     ``எந்த அம்மாக்காரிக்கு தன் பொண்ணுங்கமேலே பொறுப்பு இருக்கு; குழந்தைகளுக்குக் காரியம் சொல்லிக் கொடுத்திருந் தாததானே’  செல்லம்  குடுத்து குடுத்து கெடுத்து வெச்சுடராள்கள்.  இப்போ நம்ம ப்ராணன்தான் அழியறது.  காப்பிப்பொடி விற்கற விலைல இப்படியெல்லாம் வீணாப்போறதே.  நேக்குமட்டும் உடம்புக்கு முடிஞ்சா நானே எல்லாத்தையும் பார்த்துண்டுடுவேன். பாழாய்ப்போன உடம்பு சொன்னபடி கேட்கமாட்டேங்கறதே. இந்தமாதிரி காரியம் பழகிக்காத பச்சைக் குழந்தைகளைக் கல்யாணம் பண்ணிண்டு அவாளுக்கும் சொல்லிக் குடுக்க முடியாமல், நாமும் செய்ய முடியாமல் தவியாய்த் தவிக்க வேண்டியிருக்கே. ஹ்ம்..ஹ்ம் நான் ஏதாவது சொன்னா மாமியார் போர்வையை இழுத்துப் போர்த்திக்கறதா பேர் வெச்சுடுவா.  ஒலகத்துல இருக்கற மாமியார் மாதிரியா இருக்கேன் நான்பாவம் இந்தப் பொண்ணைச்சொல்லி என்ன ப்ரயோஜனம்? எல்லாம், இவளைப் பெத்து வளர்த்த தாயைச்சொல்லணும். கச்சிதமாய் காரியத்தைச் சொல்லிக் குடுத்திருக்க வேண்டாம்? ....”  இப்படியாக பொருமலும், முணகலுமாக அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு நகர்ந்தாள்.
    
     கல்யாணிக்கு, தன்னை செருப்பால் அடித்தது போலத் தோன்றியது. `இது என் அம்மாவோட குத்தமா, இல்லை என்னோட குத்தமா?’ என்று எண்ணியெண்ணிக் குமைவாள்.

     கிரைண்டரில் மாவு அரைக்கவேண்டுமானால் கனமான குழவியை அலம்பித்  தூக்கிப் போட்டு  அறைக்க வேண்டும். இப்பொழுது அந்தச் செயல்களை மிகவும் கவனமாகச் செய்கிறாள். இந்த சமயத்திலும், அவளுக்குத் தனது தாயார் சொன்னதுதான் முதலில் ஞாபகத்துக்கு வருகிறது.

     ``ஏண்டி இந்த மாவு அறைக்கறதுக்குக் கூட நாந்தான் வரணுமாசின்னஞ்சிறிசுகள் நீங்கள் செய்யக் கத்துக்கப் படாதோஎன் கையிலேதான் மோதிரம் போட்டிருக்கோ? எல்லாத்தையும் நாந்தான் செய்யணும்னுஅவளது தாயார் இறைந்துகொண்டே மாவு அறைத்தது இன்றுபோல் இருக்கிறது.

     மாவு அறைத்தாகிவிட்டது. நல்ல பதத்தில் மாவையும் அறைத்து, க்ரைண்டரை ஓடவிட்டே அதை வழித்து எடுத்துப் பாத்திரத்தில் வார்த்தாள். குழவியைத் தூக்கி, அதில் ஒட்டிக் கொண்டிருந்த மாவையும் வழித்தெடுத்தபின், கிரைண்டர் குழியில் கையை விட்டு அதிலிருக்கும் மிகுதி மாவையும் எடுத்தாள். அப்படி செய்யும் பொழுதுசற்றும் எதிர்பாராத விதமாக குழவியைத் தாங்கிப்பிடித்திருந்த கை வழுக்கவே, குழவி பள்ளத்தில் விழும் தருணம் அவள் சட்டென்று தனது கையை இழுத்துக் கொண்டாள், இல்லையென்றால் அவளது கை முழுவதுமாக நசுங்கிப் போயிருக்கும். ஆனால் சுண்டு இரலில் பட்டு காயமானது. அதிலிருந்து ரத்தம் பீரிட்டது.  கல்யாணி வலியால் துடித்துப் போய்விட்டாள். குழவி விழும் சப்தம் கேட்ட அவளது மாமியார் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தாள். கல்யாணியின் கையில் இரத்தம் பீரிடுவதைக் கண்டு பதைத்துப் போனாள்.

     ``என்னடீயிது, இரத்தம் இப்படி கொட்டறதுவலியைப் பொறுத்துண்டு, பல்லைக் கடிச்சுண்டு பொறுத்துண்டிருக்கியே, வாயைத் தொறந்து கத்த மாட்டியோடீ பொண்ணே? பாவம்டீ நீ இந்த மாமியார் உன்னை ரொம்ப வேலை வாங்கறேனோடீ? இப்படி ரத்தம் கொட்டறதேடி... வா இப்படிஎன்றவள், கல்யாணியைக் கைத்தாங் கலாக அழைத்து கூடத்திற்கு வந்து அவளை சோபாவில் அமரவைத்தாள். பிறகு ஓடிச்சென்று டிஞ்சரும் பஞ்சும் கொண்டு வந்து, டிஞ்சரை பஞ்சில் நனைத்து அவளது விரலில் மெதுவாக வைத்தாள்.  அடிபட்ட வலியை விட டிஞ்சரின் எரிச்சல்தான் அதிகமாக இருந்தது கல்யாணிக்கு.  அதைப்பார்க்க மாமியாருக்கு கண்களில் நீர் வந்துவிட்டது.

     ``பாவி நான், சின்னக்குழந்தையை இப்படி துடிதுடிக்க வைச்சுட்டேனே; “  கண்களில் நீர் சோர, ஒரு மெல்லிய துணியால் காயம்பட்ட விரலின்மீது கட்டுப் போட்டாள்.

     கல்யாணிக்குத் தனது மாமியாரைப் பார்க்க பாவமாக யிருந்தது. ``பாவம்மா நீங்க. நேக்கு ஒண்ணுமில்லே, இதுல உங்க தப்பு என்ன இருக்குஇப்படி அடிபடறதெல்லாம் சகஜம்தானே.  நாந்தான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கணும்.  பரிசா அடி படல்லியே, அதுவரைக்கும் சந்தோஷம்தான்.  இதுக்கெல்லாம் போய் நீங்க வருத்தப்படலாமா? இந்த வேலையைக் கூட நான் செய்யாம வேற யார் செய்வாம்மா?” மாமியாருக்கு ஆறுதல் சொன்னாள் மருமகள்.

     ``போடி போடி அசடே, எனக்கு ஆறுதல் சொல்றியாநீ எவ்வளவு நல்ல பொண்ணு!  சமத்தா ஆத்து வேலையையெல்லாம் கவனிச்சுக்கறே; அத்தோட ஆபீசுக்கு வேறே போயிட்டு வரே! நான் எவ்வளவுதான் முணுமுணுத்தாலும் அதையெல்லாம் காதுல போட்டுக்காம உன் வேலையைப் பார்த்துணடிருப்பியே, அந்த நல்ல மனசு யாருக்கு வரும், சொல்லுநான் உன்னை எந்தவிதமான குறையும் சொல்லமாட்டேன்உன் அம்மா நோக்கு காலாகாலத்துல நல்லபடியா வேலைகளையெல்லாம் சொல்லிக் கொடுக்கல்லையே அப்படீங்கற ஆதங்கம்தான்.  ஆனால் நீ கெட்டிக்காரி, எல்லா காரியங்களையும் நீயே தெரிஞ்சுண்டு எவ்வளவு அழகா செய்யறே!  உன்னை நான் நாட்டுப்பொண்ணா அடைய பூர்வ ஜென்மத்துல ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்கணும்.  இப்போ வலி எப்படி இருக்கு?  கொஞ்சம் தேவலாமா?”    மாமியாரின் இத்தகைய பேச்சால் மிகவும் மகிழ்ச்சியுற்ற கல்யாணி, மாமியாரின் கையைப் பிடித்துக்கொண்டு, ```நீங்க இப்படி சொல்றதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாயிருக்கும்மா.  ஆனால் ஒரு திருத்தம், என்னோட அம்மா என்னோட கல்யாணத்துக்கு முன்னாலேயேநான் பருவம் வந்ததிலேர்ந்தே எனக்கு வேலைகளையெல்லாம் கத்துக் கொடுத்திருக்கா. எவ்வளவோ தடவை, `என் கையிலேதான் மோதிரம் போட்டிருக்கா என்ன, நாந்தான் எல்லா காரியங்களும் செய்யணுமான்னு அடிக்கடி கோவிச்சுப்பா.  நாந்தான் அம்மா சொல்றதையெல்லாம் காதுல போட்டுக்காம விளையாட்டுத்தனமா இருந்துட்டேன். அப்படி இருந்தது எவ்வளவு முட்டாள்தனம்னு இப்பதான் பு¡¢யறது. உங்களைப்போல ஒரு நல்ல மாமியார் நேக்கு கிடைச்சிருக்கச்சே, நேக்கு என்ன வேணும் சொல்லுங்கோம்மா.  ஆனால் நாந்தான், அம்மா ஆத்துல விலக்கா இருந்தபோதெல்லாம் சமையல் செய்வேன்.  ஆத்துல எல்லோரும் ரொம்பநன்னா யிருக்குன்னு சொல்லி சப்புக்கொட்டி சாப்பிடுவா.  நான் நன்னா ஆத்துக் காரியங்களையெல்லாம் செய்வேன்.  ஆனால் அம்மா சொல்படி அவ்வளவா கேட்கமாட்டேன்.  இப்போ நான் எல்லா காரியங்களையும் நன்னா செய்யக் கத்துண்டுட்டேன்மா. நான் ஏதாவது தப்பு செஞ்சா, சொல்லிக்கொடுங்கோ நான் டக்குன்னு புரிஞ்சுண்டுடுவேன்.  சரியாம்மா?” என்றாள்.

     அதைக்கேட்ட கல்யாணியின் மாமியார், ``அப்படியா சமத்து,” என்று தன்மருமகளை அன்புடன் கட்டிக்கொண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் உச்சி முகர்ந்தாள்.

                                  **********


                         2. யதார்த்தம்
    
     நளினி, தினமும் காலை வேளைகளில்  பம்பரம்போல தனது இல்லப் பணிகளில் ஈடுபடுவாள். தினமும் இவ்வாறே அதிகாலையில் துயிலெழுந்து, தனது காலைக் கடன்களைக்கூட முடிக்க நேரமில்லாமல், இல்லத்தில் அனைவருக்கும் கா·பிடிபன் போன்றவற்றைச் செய்துகொடுத்து, தனது குழந்தைகளை எழுப்பி, அவர்கள் தேவைகளைப் பூர்த்திசெய்து, பள்ளிக்கு அனுப்பும்வரையில் ஓய்வேயிருக்காது.  பிறகு, தனது கணவன் ராமகிருஷ் ணனையும்  கவனிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கும்.  அவனது தேவைகளைப் பூர்த்திசெய்து, சா¢யாக எட்டு மணிக்கு டைனிங் டேபிளில் ஆஜராகும் அனைவருக்கும், (அவளது மாமனார், மாமியார் உள்பட) காலைச்சிறுண்டியை அளித்துவிட்டு நிமிர்ந்தால், வாயிலில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் ஆட்டோ வந்துநிற்கும்.  குழந்தைகள் சுஜியையும், சுரேஷையும் அதில் பாதுகாப்பாக அமரவைத்து அனுப்பிவிட்டு உள்ளே ஓடிவந்து தானும் இரண்டு இட்லிகளை விண்டு வாயில் போட்டுக்கொண்டாளானால், அதற்குள் வீட்டு வேலைசெய்யும் வேலைக்கா¡¢ வந்துவிடுவாள்.  அவளுக்கு சமைத்த பாத்திரங்களையும், அழுக்குத்துணிகளையும் கொடுத்து அவளையும் கண்காணிக்க வேண்டும்.  அவளும் காலை ஒன்பது மணிக்குத்தான் வருவாள்.  அவளுக்கும் டிபன் காபி கொடுத்தால் கொஞ்சம் சுறுசுறுப்பாக வேலசெய்வாள். அவள், வீட்டைத்துடைத்து, பாத்திரங்கள் விளக்கி, துணிதுவைத்துக் காயவைத்து என்று எல்லா வேலைகளையும் பம்பரம் போல் செய்வாள். ஆனால் அவளது பணிநேரம் இரண்டுமணி நேரம்தான்.  நடுநடுவே  மாமனார் மாமியா¡¢ன் கோ¡¢க்கைகளை நிறைவேற்றவேண்டும்.  பிறகு மதிய சமையலும் செய்யவேண்டும். மதியம் இரண்டு மணிக்கு தனது மாமனாருக்கும் மாமியாருக்கும் பா¢மாறிவிட்டு, தானும் சாப்பிடுவாள்.  அவளது கணவன் மதிய உணவைத் தனது அலுவலகத்திலேயே சாப்பிட்டு விடுவதனால், இரவு உணவு சுடச்சுட வேண்டும். அதுவும் செய்யவேண்டும்.  ஆனால் மாமனார் மாமியாருக்கு இரவு டிபன்தான், அதனால் அவர்களுக்குத் தனியாக ஏதாவது செய்துகொடுக்கவேண்டும். இரவு உணவு குழந்தைகளுக்குக் கொடுத்துத் தூங்கவைக்க வேண்டும்.ஆனாலும் அவளது மாமியார் அவளுக்கு உறுதுணையாக சிறுசிறு உதவிகளைச் செய்துகொடுப்பாள்.  காய்கறிகள் அ¡¢ந்து கொடுப்பது, தேங்காய் துறுவிக் கொடுப்பது, குழந்தைகளுக்கு ட்ரஸ் போட்டுவிடுவது, அவர்களுக்கு உணவு ஊட்டிவிடுவது என்று அவ்வப்போது செய்துகொடுப்பாள்.
    
     மாமனார் மட்டும் எதையும் கண்டுகொள்ளமாட்டார். தனது பணிகளைத் தானே செய்துகொண்டுவிடுவார்.  தனது துணிகளைத் தானே துவைத்து உலர்த்தி மடித்து வைத்துக் கொள்வார். காலையில் எழுந்தவுடன் வாக்கிங் சென்றுவிட்டு வந்து, குளித்துத் தனது பணிகளைச் செய்துகொண்டுவிட்டு, சா¢யாக எட்டு மணியளவில் டைனிங் டேபிள் முன் ஆஜராகிவிடுவார்.  அவரால் நளினிக்கு எந்தவிதமான தொந்திரவும் கிடையாது.  நளினிம்மா, நளினிம்மா என்று பெற்ற தந்தையைப் போல மிகவும் பாசமுடன் நடந்து கொள்வார்

     ராதாகிருஷ்ணனோ, தனது மனைவி நளினியிடம் மிகவும் அன்பாக நடந்துகொள்வான்.  அவளிடம் தன் உயிரையே வைத்திருந்தான். இரவு படுக்கப்போகும்போது மணி ஒன்பது ஆகிவிடும்.  நளினி உள்ளே வருவதற்காகக் காத்திருப்பான்.  அவள் வந்ததும் கொஞ்சலும் பேச்சும்தான்.  அன்று முழுவதும் நடந்தவைகளை இருவரும் பரஸ்பரம் பா¢மாறிக்கொள்ளாமல் தூங்கமாட்டார்கள்.  குழந்தைகள் இருவரும் தங்கள் தாத்தா பாட்டியுடந்தான் தினமும் படுத்துக் கொள்வார்கள். 

     நளினிக்கு, தினமும் பகல்முழுதும் செய்த பணிகளின் சிரமமும் களைப்பும், தனது கணவனைக் கண்டவுடன் அவனது பா¢வு வார்த்தைகளிலும் அன்பிலும் கதிரவனைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும்.  புதுத்தெம்பும் உற்சாகமும் ஏற்பட்டுவிடும்.  அப்படியே தனது கணவனின் மார்பில் உறைந்து உரையாடியபடியே உறங்கிவிடுவாள். இப்படிப்பட்ட வாழ்கை அலுப்பாயிருக்கிறதா, சுகமாயிருக்கிறதா என்றுகூட அவளால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியவில்லை.  கணவன் மாமனார் மாமியார் இவர்களின் பாசமழை இப்படி அவளைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. துன்பத்தில் இன்பம் என்று இதைத்தான் சொல்வார்களோ!?. ஆனால் நளினிக்கு இவையெல்லாம் இன்பமாகவும், கடமையாகவுமே பட்டதே அல்லாமல் ஒருபொழுதும் துன்பமாகத் தோன்றியதேயில்லை.

     அவளுக்கு, மதியம் இரண்டரை மணிமுதல் மாலை நாலரை மணிவரையில்தான் சற்று ஓய்வு கிடைக்கும். அப்பொழுது சிறிது கண்ணயர்வாள்.  இன்றும் அவ்வாறே அவளுக்கு நேரம் கிடைத்தது.  தினமும் சற்று கண்ணயர் பவளுக்கு, இன்று ஏனோ தூக்கம் வரவில்லை.  காரணம் எதேச்சையாக, அவள் பீரோவைத் திறந்தபொழுது, அவளது பழய கைப்பை கண்ணில் படவே, அதை எடுத்துப் பார்த்தவளின் கண்களுக்கு ஒரு காகிதக்கவர் இருப்பது தொ¢ந்தது.  அது ஒன்றும் புதிய கவர் இல்லையென்றாலும், அதை எடுத்துப் பார்த்தவளின் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.  அதை  எடுத்துப் பார்த்தவள் கண்களில் அதிலொரு புகைப்படம் இருப்பது தொ¢யவே, அது அவளைப்பார்த்து சி¡¢ப்பதாக உணர்ந்தாள்.  பதட்டத்துடன் அதை உரையிலேயே வைத்தவள், அந்தக் கவரை அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு, தனது படுக்கையில் வந்து அமர்ந்தாள்.  அவளது கண்கள் பனித்தன.  நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது.  அதனால் அவளது மனம் சற்று பின்னோக்கி ஓடியது.

     சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு, நளினி, ரமேஷ் என்பவனைக் காதலித்தாள்.அவனும் அவளை மனமாறக் காதலித்தான்.இருவரும் சுற்றாத இடமில்லை.ஹோட்டல், பீச், பார்க் என்று சுற்றினார்கள். முதலில் ரமேஷ¤ம், நளினியும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். நாளடைவில் அந்த நட்பு காதலாக மலர்ந்தது.ஒருவரையொருவர் நன்கு பு¡¢ந்து கொண்டதாக உணர்ந்தார்கள்.   இருவர் மனதிலும் ஒரு சிறு பயம் கெளவிக் கொண்டிருந்தது. நளினியின் இல்லத்தார் அவளுக்கு வரன் பார்க்கும் வேளையில், யதேச்சையாக ஒரு ரெஸ்டாரண்டில் இவர்களிருவரையும் நளினியின் இளைய சகோதரன் அவர்களுக்கு தொ¢யாமல் பார்த்து பெற்றோ¡¢டம் சொல்லிவிட்டான்.

     நளினியின் தந்தை மிகவும் பொறுமையுடனும், புன் சி¡¢ப்பு மாறாமலும்தான் அவளிடம் விசா¡¢த்தார் நளினியும் நடந்தவைகளை அவா¢டம் கூறினாள். மனத்தில் பயம் வாட்டியெடுத்தாலும், அவள் அந்த ரமேஷைக் காதலிப்பதாகவும்,அவர்கள் ஓருவரையொருவர் நன்றாக பு¡¢ந்து கொண்டு விட்டதாகவும்,அந்த குடும்பம் நல்ல வசதியான பாரம்பா¢யம் மிக்க குடும்பம் என்றும், அவர் சம்மதித்தால் மட்டும் தான் கல்யாணத்திற்கு சம்மதிப்பதாகவும் தனது தந்தையிடம் அமைதியாகக் கூறினாள். நளினியின் தாயார் சற்று பதட்டமாகவே பேசினாலும் தந்தை நிதானமாகவே இருந்தார். இறுதியில் ரமேஷின் வீட்டு விலாசத்தை வாங்கிக் கொண்டு, அவர்களைப் போய் பார்த்தார். அவர்கள் முதலில் சற்று அதிர்ச்சியடைந்தபோதிலும், தனது மகனைக் கூப்பிட்டு விசா¡¢த்தார். பின்பு அவரும் அவரது மனைவியும் சம்மதித்து,அன்றே பெண் பார்க்க வருவதாக ஒப்புக்கொண்டு,பெண் பார்க்கவும் செய்தனர். .ஜாதகம் பார்க்க வேண்டும் என்று கூறி ஜாதகப் பொருத்தமும் பார்த்தனர். பத்து பொருத்தத்திற்கு ஆறு பொருத்தம் இருந்ததால் மேற்கொண்டு பேச அழைத்தனர்.

     தங்களது பெற்றோர் தனது திருமணத்திற்கு  சம்மதித்து விட்டதைக் குறித்து ரமேஷ¤ம், நளினியும் மகிழ்சிவயப்பட்டனர்.  இரு கும்பத்தாரும் கலந்து பேசினர்.  அதில்தான் மனபேதம் ஏற்பட்டது  முதலில் நளினியின் தந்தை, ரமேஷின் குடும்பத்தைப் பார்த்து சற்று மிரண்டாலும், எல்லாம் சா¢யாகத்தான் நடக்கும் என்ற முடிவில் சம்பந்தம் பேசத்தொடங்கினார்.  ஆரம்பத்திலேயே தனது மகளுக்கு பத்து சவரன் நகைகள்தான் போடமுடியும் என்றும் வரதக்ஷணை ஏதும் கொடுக்க இயலாது என்றும் , திருமணத்தைச் சிறப்பாகச் நடத்திக் கொடுத்து விடுவதாகவும் கூறிவிட்டார்.  ஆனால் ரமேஷின் பெற்றோர் கேட்டது அவரைத் திணறவைத்துவிட்டது.

     ரமேஷின் பெற்றோருக்கு சென்னையில் இரண்டு மூன்று பங்களாக்கள் இருப்பதாகவும்தாங்கள் பொ¢ய  தனவந்தர்கள்    என்றும்,
அதனால் தங்கள் ஒரே வா¡¢சான ரமேஷின் திருமணத்தை வெகு சிறப்பாக நடத்த ஆசைப்படுவதாகவும் கூறியதோடு, தனது மருமகள் அதற்குத் தகுந்த அந்தஸ்த்தோடு அந்த வீட்டில் புகுவதுதான் அவர்களுக்குப் பெருமை அளிக்கும் என்றவர் ஒரு பட்டியலை வாசித்தார்.   அதைக்கேட்ட நளினியின் தந்தைக்கு மயக்கமே வந்து விட்டது. அவர் ரமேஷின் பெற்றோரைப் பா¢தாபமாகப் பார்த்தார்.  தன்னால் நூறு சவரன் நகைகள் போட இயலாது என்றும்  அவர்கள் கேட்கும் மற்ற சீர்வா¢சைகளைச் செய்ய தமக்கு வசதிகள் இல்லையென்றும் மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.  அதற்கு அவர்கள் மசிவதாயில்லை. அதற்குமேல் ஒன்றும் பதில்பேசமுடியாமல் நளினியின் பெற்றோர் தங்கள் இல்லம் ஏகினர்.

     ரமேஷின் பெற்றோர் கேட்ட நகைகளையும், மற்றும் சீதனம், வரதக்ஷணை ஆகியவற்றை அறிவித்ததும், நளினிக்கு ஆத்திரமாக வந்தது.  மறுநாள் அவள் ரமேஷிடம் கேட்க, அவனும் அவளுக்குப் பிடிகொடுக்காமல் பதில்சொன்னான். 

     “இதோபார் நளினி, உங்கள் குடும்பம் இவ்வளவு மோசமான வசதிபடைத்த குடும்பமாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.  எங்களைப்போல அதிகமாக வசதிபடைத்தவர்களாக இல்லாவிட்டாலும், கொஞ்சமாவது வசதியுள்ளவர்களாக இருப்பீர்கள் என்று நம்பினேன்.  எனக்கு உன்னை கல்யாணம் செய்துகொள்ள எந்தவிதமான ஆட்சேபணையும் இல்லை.  நாம் மூணு வருஷமா சின்சியராக் காதலிக்கிறோம்.  அதனால உன் அப்பா அம்மா கொஞ்சம் விட்டுக்கொடுத்து என் அப்பா அம்மா சொல்றபடி செய்யறதுதான் சா¢யாவரும்னு எனக்குத் தோணறது.  அவங்க நம் காதலை ஏத்துண்டதே பொ¢ய விஷயம்.என்றான்.

     “அப்படின்னா, அவங்க கேட்கறது சா¢ன்னுதான் நினைக்கிறீங்களா?”

     “ஆமாம் நளினி. அவங்க கௌரவத்துக்கு ஏத்தாப்போலத்தானே அவங்களால கேட்கமுடியும்எப்படியாவது அவங்க சொல்றபடி செஞ்சு நம்ப கல்யாணத்தை நடத்தி வைக்கிறதுதான் உங்க அப்பா அம்மாவோட கடமை.  நாம் ஏன் இதுக்கெல்லாம் அநாவசியமாகக் கவலைப்படணும்.சர்வசாதரணமாக சி¡¢த்துக்கொண்டே பதில்சொன்னான் ரமேஷ்.

     “என்ன ரமேஷ், நீங்களும் இப்படிப்பேசறீங்கஎங்க நிலைமையைப் பத்தி உங்களுக்குக் கவலை இல்லையா என்ன?”

     ரமேஷ் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, தனது இரு கைகளையும் வி¡¢த்தான்.  பிறகு, “நான் ஏன் டியர் உங்க கும்பத்தைப் பத்தி கவலைப்படணும்அது அவங்க ப்ராப்ளம். அதை அவங்களுக்குள்ளேயே சால்வ் பண்ணிக்கட்டும்.  நாம் ஒண்ணும் கவலைப்பட வேண்டாமே டியர்.என்று சொல்லி அவளது கன்னத்தைத் தட்டப்போனான்.

சட்டென்று அவனது கையைத் தட்டிவிட்டவள், “இப்படி இருப்பீங்கன்னு நான் கொஞ்சம்கூட நினைக்கல்லை ரமேஷ்.  எங்க அப்பா அம்மாவைப்பத்தி உங்களுக்குக் கவலையில்லை. ஆனால் உங்களுக்கு நான்மட்டும் வேணும் இல்லையா ரமேஷ்?” என்றாள் நளினி எ¡¢ச்சலுடன்.

     “எஸ்டியர்இதிலென்ன சந்தேகம் உனக்கு? இட்ஸ் ஆல் தேர் ப்ராப்ளம், ஒய் வி ஷ¤ட் பாதர் அபௌட் இட்

     சீறினாள் நளினி வாட் எ மேன் யுவார்ஈஸ் தட்த மேனா¢ஸம்? ஆர்யூ மேட் ஆர் செல்·பிஷ்?”

     அவன் சி¡¢த்தான். சி¡¢த்தபடியே அவளைத் தொட்டான். அறுவெறுப்புடன் அவனது கையைத் தட்டிவிட்டு விலகினாள்.  அவன் புன்சி¡¢ப்பு மாறாமலே அவளுக்கு பதில்சொன்னான்.

     “எஸ்பேபி, நான் பைத்தியம்தான்.  நான் சுயநலக்காரனேதான்.  அதாவது உன்மேலே பைத்தியம்தான்உன் அழகு, உன் தோற்றம், உன் பொலிவு இவைமேலே பைத்தியம்தான்.  இத்தனை வருஷமா நாம் பழகியும், நான் உன்னைத் தொடவிடாமல் ஒரு டிஸ்டன்ஸை மெயிண்டெய்ன் பண்ணறியே:  அதைப்பார்த்து பைத்தியம்தான்.  உன்னைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கத் தயாராயில்லைங்கற செல்·பிஷ்தனம்தான். எதையும் நான் மறுக்கல்லை.  ஆனால் சீர்செனத்தி விஷயமா என்னோட பெற்றோர்ட்ட என்னால பேசமுடியாது.  இது ஷ்யூர்

     “இது என்னங்க பைத்தியக்காரத்தனமான பேச்சு? எங்க அப்பாவுக்கு, நாங்க குடியிருக்கிற ஒரே ஒரு வீடுதான் சொந்தம்.  அந்த வீட்டுக்கடனும் இன்னும் முழுசா அடைபடல்லை.  மேலும் அப்பாவோட சம்பாத்தியத்துல ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே கடன்வாங்க முடியாது.  என்னோட

     தம்பிகளும் இன்னும் படிச்சு முடிக்கல்லை.  வேற எந்த விதமான வருமானமும் என் சம்பளத்தைத் தவிற ஏதும் கிடையாது.  என் சம்பளத்துல சேர்த்து வெச்சதைத்தான் என் கல்யாணத்துக்கு செலவு செஞ்சுக்கணும்.  தவிர, என் கல்யாணத்துக்கப்புறம் என் சம்பளமும் அவர்களுக்குக் கிடைக்காது.  நீங்க இதையெல்லாம் யோசிக்கணும்?” என்றாள் படபடப்புடன்.

     அவன் ஆவேசமாகத் தனது கையை ஆட்டிப் பேசினான்.  நோ..நோ..நோ..நோ.., ஒய் ஐ ஷ¤ட் கன்ஸிடர் ஆல்தீஸ் நான்சென்ஸ்உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்னா, என்னால இப்படியெல்லாம்
கீழிறங்கி வரமுடியாது.  என் அப்பா அம்மா சொல்றபடி செய்யறதுன்னா, ஊர் அறிய நம் கல்யாணம் நடக்கும்.  இல்லைன்னா கோயில்லதான் நடக்கும்.  ஆனால் என் பெற்றோர் சம்மதத்தோட நடக்கிற கல்யாணம்தான் ¡¢யல். நீ ரெண்டாம்பக்ஷமாத்தான் வாழ்ந்தாகணும். ஆனால் என்னால இந்த ஜென்மத்துல உன்னை மறக்கமுடியாது”      இதைக் கேட்டவளின் மனம் துணுக்குற்றது.  முகத்தில் கோபம் கொப்பளித்தது.  கண்களில் கண்ணீர் வெள்ளமென பாய்ந்தது. உடல் நடுங்கியது.  அப்பொழுது அவள் காளி அவதாரம் எடுத்ததுபோல் இருந்தாள்.

     “சீ..சீ..நீங்க ஒரு மனுஷனாஇத்தனை நாளா இப்படியொரு வக்கிரம் உங்களுக்குள்ளே இருக்கிறதை நான் கவனிக்கவே இல்லையே.  நான் ஒரு ஏமாளி. பைத்தியக்கா¡¢. உங்களைப்போய் நம்பி உத்தமர்ன்னு எண்ணி காதலிச்சேனே: போதும்டா சாமி: உங்க சங்காத்தமே வேண்டாம்   இனிமே நீங்க உங்க பெற்றோர் சொல்ற பணக்காரப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிண்டு ஹேப்பியா இருங்கஎன்று சீறியவள், விருட்டென்று திரும்பி நடக்கவாரம்பித்தாள் கண்ணீர்மல்க.  அவன் தாவி அவளது கையைப் பிடித்தான்.  அவன் கண்களிலும் நீர் நிறம்பி இருந்ததை அப்போதுதான் அவள் கவனித்தாள்.

     “மைடியர் நளினி, யதார்த்தத்தைப் புரிஞ்சுக்கோ.  நான் செல்வச் செழிப்பிலேயே பிறந்து, வளர்ந்து, அதுலேயே வாழ்ந்துண்டிருக்கேன்.  நான் சம்பாதிக்கிறது என்னோட பாக்கெட் மனிதான்.  இதுலேர்ந்து என்னால வெளியிலே வந்து கஷ்டப்படமுடியாது.  என் அப்பாவோட சொத்தே மூணு தலைமுறைக்கு வரும்.  நான் அவரோட கௌரவத்தையும் பார்க்கணும்.  வேற வழியே இல்லை.  சத்தியமா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.  நம்மோட காதலுக்காக, ஆசைக்காக. நாம தனியா வாழலாம். உன்னைத் தனியா வெச்சு ராஜாத்தியாட்டமா வாழவைக்கிறேன் என்ன?” என்றான்.

     “சை..என்று அவனது பிடியை உதறியவள், “ தூ..தூ..நீயெல்லாம் ஒரு மனுஷன். நான் போய் உன்னை, உன்னை. சீ”  என்று    காரிஉமிழ்ந்தவள், கண்ணீர் கன்னத்தில் வழிய ஓடினாள் அந்தப்பாவை. ரமேஷின் கண்களும் குளமாயின.  இத்தனை நேரமும் பல்லைக் கடித்துக்கொண்டு தனது உணர்ச்சிகளை அடக்கியபடி பேசிக்கொண்டிருந்த ரமேஷ் தன் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி அழுதான்.  அவன் அழுதான் என்பதற்கு அடையாளமாக அவனது உடல் குலுங்கியது.

     “நளினி என்னை மன்னிச்சுடு. நான் என் உயி¡¢னும் மேலாக உன்னைக் காதலிக்கிறேன்.  ஆனால் என்னால் என்னோட பெற்றோரோட சொல்லைத் தட்ட இயலாது. ஸா¡¢ நளினி, வொ¢ வொ¢ ஸா¡¢.  என்னை மன்னிச்சுடு. நல்ல மாப்பிள்ளையாப் பார்த்து, நீ கல்யாணம் பண்ணிண்டு சௌக்யமாய் சந்தோஷமாய் வாழ்என்று அவனது உதடுகள் முணுமுணுத்தன.

     நாட்கள் ஓடின, நளினியின் பெற்றோர் மறுபடியும் அவளுக்கு வரன் தேட முனைந்தனர்.  தொ¢ந்த நண்பர் மூலமாக ஒரு வரன் வந்தது.  ஜாதகமும் சற்றேறக்குறைய ஏழு பொருத்தங்கள் கூடியிருந்தன.  பெண் பார்க்கும் படலமும் வந்தது. இரு வீட்டாரும் பேசி திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.  மாப்பிள்ளை ராமகிருஷ்ணனுக்கும் நளினியை மிகவும் பிடித்துவிட்டது. அந்த சமயத்தில் நளினி தனது தந்தையின் காதில் மெள்ள முணுமுணுத்தாள். இந்த மாப்பிள்ளையுடன் சற்று தனியாகப் பேசவேண்டுமென்று.  அவளது தந்தைக்கும் அது சரியென்றே படவும், இருவரும் தனித்துப் பேச ஏற்பாடுசெய்தார்.

     தனியே பேசவந்த ராமகிருஷ்ணனிடம் நளினிதான் ரமேஷைக் காதலித்த விவரங்களையும், அதன்பிறகு நடந்த அனைத்து விஷயங்களையும் விவரமாக கண்ணீருக்கிடையே சொல்லிமுடித்தாள்.  பொறுமையாக நளினி கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன், “சா¢, இதுதான் விஷயமாஏதோ பொ¢ய விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டயாக்கும்னு நினைச்சேன்”  என்றான் நிதானமாக.

     “ஏங்க, நான் காதலிச்சதும், கல்யாணப்பேச்சுவரை வந்து கல்யாணம் நின்னு போனதும் பெரிய விஷயமில்லையா என்ன?” என்றாள் தலையைக் குனிந்தபடியே.

     “இல்லை நளினி, நிச்சயமா இல்லை.  ஒரு ஆணோ பெண்ணோ கல்யாணத்துக்கு முன்னால் காதலிக்கிறது குற்றமே இல்லை.  தப்பா நடந்துக்காம இருந்திருக்கணும், அதுவு மில்லாமல், தான் காதலித்ததை மறைக்காமல், ஒளிவுமறைவில்லாமல் சொல்லறது இருக்கே அதுதான் பொ¢ய விஷயம்.  நீ பேசும்போது உன்கண்களில் தொ¢ந்த ஏமாற்றமும், அவமான உணர்வும் உன்னை எவ்வளவு பாதிச்சுடுத்து என்பதை என்னால் பு¡¢ஞ்சுக்க முடிஞ்சுது.  மேலும் நீ அவரை உண்மையாகக் காதலிச்சே என்பதும் என்னால் நன்கு உணரமுடிந்தது.  அப்படி இருந்தும் அந்தக் காதலை மறந்து என்னை மனப்பூர்வமாகக் கல்யாணம் பண்ணிக்க முன்வந்து என்னிடம் எதுவும் மறைக்கக் கூடாதுன்னு நினைச்சியே இதெல்லாம் பொ¢ய விஷயமில்லையாஇப்போ என்னை நீ கல்யாணம் பண்ணிக்கறதிலே ஒண்ணும் ஆட்சேபணை இல்லையே?”

     “அப்போ என்மேலே உங்களுக்கு சந்தேகமோ, கோபமோ இல்லையா?”

     “இல்லை நளினி, நிச்சயமாக இல்லை.  நீ பழசையெல்லாம் மறந்துட்டு என்னைக் கல்யாணம் பண்ணிண்டால், நான் உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்வேன். இன்னொன்றும் சொல்றேன், நீ எந்தவிதமான நகைநட்டுக்களும் தேவைக்குமேல் கொண்டு வரவேண்டாம்.  சீர் செனத்தி வரதக்ஷணைன்னு  எதுவும் தேவையில்லை. சிரித்த முகத்துடனும், மனம்நிறைய சந்தோஷத்துடனும் நீ என்னுடன் வந்தால் போதும். என் பெற்றோரும் எதுவும் கேட்கமாட்டார்கள் சரியா?” என்றவன் அவளைப் பார்த்து சிரித்தான்.

     இருவரும் மீண்டும் அனைவரும் குழுமியிருந்த இடத்திற்கு வந்து அமர்ந்தனர்.  பிறகு சம்பந்திகள் பரஸ்பரம் பேசி நல்லபடியாக கல்யாணமும் நடந்தேறியது.

     நளினிக்குக் கல்யாணமாகி, பத்து வருடங்கள் ஆகியும், நேற்றுதான் நடந்ததுபோல இருந்தது.  சாதாரண சீர்செனத்திகளோடு புக்கஹம் வந்தவள், மிகுந்த சந்தோஷத்துடனே தன் கணவன், மாமனார், மாமியார் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரமேஷின் புகைப்படத்தைப் பார்த்தவுடன், கடந்தகால நினைவுகள் வந்து அதில் அவள் மூழ்கும்நிலை ஏற்பட்டது. ரமேஷை மணந்துகொண்டிருந்தால், மிகுந்த செல்வச்செழிப்பில் திளைத்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்.  ஆனால் அவளது தந்தை தன் சொந்த வீட்டையும் விற்று, அவளுக்கும் கல்யாணம் செய்வித்து, தான், சொல்லொணாத் துன்பத்தில் வாடிக்கொண்டிருந்திருப்பார். அவளது தம்பிகளும் சா¢யாக படிக்கமுடிந்திருக்காது.  அவர்களது எதிர்காலமே பாழாகிப் போயிருக்கும்.  ஆனால் அவள் ராமகிருஷணனை மணமுடித்தாள், அவளது குடும்பத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.  நளினியும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்த நினைப்பே அவளுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. 

     இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன  அன்று ஞாயிற்றுக்கிழமை.  காய்கறிகள் வாங்கி வரலாம் என்று நளினி மார்க்கெட்டுக்குச் சென்றாள்.  காய்கனிகள் வாங்கவேண்டியவைகளை வாங்கிக்கொண்டு, தனது ஸ்கூட்டியில் அவைகளை வைத்துவிட்டுத் திரும்பியவள், அவளது ஸ்கூட்டி நிறுத்தி வைத்திருந்த இடத்திற்கு சற்று முன்னால் ஒரு இண்டிகா கார் நிறுத்தப்பட்டிருந்ததும், அதன் கதவைத்திறந்த ஒரு நபர், கா¡¢ன் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தன்னையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருப்பதையும் கவனித்த நளினி, அந்த நபரை தான் எங்கோ பார்த்திருப்பது போலவும், தான் அவருடன் மிகவும் நெருங்கிப் பழகியது போலவும் உணரவே, அவரை சற்று உற்று நோக்கினாள். அந்த நபரும் அவளைப் பார்த்து புன்னகைத்து, தனது கா¡¢ன் கதவைச் சாத்திவிட்டு அவளை நோக்கி வந்தார். அவர் அவளை நெருங்கி வந்தபின்னர்தான் அந்த நபர் தனது பாழய காதலன் ரமேஷ் என்பது அவளுக்கு விளங்கியது. சட்டென்று அடையாளம் பு¡¢யாத அளவிற்கு ரமேஷின் உருவம் மாறியிருந்தது. தலையில் வழுக்கை விழுந்து முடியெல்லாம் நரைத்து, உடலில் சற்று பருமன் தூக்க, நல்ல களையான முகம் சுறுங்கி அதுதான் ரமேஷ் என்று அடையாளம் கண்டுபிடிப்பதே சற்று சிரமமாகத்தான் இருந்தது அவளுக்கு.

     “என்ன நளினி சௌக்யமா இருக்கியா? உங்கப்பா, அம்மா, தம்பிகள், கணவர் எல்லோரும் சௌக்யமா இருக்காங்களாஎன்று கேட்டபடி ரமேஷ் அவளருகில் வந்தான்.

     “அட., ரமேஷா! என்னங்க இப்படி ஆகிட்டீங்கஆள் அடையாளமே தெரியல்லியேஎன்றாள் நளினி ஆச்சர்யத்துடன்.  அவன் சிரித்தான்.  அந்த சிரிப்பில் வேதனை கலந்திருந்தது நன்கு தெரிந்தது.

     “ஏன் ரமேஷ சிரிக்கிறீங்கநல்ல வசதியான கோடீஸ்வரர் நீங்க!  உங்க மனைவியும் உங்க அந்தஸ்த்துக்கேத்த கோடீஸ்வர இடத்திலிருந்து வந்திருப்பாங்க. நிச்சயமா நீங்க ரொம்ப சந்தோஷமாத்தான் குடும்பம் நடத்திக்கொண்டிருந்திருக்கணும். சா¢தானே ரமேஷ்?” என்றாள் நளினி.

     “ஹ்ம்..ம்..ம்..ஆ..ஆஆஆமாம் இருக்கேன்.  நீ எப்படி இருக்கே நளினிஉன்னைப் பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கிறதாத்தான் தெரியறது.

     “ஆமாம் ரமேஷ், ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கேன். ரொம்ப, ரொம்ப ரொம்ப. உங்களை மாதிரி இல்லை என் கணவர். ரொம்ப நல்லவர். உள்ளொன்று வைத்து மேலே அன்பா இருக்கறமாதி¡¢யெல்லாம் அவருக்குப் பழகத்தொ¢யாது.  ஆனால், நான்தான் ரொம்ப மோசம்.  கல்யாணம் ஆனதுக்கப்புறம் உங்களை மறக்கமுடியாமல் எப்படித் தவிச்சேன் தெரியுமா? உங்க நினைப்பை மறக்க ரொம்ப நாளாச்சு.  அந்த நினைப்பை மறக்கடிச்சதே என் கணவரோட அன்பும் பாசமும்தான்.  அவர் ரொம்ப நல்லவர். பணத்தாசை பிடிச்சவர் இல்லை. என் மாமனாரும்  மாமியாரும்கூட ரொம்ப ரொம்ப நல்லவங்க. என்மேலே ரொம்ப ஆசையும் அன்புமா பாசத்தோட இருக்காங்க.  சீர் செனத்தி ஒண்ணுமே கேட்கல்லே.  எங்கப்பாவாலே என்ன செய்யமுடியுமோ அவ்வளவுதான் செஞ்சார்.  அதை அவர்கள் சந்தோஷமா ஒத்துண்டாங்க. ஏத்துண்டாங்க.  என் கணவர் என் தம்பிகள் படிப்புக்குக் கூட உதவியெல்லாம் செஞ்சார்.  எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்திருக்கார்.  இப்போதான் புதுசா ஒரு கார் வாங்கியிருக்கார். இப்போ நாங்க இருக்கறதும் சொந்த வீட்லதான்.  எல்லாமே கடன்வாங்கி, அடைச்சு சந்தோஷமாத்தான் இருக்கோம்.”  படபடவென்று பேசினாள் நளினி மடைதிறந்த வெள்ளம்போல.

     ரமேஷின் முகத்தில் ஈயாடவில்லை.  அவன் தலைகுனிந்தபடியே அவள் பேசுவதையே கேட்டுக்கொண்டிருந்தான்.

     “என்ன ரமேஷ்நான் பேசிண்டே இருக்கேன், நீங்க தலைகுனிஞ்சுண்டே இருக்கீங்க.என்று அவனை மறுபடியும் சீண்டினாள் நளினி.  அவன் தனது தலையைத் தூக்கி அவளைப் பா¢தாபமாகப் பார்த்தான். அவனது கண்களில் நீர் வழிந்துகொண்டிருந்தது.

     “நளினி, நான் உன்னைக் காதலிச்சது உண்மை.  இன்னிவரைக்கும் உன்னை மறக்க முடியாமல் தவிப்பதும் உண்மை.  ஆனால் நான் வாழ்கையிலே சந்தோஷமா இல்லைங்கறதும் உண்மை.   என் மனைவி நிறைய நகைகளோடும், சீர்செனத்தியோடும் வந்தவள்தான்.  அவளது பெற்றோர் குடும்பத்திலும் சா¢, எங்கள் குடும்பத்திலும் சரி செல்வத்திற்கோ, வசதிக்கோ எந்தவிதக் குறைச்சலுமில்லை.  ஆனால் எனக்குமட்டும் சந்தோஷமே இல்லை.

     “நீங்க அப்படிப்பட்ட செல்வச்செழிப்பைத்தானே எதிர்பார்த்தீங்கஅதுலதானே சந்தோஷம் இருக்கிறதாச் சொன்னீங்க; அதனாலதானே என்னை போனாப்போறதுன்னு வைப்பா வைச்சுக்கறதாவும் சொன்னீங்களே ஞாபகம் இருக்கா. இப்போவந்து, எல்லா வசதிகளிருந்தும் ஆசைப்பட்டமாதிரி மனைவி அமைஞ்சும் சந்தோஷம் இல்லைங்கறீங்களே?! இது என்ன நியாயம் ரமேஷ்?” ரமேஷ் சிறிதுநேரம் பதிலேதும் சொல்லாமல் நளினியின் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் பிறகு வருத்தம் தோய்ந்த குரலில் அவளுக்குப் பதில் சொன்னான்.

     “நளினி, என்னை மன்னிச்சுடு.  நான் உன்னை உயிருக்குயிராய் காதலிச்சதோ, இன்னிவரையிலும் உன்னை மறக்கமுடியாமல் தவிச்சுண்டு இருக்கறதோ சத்தியம். அன்னிக்கு அப்படியெல்லாம் உன்னிடம் பேசியதெல்லாம் உண்மையில்லை, எல்லாமே பொய்தான். என் மனச்சாட்சிக்கு மாறாகத்தான் நான் அப்படி பேசநேர்ந்தது.  நான் பொறந்ததிலேர்ந்து செல்வச்செழிப்பிலேயே வளர்ந்தேன். நல்ல வேலை பார்த்தாலும், அந்த வருமானம் நாம் குடும்பம் நடத்தப் போறாதுன்னு நன்னாப் புரிஞ்சுண்டேன்.  இருந்தாலும் என் அப்பாகிட்டே எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். அவர் பிடிவாதமாகவே இருந்தார். அவருக்கு வரும் மருமகளின் குணம் நடவடிக்கையெல்லாத்தையும் விட செல்வமும் அந்தஸ்த்தும்தான் ரொம்ப முக்கியமாகப் பட்டது.. என் விருப்பம்போல உன்னைக் கல்யாணம் பண்ணிண்டா அவரோட சொத்தோ, ஆதரவோ துளிக்கூடக் கிடைக்காதுன்னு கண்டிப்பா சொல்லிட்டார்.  நான் எவ்வளவோ பிடிவாதம் பிடிச்சும் எதுவும் என் இஷ்டம்போல நடக்கல்லை.  அதனாலதான் நீயாவது உன் பெற்றோர் சொல்றபடி கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா வாழட்டுமேன்னுதான், என் மனசைக் கல்லாக்கிண்டு அன்னிக்கு அப்படியெல்லாம் பேசினேன்.  இப்போ நான் நினைச்சபடி நீ சந்தோஷமா வாழ்ந்துண்டிருக்கே.அவன் மிகவும் உறுக்கமாகப் பேசினான். 

     நளினிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அவனைப் பார்த்தாள். அவள் பார்வையில் பா¢தாபமோ, ஏமாற்றமோ, கோபமோ தொ¢யவில்லை. ரமேஷ்தான் பேசினான்.

     “நளினி, நீ என்னை அப்படிப் பார்க்காதே; நான்தான் தப்பு பண்ணிட்டேன்.  ஏன்னா, என் மனசுலே உறுதியில்லை. தன்னம்பிக்கையில்லை.  என்னோட அப்பா சொத்துக்கள்தான் பெரிசாத் தெரிஞ்சது.  ஆனால் எனக்குக் கிடைச்ச மனைவி, உன்னைப் போல அன்பா, ஆசையாஆதரவா, அடக்கமானவளாயில்லை.  பணக்காரத்திமிர் அதிகம் உள்ளவள்.  நான் தான் அவளை அனுசரிச்சுண்டு போகணும். என் அப்பா அவளுக்கு அதிகம் செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சிருக்கார்.  என் வாழ்கைல சந்தோஷமே இல்லை. சந்தோஷமா இருக்கறதுபோல வேஷம் போட்டிண்டிருக்கேன்.

     “ஆனால் நளினிஇதுதான் யதார்த்தம். ஒருத்தனையோ, ஒருத்தியையோ கண்டவுடன் ஏதோ ஒண்ணாலே மனசு கவரப்பட்டு காதலாய் மாறிடும்.. அப்போ பணம், காசு, அந்தஸ்த்து, குலம், கோத்திரம் ஒண்ணுமே புரியாது.  அது ஒரு பைத்தியம் போலவே ஆட்சி செய்யும். ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரியமாட்டோம்னு சத்தியமெல்லாம் பண்ண வைக்கும்.  ஆனால் நிச்சயமா யதார்த்தம்னு ஒண்ணு இருக்கு.  அதைப் பார்க்காம அலட்சியம் பண்ணிட்டு, நம்ம மனசுதான் பெரிசு, காதல்தான் பெரிசுன்னு நினைச்சு நம்ம இஷ்டம்போல நடந்துண்டோம்னா,சாதாரண வாழ்கைகூட வாழமுடியாது.  குடும்ப அமைப்பே கெட்டுப்போகும். சொந்தங்கள் நிலைக்காது.  அதுக்காக காதலே வேண்டாம்னு சொல்ல வரல்லை.  காதலுக்குக் கண்ணில்லைன்னு சொல்றதெல்லாம் சுத்தப்பேத்தல். காதலுக்குக் கண் இருக்கோ இல்லையோ, காதலிக்கறவாளுக்கு, கண்,காது, மூக்கு எல்லாம் இருக்கு. சட்டுன்னு ஒரு உடனடி உணர்ச்சிக்கு ஆட்படாமல் சற்று யோசிச்சுப் பார்த்து,எல்லாத்தையும் அலசிப்பார்த்து, அணுகிப்பார்த்து காதலிக்கறதுதான் நல்லது.  அப்படியெல்லாம் முடியாதுன்னு சொல்லலாம்.  ஆனால் அப்படி செய்யறதுதான் சரி.

     “கல்யாணம்னு வரும்போது ஜாதி, அந்தஸ்த்து, குலம்,கோத்திரம் எல்லாம் எதிரில் வந்து நிற்கும், கூத்தாடும்.  அப்போதான் நாம் விழிச்சுக்கறோம்.  சேரவும் முடியாமல், விலகவும் முடியாமல் தவிக்கிறோம்.  துணிஞ்சு போராடலாம்கிற ¨தைரியமும் வரதில்லை. அப்படித் துணிஞ்சு செயல்பட்டாலும் அதற்கு சரியான மரியாதையும் கிடைக்கிறதில்லை. முன்னாடியே நாம் கொஞ்சம் விழிப்போட இருந்து, முன்கூட்டியே எல்லாத்தையும் அனுசரிச்சுஆராஞ்சு காதலிக்க ஆரம்பிச்சிருந்தா பின்னாலே ஏமாத்தமும் வருத்தமும் வர சாத்தியமே இல்லை. 

     “எப்படியும் பிடிவாதமா நான் உன்னைக் கல்யாணம் பண்ணிண்டிருந்தால் என் அப்பா அம்மா உன்னை ஏத்துண்டிருக்க மாட்டா.  எப்போ பார்த்தாலும் டார்ச்சர்தான். குத்திப் பேசுவது, இழிவாப்பேசறதுன்னு பேசிப்பேசியே நம்மைக் கொன்னுடுவாங்க. அவங்க சங்காத்தமே வேண்டாம்னு நாம் தனியாப் போனாலோ,என்னாலே என் வருமானத்துல குடும்பம் நடத்தத் தெரியாது.  பணக்காரத்தோதுலேயே நான் சின்ன வயசிலேர்ந்து வளர்ந்ததினாலே சிக்கனமாவோ, படாடோபமில்லாமல் வருகிற வருமானத்தில குடும்பம் நடத்தற யோக்கியதையும் எனக்கில்லைங்கறதும் எனக்கு நன்னாவே தெரியும்.  இதெல்லாத்தையும் நான் நன்னா யோசிச்சு முடிவுபண்ணித்தான், அன்னிக்கு அப்படி உன்கிட்டே நான் என் மனசைக் கல்லாக்கிண்டு பேசினேன்.  அப்போவே எனக்கு நன்னாத்தெரியும், உன்வசதிப்படி நீ கல்யாணம் பண்ணிண்டா சந்தோஷமா இருப்பே; ஆனால் எனக்கு எந்தவிதமான சந்தோஷமும் கிடைக்காதுன்னு. அதனாலதான் அன்னிக்கு நான் அப்படிச் செஞ்சேன். உன்னையும் தப்பாப் பேசினேன். அப்போதான் நீ என்னை மறந்து வேற நல்லவனா உன் அப்பா சொல்படி கல்யாணம் பண்ணிப்பேன்னு பேசினேன்.  என்னை மன்னிச்சுடு நளினி.  என்னிக்காவது நான் உன்னைப் பார்ப்பேன், என் மனசுல இருக்கிறதைக் கொட்டுவேன்னு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துண்டு இருந்தேன். இன்னிக்கு என் மனசைத் திறந்துட்டேன். என்னை மன்னிச்சுடு நளினி. அன்னிக்கு உன் மனசை ரொம்ப நான் நோகடிச்சுட்டேன். அதுக்குத்தான் இந்த மன்னிப்பு.

     “எதையும் ஏத்துண்டு எதிர் நீச்சல் அடிச்சு வாழ்க்கைல முன்னுக்கு வர துடிக்கிறவன்தான் காதலிக்கணும், இல்லைன்னா யதார்த்தமா விட்டுக் கொடுத்து மத்தவாளை வாழ வைக்கணும் இது தான் காதல் ஒருத்தர் மேல் ஒருத்தர் வச்சிருக்கிற அன்பு, மா¢யாதை பாசம் எக்ஸட்ரா, எக்ஸட்ரா.பேசி நிறுத்தினான் ரமேஷ்.

     நளினியின் கண்களிலே நீர் வழிந்தது. ``ஐயாம் ஸாரி ரமேஷ் உங்களைத் தப்பா புரிஞ்சுண்டேன். இப்போ எல்லாமே நன்னா புரிஞ்சுடுத்து காதல்,கீதல்ன்னு இன்·பார்சுவேஷனால பழகறது பைத்தியக்காரத்தனம்கிறது இப்போ நன்னா புரிஞ்சு போச்சு. ஆனால் இதெல்லாம் இப்போ புரிஞ்சு என்ன பிரயோஜனம் உங்க வாழ்க்கை முறை வேற, என் வாழ்க்கை முறை வேற. காதலிக்கறவங்க ஒவ்வொருவரும் சரியா, அலசி ஆராய்ஞ்சு தன் காதலை தங்கள் பெற்றோ¡¢டம் சொல்லி யதார்த்தமா யோசிச்சுக் காதலிச்சா வாழ்க்கை பிரகாசமா இருக்கும்கிறது மிகவும் நிதர்சனமான உண்மை ரமேஷ். நான் நாம் பழகிய காலங்களை மறக்கமுடியாவிட்டாலும் சந்தோஷமாக வாழறேன். நீங்களும் உங்க மனைவியை அனுசரிச்சு சந்தோஷமா வாழணும். யதார்த்தத்தை உணர்ந்திட்டீங்க, இனிமே மனசுல குற்ற உணர்ச்சி இல்லாம இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமா வாழ முயற்சி பண்ணுங்க   எல்லோருக்கும், எல்லாமே எப்பவுமே அவங்கவங்க நினைக்கிறபடி கிடைக்காதுங்கறதைப் புரிஞ்சுக்கணும். கிடைச்சதை வெச்சுண்டு சந்தோஷமா வாழ பழகிக்கணும். வாழ்கைங்கறது சந்தோஷமா வாழறதுக்குத்தானே தவிர, தினம் தினம் கடந்ததை நினைத்து வருத்தப்பட்டுண்டு மனம் புழுங்கிண்டே வாழறதுக்கு இல்லை/ங்கறதை புரிஞ்சுக்கணும்.  இதுதான் ரமேஷ் யதார்த்தம். நாழியாயிடுத்து நான் வர்றேன்.  என் மாமனார் மாமியாருக்குக் காபி போட்டுக் கொடுக்கணும், நான் வர்றேன். பை..பை..என்று சொல்லியபடி தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அதில் ஏறி பறந்தாள். அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற ரமேஷின் உதடும் நளினி ரொம்ப நல்லவள், அவளாவது யதார்த்தத்தைப் புரிஞ்சுண்டு நன்னா வாழட்டும்.என்று முணுமுணுத்தன.
              
                            
                             ************



           3.  தன் சினம் தன்னைச் சுடும்
    
     நாராயணன் தனது வீட்டின் மொட்டை மாடியில் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி, கால்களை எதி¡¢ல் உள்ள இருக்கையின்மேல் நீட்டியவாறு அண்ணார்ந்து பார்த்தபடி வானத்து நட்சத்திரங்களையே உன்னிப்பாகப் பார்த்தபடி சாய்ந்து படுத்திருந்தார்.  அவர் அமர்ந்திருந்த நிலையிலிருந்து, அவரது எண்ணங்கள் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன என்பது புலனாயிற்று.  ஆயினும் அதைக்கூட அவரால் நிம்மதியாக அசைபோட முடியாமல் அவரது சகதர்மிணியின் குரல் தடுத்தாட்க்கொண்ட்து.

     “ஏன்னா, எங்கே இருக்கேள்? உஙகளை எங்கேயெல்லாம் தேடறது? சும்மா ஒரு இடத்துல இருக்க மாட்டேளேஏதாவது செஞ்சுண்டோ, ஏதாவது யோசனை பண்ணிண்டோ இருப்பேளே. பதில் சொல்லுங்கோன்னாஎங்கேயிருக்கேள்? நான் என்ன சின்னப் பொண்ணா, நீங்க இருக்கிற இடத்தைத் தேடிண்டு ஓடிவறத்துக்கு? நீங்க எங்கே இருக்கறதாச் சொன்னாத்தானே நேக்குத் தெரியும்.”  என்ற் ஜானு என்னும் ஜானகிய்ன் குரல் கேட்க,

     “ஏண்டி ஜானு புலம்பறே? நான் இங்கேதானேடி மொட்டைமாடியிலே இருக்கேன்.உரக்க ஆனால் சற்று அமைதியாகப் பதிலிறுத்தார் நாராயணன்.  அதற்குள் அந்த அம்மையாரே முக்கி முனகியபடி மாடிப் படியில் ஏறமுடியாமல் ஏறி, கையில் இரண்டு காபிக் கோப்பைகளுடன் அங்கே வந்துவிட்டாள்.

     “ஏன்னா, நான்பாட்டுக்குக் கத்திக் கூப்டுண்டே இருக்கேன், நீங்க இங்கே இருக்கிறதா ஒரு குரல் கொடுக்கப்படாதோஉங்களை எங்கேயெல்லாம் தேடறதுதேடித்தேடி காலெல்லாம் ஒஞ்சு போச்சுன்னா.என்றபடி கையில் கொண்டுவந்திருந்த காபிக்கோப்பைகளை அவர் எதிரில் இருந்த ஒரு மேடையின்மீது வைத்தாள் ஜானகி அம்மாள்.  பிறகு அவளும் ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

     “ஏண்டி ஜானு, நோக்கும் சேர்த்து காபியை இங்கேயே கொண்டுவந்துட்டயா? மாடிப்படி ஏறமுடியாமல், முக்கிமுனகிண்டு உன்னோட காபியையும் ஏண்டி சுமந்துண்டு வரணும்? உன் காபியை கீழேயே குடிச்சுட்டு என் காபியைமட்டும் இங்கே எடுத்துண்டு வந்திருக்கலாமேடீ.  பாரு, நோக்கு எப்படி இறைக்கிறது?”  என்றார் மிகவும் இரக்கத்துடன் நாராயணன்.

     “நீஙக இங்கே இருக்கறதா ஒரு குரல் கொடுக்கப்படாதோன்னா? நான் பாட்டுக்குக் கூப்டுண்டே இருக்கேன்.ஜானகி அம்மாளுக்கு மூச்சு வாங்குவது இன்னும் நிற்கவில்லை.

     “இதையே எத்தனைதரம்டீ கேட்டுண்டே இருப்பே? நானும் இரண்டு மூணு தடவை குரல் குடுத்துட்டேண்டி, உன் காதுலதான் நான் சொல்றது கேட்கல்லை. என்னை என்னடி பண்ணச் சொல்றே? இப்போ என்னோட குரல் அப்படி ஆயிடுத்து.

     ``அப்படியான்னா? வயசாயிடுத்தோன்னோ, முன்னமாதிரி காது சரியா கேட்க மாட்டேன்னு மக்கர் பண்ணறது.  பாவம்னா, உஙகளாலேயும் பெரிசா குரல்குடுக்க முடியாதோல்யோதொண்டேலதான் ஆபரேஷன் பண்ணியிருக்கே. பெரிசா குரல் எழும்பாதுதான். அது சட்டுன்னு நேக்கு ஞாபகத்துக்கு வரல்லை.  என்னை மன்னிச்சுடுங்கோன்னாஜானகி அம்மாளின் கண்களில் நீர் தளும்பியது.

     “போடி அசடே, இதுக்கெல்லாமா கண் கலங்கறது? நீ உன் காபியைக் கீழேயே குடிச்சிருக்கலாமே, ஏன் இப்படி மூச்சிறைக்க மூச்சிறைக்க இங்கே அதையும் சுமந்துண்டு வரணும்னு  கேட்டேன்

     “ஆமான்னா, நானே காபி கலந்து, நானே தனியா உட்கார்ந்துண்டு குடிக்கணுமாக்கும்.  உங்களோட பேசிண்டே குடிக்கலாமேன்னுதான் இங்கே என் காபியையும் கொண்டுவந்தேன்.

     “பாரு, காபி ரொம்ப சூடா இருக்கப்போறது, நன்னா ஆத்திக் குடுடீ, என்னால சூடா குடிக்கமுடி யாதோல்யோ

     “இந்தாங்கோ, காபி நன்னா ஆறிப்போயிடுத்து.அந்த அம்மாள் கொடுத்த காபியை வாங்கிப் பருகினார் தனது அன்பு மனைவியை இரக்கத்துடன் பார்த்தபடியே.

     “தொண்டை ரொம்ப வலிக்கிறதான்னா?” அந்த அன்பு மனைவியின் கண்கள் மீண்டும் கலங்கின, தனது கணவர் படும் அவஸ்த்தையைப் பார்த்து.

     “உங்கள் குரல் எவ்வளவு கணீர்னு இருக்கும்! ஸ்கூல்லேயும் காலேஜுலேயும் கத்திக் கத்தியே தொண்டை வீணாயிடுத்துன்னா.  இப்போ கொஞ்சம்கூட இறைஞ்சு பேசமுடியல்லையேன்னா. இதை என்னங்கறது? விதிங்கறதா, இல்லை, நாம் செஞ்ச வினைங்கறதா?”

     அவளது கேள்விக்கு நாராயணன் பதில் சொல்லவில்லை. மௌனமானார். இதற்கு அவரால் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.  நாராயணன் நன்கு படித்தவர். ஆங்கிலமும், வடமொழியும், தமிழும் சரளமாக அவரது நாவில் நடமாடும். அவரது தகப்பனார் பஞ்சாபி புரோகிதத்தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர்.  சிரோன்மணிப் பட்டம்  பெற்றவர்.  புரோகிதத்தொழிலில் என்னன்ன படிப்புகள் உண்டோ அனைத்திலும் க்ரைகண்டவர். எவ்வளவு பெரிய பூஜை, ஹோமங்கள், கோவில் கும்பாபிஷேகம், கல்யாணங்கள் என்று எல்லாவிதமான மங்கள காரியங்களையும் அவரைப்போல எவராலும் அவ்வளவு சிறப்பாக செய்துவைக்க இயலாது.  அப்படிப்பட்டவர், தான் கற்றவைகளை எல்லாம் தனது மகன் நாராயணனுக்கும் கசடற கற்றுவைத்தார்.  தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தனது மகனையும் அவனது ஓய்வு நேரங்களில் அழைத்துச் செல்வது வழக்கம். அப்படி அடிக்கடி அவருடன் சென்றதினாலேயே, புரோகித்த்திலும் நாராயணன் சிறந்து விளங்கினார். தனது தந்தை செல்ல முடியாத நேரங்களில் அந்த இடங்களுக்கு நாராயணன் சென்று அந்த காரியங்களை சிறப்பாகச் செய்துவைப்பான். முடிந்தவரையில், தனது தகப்பனாருக்கு மிக மிக உதவியாக இருந்தான் என்றால் அது மிகையாகாது.

     பஞ்சாபி கனபாடிகள் மிகுந்த கோபக்காரர்.  ஒரு சிறிய தவறு நடந்தாலும் பொறுத்துக் கொள்ளமாட்டார்.  காது கொடுத்துக் கேட்கமுடியாத அளவிற்கு மிகவும் மோசமாகப் பேசுவார்.  கோபம் வந்தால் தன்னையே மறந்து பேசுவார்.  இந்த கோபமெல்லாம் தனது வீட்டில்மட்டும்தான்.  வெளியிடங்களில் இப்படி யெல்லாம் வார்த்தைகளில் தனது கோபத்தைக் காட்டமாட்டார்.  தனக்குப் பிடிக்காத் செயல்களை தனது உதவியாளர்களோ, மற்றவர்களோ செய்தால், கோபமாக ஒரு பார்வை பார்ப்பார்.  அவ்வளவுதான், அதிலேயே அனைவரும் பயந்து நடுங்குவர்..  அவரது பேச்சுக்கு எவராலும் எதிர்ப்பேச்சு பேசமுடியாது.

     அப்படிப்பட்ட தகப்பனாரிடம் அனைத்தையும் கற்றுத் தேர்ந்த நாராயணன், தனது தந்தையிடம் பக்தி, பயம், மரியாதை அனைத்தையும் கொண்டிருந்ததோடு, தந்தையைப் போல கோப்ப்படுவதிலும் சளைத்தவா¢ல்லை.
    
     நாராயணன், பள்ளிப்படிப்பு, கல்லூ¡¢ப்படிப்புகள் எல்லாம் படித்து முடித்து, ஒரு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.  அப்படியே பெரிய படிப்புகள் எல்லாம் படித்து கல்லூ¡¢யிலும் விரிவுரையாளராகப் பணிபுரிந்திருக்கிறார். தனது படிப்பாற்றலாலும் நேர்மையான உழைப்பினாலும் படிப்படியாக உயர்ந்தாலும், தனது தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டே நடந்துகொள்வார்.

     நாராயணனின் இருப்பத்தாறாம் வயதில் ஜானகியைத் திருமணம் செய்வித்தார் பஞசாபி அவர்கள்.  அவரே வரன் தேடி, பெண்பார்த்து, தனது மனைவியுடன் சென்று, ஜானகியை நாராயணனுக்குப் பேசி முடித்துவிட்டார்.  நாராயணனைப் பெண்பார்க்க அழைத்துச் செல்லவும் இல்லை, அவனிடம் அந்தப் பெண்ணின் புகைப்படத்தைக் கூடக்காட்டவில்லை.  ஏனென்றால், அந்தக்காலத்தில் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் பழக்கமில்லை.  புகைப்படம் எடுத்தால்,ஆயுள் குறைந்துவிடும் என்னும் நம்பிக்கை இருந்ததால்தான். அதனால் ஜானகியின் புகைப்பட்மும் இல்லை, நாராயணனின் புகைப்படமும் இல்லை.

     ஜானகியின் பெற்றோர், ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள்.  அவளது தகப்பனார் ஒரு பள்ளியில் ஆசி¡¢யராகப் பணிபு¡¢ந்து வந்தவர்..  அவருக்குப் பூர்வீகச் சொத்து என்பது அவரது வீடும், ஒரு ஏக்கர் நிலமும் மட்டுமெ.  அதை வைத்துக் கொண்டுதான் தனது குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்.  ஜானகி அவருக்கு ஒரே மகள்.  வேறு மகனோ மகளோ இல்லை.  ஆதலால், பஞ்சாபி கேட்ட வரதட்சணை, நகைகள், வெள்ளி, பித்தளைப் பாத்திரங்கள் என தனது நிலைமைக்கு மீறி அனைத்தையும் செய்தார்.  தனது ஒரு ஏக்கர் நிலத்தையும் விற்றுத்தான் அனைத்தையும் செய்யமுடிந்தது.  அனைத்தையும் தனது சம்பந்தி கேட்டுவிட்டாரே, என்பதற்காகவும், தனது மகள் சந்தோஷமாகவும், வசதியாகவும் புக்க்கத்தில் வாழவேண்டுமே என்பத்ற்காகவும் செய்தாலும் பஞ்சாபிக்கு மனக்குறை இருக்கத்தான் செய்தது.

     தான் ஒரு பெரிய செலவந்தராக இருப்பதாலும்தனக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருப்பதாலும்தனது மகன் கல்லூரியில் பெரிய உத்தியோகத்தில் இருப்பதாலும் கல்யாணத்தை வெகு விமரிசையாகச் செய்துகொடுக்க வேண்டுமென்று ஆணையிட்டிருந்தார் பஞ்சாபி.  எவ்வளவோ முயன்றும் ஜானகியின் தந்தையால், தனது பெண்ணின் திருமண மாப்பிள்ளை அழைப்பிற்கு பேண்டு வாத்தியமும், குதிரை சாரட்டும் வைக்க முடியவில்லை.  அதனால் கோபமுற்ற பஞ்சாபி, பூமிக்கும் ஆகாயத்துக்குமாகக் குதித்தார்.  இதனால் அவரது கௌரவமே குறைபட்டுவிட்டதாகச் சினந்தார்.

     ஜானகியின் தந்தை வெங்கட்ராம அய்யர் சற்று பயந்த சுபாவம் உள்ளவர். மானி, அதிகமாக எவா¢டமும் பேசமாட்டார்.  அவர் உறக்கப் பேசி எவரும் பார்த்த்தே இல்லை.  அப்படிப்பட்டவர் அன்று, பஞ்சாபியின் உக்ரதாண்டவத்தால் மிகவும்பயந்தே போய்விட்டார்.

     இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணனும் வெலவெலத்த்ப் போனான்.  தனது தந்தை செய்வது சா¢யில்லை என்று மனதிற்குப் பட்டாலும், அவனால் அவரிடம் எதையும் கேட்க முடியவில்லை.  அவனால் நடப்பவற்றை வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர வேரெதுவும் செய்ய இயலவில்லை.  கல்யாணத்திற்கு வந்தவர்கள் வேடிக்கை பார்த்தனர்.  எவராலும் பஞ்சாபியிடம் பேசி சமாதானம் செய்யத் துணிவில்லை.

     வெங்கட்ராம அய்யர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார், கண்ணீர்விட்டுக் கதறிப் பார்த்தார், எதுவும் நடக்கவில்லை. பஞ்சாபியின் கோயம் மேலும் கொழுந்து விட்டதேயன்றி தணிவதாகத் தெரியவில்லை.

     நாராயணன், ஜானகியை அப்படி இப்படிப் போய்வரும்போது ஜாடை மாடையாய்ப் பார்த்திருந்தான்.  அதனால், ஜானகியின் அழகும், அடக்கமும், சிரிப்பும் அவனை மயக்கிவிட்டது எனலாம்..  அதனால் அவனது மனத்தில் சிறிது அச்சம் ஏற்பட்டது.  எங்கே தனது கல்யாணம் தடைபட்டு விடுமோ என்ற பயத்தில், தனது தாயா¡¢டம் மெள்ள, ‘அப்பா செய்வது சரியில்லைஎன்று எடுத்துக் கூறினான். அவளும் ஒப்புக்கொண்டாள், இருந்தாலும் அவளாலும் ஏதும் செய்ய இயலவில்லை.  கல்யாணமே நின்றுவிடுமோ என்ற சூழ்நிலை ஏற்படும் தருவாயில், வெங்கட்ராமன் ஒரு காரியம் செய்தார்.  யாரும் எதிர் பாராத விதமாக பஞ்சாபியின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கா¢த்து, அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டார்.  பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் மனமும் கதிரவன் பட்ட பனிபோல் உருகின.

     ஒரு பெரியவர் மட்டும் முன்வந்து, “ஏய் பஞ்சாபிஏண்டா இப்படி முரண்டு பிடிக்கிறே?   பாவம்டா இந்த மனுஷர்இவரை மன்னிச்சு, கல்யாணத்தை நடக்கவிடுடா.  பெண்பாவம் ரொம்ப பொல்லாதுடாஎன்று சொல்லபஞ்சாபி ஒரு கணம் அந்தப் பெரியவரை முறைத்துப் பார்த்தார்.  பிறகு சாந்தமானார்.  என்ன மாமா, நான் கல்யாணத்தை இதுக்காகவெல்லாமா நிறுத்துவேன்.? நான் கொஞ்சம் ஊர்மெச்ச ஆடம்பரமா நம்ம பையன் கல்யாணத்தை நடத்தலாமேன்னு எதிர்பார்த்தேன்.  ஏமாத்தமாயிடுத்து.அதனால கோபம் என்னையும் மீறி தலைகால் புரியாமல் வந்துடுத்து.என்று சொன்னவர், குனிந்து வெங்கட்ராம அய்ய்ரின் தோளைத் தொட்டுத் தூக்கினார்.

     “சம்மந்தி, நீங்க இப்படிச் செய்யலாமா? எவ்வளவு பெரிய மனுஷர் நீர்?! என் கால்ல போய் விழுந்துண்டு,,,, போம் போம், போய் காரியங்களைப் பாரும். எதையும் மனசுல வெச்சுக்காதீங்கோஎன்று கோபம் தணிந்து சமாதானமாகப் பேசினார்.  பிறகு நாராயணனின் கல்யாணம் வெகு கோலாகலமாக நடந்தேறியது.

     அதன்பிறகு, தந்தையார் காலமானார். தாயார் இருக்கும் பொழுதே நாராயணன் தனது இரு மகன்களுக்கும் கல்யாணம் செய்வித்துவிட்டார்.  ஆனால் தானும் தனது தந்தைக்கு மிஞ்சியவன் இல்லை என்பதை அவரும் நிரூபித்துவிட்டார்.

     “என்னன்னா, என்ன அப்படி யோஜனைகாபி குடிச்சுட்டேளோல்யோ? டம்ப்ளரை இப்படிக் கொடுங்கோ.என்ற ஜானகியின் குரல் கேட்டுத் தனது சுய நினைவிற்கு வந்தவர், தனது கையீலிருந்த காபி டம்ப்ளரை அவளிடம் கொடுத்தார். ஒண்ணுமில்லேடி ஜானு, ஏதோ பழய ஞாபகங்கள்என்றார்.

     “இதோ பாருங்கோன்னா, நடந்ததையே நினைச்சுண்டிருந்தா, நிம்மதியா இருக்க முடியாதுன்னா

     “இனிமேல் நமக்கு ஏதுடீ நிம்மதிநம்ம ரெண்டு புள்ளைகளும், தனது பொண்டாட்டி புள்ளைகளோட ஜாம்ஜாம்னு தனிக்குடித்தனம் பண்ணறாள். இங்கே நாமளோ, தனியா உட்கார்ந்துண்டு தவியாத் தவிச்சுண்டு இருக்கோம். எல்லாம் நம் விதிடீ ஜானு

     ``விதின்னு அப்படி ஒதுக்கிட முடியாதுன்னா. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்விளைஞ்சுண்டிருக்கு.  அனுபவிக்கிறோம், அவ்வளவுதான்னா

     “நான் அப்படி என்ன தப்பா நடந்துண்டுட்டேன்? எல்லோரோட சந்தோஷத்துக் காகத்தானே கொஞ்சம் கண்டிப்பா நடந்துண்டேன்.  எந்த தகப்பனாவது, தன்னோட குழந்தைகள் கெட்டுப்போகவோ, அவா மனசு கஷ்டப்படவோ நினைப்பானோ? நான் மட்டும் என்ன அவ்வளவு கொடுமைக்காரனாஎன்னோட அப்பா மாதிரியா நான் நடந்துக்கறேன்?”

     “இல்லேன்னா, அவரைவிட ஒருபடி மேலேஜானு சொல்ல, நாராயணன் மௌனமானார்.

     “ஏன்னா, என் மேலே கோபமா

     “இல்லேடி, யதார்தத்தை யார்சொன்னாலும் மனசு ஒத்துக்குமா என்ன? நீ நடந்ததைத்தானே சொன்னே.  ஒண்ணும் தப்பாச் சொல்லல்லியே

     “உங்க மனசைக் கஷ்டப்படுத்தறத்துக்காக நான் சொல்லல்லைன்னா.  ஆனால் யதார்த்தம் எப்பவுமே சுடும்.  ஆனால் நீங்க நல்லது சொல்றதா நினைச்சுண்டு பேசறதெல்லாம், நல்லதா மத்தவா எப்படின்னா எடுத்துப்பா?”

     “நாம பெத்த  புள்ளைங்கதானே, அவாள்லாம் இதுவரை நான் சொல்றபடி கேட்டுத்தானே பெரிய மனுஷாளானா! அவாளுக்கு கல்யாணமும் நாம்தானே பண்ணிவெச்சோம்; கல்யாணம் ஆயிடுத்துன்னா பெரிய மனுஷாளா ஆயிடுவாளா என்னஅவாளை நான் கண்டிக்காம வேற யார் கண்டிப்பா?”      “நீங்க சொல்றதெல்லாம் சரிதான்னா, ஆனால் அவாளுக்கும் தனியா மனசுன்னு ஒண்ணு இருக்குமோல்யா, நீங்க சொல்றதெல்லாம் நேக்கு நன்னாப்புரியறது. ஆனால் அதெல்லாம் அவாளுக்கும் புரியணுமோல்யோ

     “நீ சொல்றதும் கரெக்ட்தான்..,”: சிறிதுநேரம் அங்கே அமைதி நிலவியது. அந்த மௌனத்தை ஜானகிதான் கலைத்தாள்.

     “உங்கள் அப்பா நம்ம கல்யாணத்தின்போது, ஜானவாச குதிரை சாரட்டுக்காக எவ்வளவு குதி குதிச்சார்!? அவர் கேட்ட சீரெல்லாம், நகைநட்டெலாம் வரதட்சணையோட எல்லாமே செஞ்சப்புறமும், அது சரியில்லை, இது சரியில்லைன்னு எப்படியெல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணினார்? நினைவிருக்கோல்யோ?”

     “அது எப்படிடீ மறந்துபோகும்உன்னைப் பெண்பார்க்கறச்சேகூட என்னைக் கூட்டிண்டு போகல்லையே!  நானா உன்னை, கல்யாணத்துக்கு முந்தின நாள் அகஸ்மாத்தா பார்த்ததிலேர்ந்தே  உன்னோட அழகிலே சொக்கிப் போயிட்டேன்.  அந்த நினைப்போடயே நான் இருக்கும்போது, , கல்யாணத்தை நிறுத்தற மாதிரி அப்பா நடந்துண்டாரே;; அதை நினைச்சா இப்பவும் அப்பாமேலே எவ்வளவு கோபம் வர்றது தெரியுமா?”

     “இப்போ கோபம் வந்து என்னன்னா பிரயோஜனம்? அப்போவே அவரிட்டே நீங்க பேசியிருக்கணும்

     “அவ்வளவுதான், எல்லாம் நாசமாயிருக்கும். கல்யாண வீடே அமர்க்களமாயிருக்கும். ஏதோ அந்த அப்பாவோட மாமா அதாவது என் மாமாதாத்தா வந்து சமாதானப் படுத்தலைன்னா, இப்படி நீ என் முன்னாடி உட்கார்ந்துண்டு பேசிண்டிருப்பியா?”

     “அதுசரி, ஆனால் அன்னிக்கு உங்கமேலே நேக்கு கோபம் கோபமாத்தான் வந்தது, அப்பா பேசறதைக் கேட்டுண்டு சும்மா உட்கார்ந்துண்டு இருந்தேளேன்னு..., சுத்த கையாலாகாத் தனமான்னா பார்த்துண்டிருந்தேள்!”  இதற்கு நாராயணன் பதிலொன்றும் பகரவில்லை, ஜானகியேதான் பேசினாள்.

     “நம்ம கல்யாணத்தின் போதே அவ்வளவு நடந்திருக்கு, அதைப் பார்த்த நீங்க, உங்க மூத்தபிள்ளை கல்யாணத்துலயாவது அமைதியா இருந்திருக்கலாமோல்யோ?”   

     ``நான் ஒண்ணும் தப்பாப் பேச்சல்லையேடி என் அப்பா ஆசைப்பட்ட மாதிரி ஒரு குதிரை சாரட் வைக்கச் சொன்னேன். என்னாலதான் அதுல ஜானவாசம் வரமுடியலை. நம்ம பையனாவது அனுபவிக்கட்டுமேன்னுதான், குதிரைசாரட் வைக்கச் சொன்னேன். அது ஒரே ஒரு குதிரை பூட்டிய சாரட்
    
     ``ஓஹோ.. அய்யாவுக்கு ஒரு குதிரை பூட்டின சாரட் போதாதோ., அஞ்சு குதிரைகள் பூட்டினது வேணுமோ? அப்படி என்னன்னா, பொண்ணைப்பெத்தவா மேலே அப்படியொரு  எதிர்பார்ப்பு?”

   ``ஏண்டி, ஆசைப்படறது என்ன அவ்வளவு பெரிய குத்தமா? எனக்காகவா கேட்டேன்? நானா அந்த குதிரை சாரட்டுல பவனிவரக்கேட்டேன்? எனக்குக் கிடைக்காததை என் பிள்ளை அனுபவிக்கட்டுமேன்னுதான், ஒரு சின்ன சபலம் “  
      ``சபலப்படுங்கோ, ஆசைப்படுங்கோ, நான் ஒண்ணும் வேணாங்கல்லை. அவாளை நிர்பந்திக்கப் படாதோன்னோ

     ``சரிடி நடந்தது நடந்து போச்சு. அதான் அவா எந்த சாரட்டும் வைக்கல்லியே, :எங்காத்துல அதெல்லாம் பழக்கமில்லைன்னுட்டாளே. ஒரு திறந்த கார்ல ஒரு சாதாரண மேளவாத்தியத்தோட பெரியவன் ஜானவாசத்தை நடத்திட்டாளே.

           ``அதுகூட , பெரியவன் உங்களை எதிர்த்துப் பேசல்லைன்னா, நீங்க ஓஞ்சுருக்கவேமாட்டேள். பெரிய சண்டையான்னா போயிருக்கும்.

    ``ஆமாண்டி, நான் என்ன அவ்வளவு மோசமானவனா? கோபம் கொஞ்சம் தலைக்கேறிடுத்து. நான் கொஞ்சம் என்னை ஆசுவாசப் படுத்திக்கும் போது தான் பெரியவன் என்னை அதட்டினான்.`அப்பா பேசாமலிருக்க மாட்டேள்? எப்படி அப்பா உங்களுக்கு இவ்வளவு அல்பத்தனமா கேக்க முடியறதுன்னு கேட்டானே. அதுவரையில் என்கிட்ட ரொம்ப பயந்துண்டு, அடக்கமா மரியாதையா இருந்தவன் அன்னிக்கு இப்படிப் பேசிட்டானேடீ

     ``அவன் பேசினது தப்புங்கறேளா? நீங்க பண்ணாததை அவன் பண்ணினான்.

     ``அதெல்லாம் சரிதான் நான் அப்போ அப்படி நடந்துண்டது தப்பு தான். இப்போ புரியறது. அப்போ புடியலையேடி அதுக்காக, பெரியவன் சந்துரு அவன் கல்யாணத்துக்கப்புறம், எல்லாத்துக்குமே என்னை எதிர்த்துப் பேசணுமா என்ன? அப்பாங்கற மரியாதை வேண்டாமோ

     ``எல்லாம் அவன் மரியாதையாத் தான் இருக்கான். உங்களுக்குத்தான் அவனையும் அவன் பொண்டாட்டியையும் புடிக்கலை. எப்பவும் கரிச்சு கொட்டிண்டே இருக்கேள்”.

     ``அப்போ நான் பொல்லாதவன், உன் பிள்ளைகள் மாட்டுப் பொண்ணெல்லாம் நல்லவா: அதானே

     ``உங்களை யாருன்னா பொல்லாதவன்னு சொன்னா? நீங்க ரொம்ப நல்லவர் தான், ஆனால் காலத்துக்கு தகுந்த மாதிரி அனுசா¢ச்சுண்டு போகலேன்னு தான் சொல்றேன்”.

     ``வாஸ்தவம்தான். அதுக்காக? எனக்குன்னு ஒரு மரியாதை சுயகெளரவமெல்லாம் வேண்டாம்கிறயா?”

     ¡அப்படி யாரும் சொல்லலியே” - ஜானகி.

     ``புள்ளைகள் பொண்டாட்டியோட சண்டை போட்டா அதைக் கேட்கப்படாதோ?”

     “படாதுன்னாகேட்கப்படாது.  இப்போ சண்டை போட்டுப்பா, அடுத்தநிமிஷமே கொஞ்சிப்பா. அவா சண்டைல நாம் தலையிட்டா, அது நமக்குத்தான் அசிங்கம்

     ``என்ன சொல்றே நீஆத்துல பெரியவாளுக்கு எதிரிலேயே குழந்தைகள் சத்தம்போட்டு பேசுவாளோநாங்கள்லாம் எங்கப்பாவுக்கு எதிரிலே சத்தம்போட்டு மூச்சுகூட விடமாட்டோம்

     “அதெல்லாம் அந்தக்காலம்னா. நாம இந்தக்காலத்துக்குத் தகுந்தாப்போலத்தான் நம்மளை மாத்திக் கணும்.

     “நீ சொல்றதெல்லாம் சரிதான், ஆனால் நம்ம புள்ளைகள் கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும், அடக்க ஒடுக்கமா, மரியாதையாத்தானேடி நடந்துண்டிருந்தா.  கல்யாணத்துக்கப்புறமா மாறிட்டான்களேடி. அதை நினைச்சாத்தான் ரொம்ப ஆச்சர்யமாவும் வருத்தமாவும் இருக்குடி.

     “என்ன பண்ணறதுன்னா, எல்லாத்தையும் சகிச்சுண்டுதான் இருந்தாகணும்.

     “ஏண்டி ஜானு, நீயே சொல்லு, முன்னமாதிரி நான் இப்போல்லாம் சத்தம்போட்டுண்டு, எல்லோரையும் அடக்கிண்டா இருக்கேன்குழம்பிலே உப்புப் போடலைன்னா கூட நான் ஒண்ணும் சத்தம் போடறதில்லையே.  இருந்தாலும் சாம்பார்ல உப்புப் போடல்லியேன்னு நான் கேட்கப்படாதோ?”

     “கேட்கலாம்னா.., ஆனால் கேட்கிற வார்த்தைல கொஞ்சமாவது வாஞ்சை இருக்கணும், இல்லை அதிகாரத்தொனி இல்லாமல் கொஞ்சம் பொறுமையா அன்பா கேட்கலாமே. என்கிட்டே நீங்க எப்படி கேட்டாலும் நான் பொறுத்துப்பேன்.  இந்தக்காலத்துப் பொண்கள் பொறுத்துக்காதுன்னா. நாம குழந்தைகளை அடக்கமாயும், அன்போடயும்தான் வளர்த்தோம்.  ஆனால் மத்தவாளாத்துல பொறந்த குழந்தைகள் ரொம்ப செல்லமாகவும், பெத்தவாளுக்கு அடங்காமலும், அவாளுக்குச் சரிசமமாகவும் வளர்ந்திருப்பா. அத்தோட இவாளெல்லாம் பெரிய மேல்படிப்பெல்லாம் படிச்சுடறா. அத்தோட வேலை பார்க்கற பொண்களெல்லாம் எல்லோரையும் பெயர் சொல்லிக் கூப்பிட்டேப் பழகிடறா. திடீர்ன்னு அவாளை மாறச்சொன்னா எப்படின்னா மாறிப்பாஒண்ணு பெத்தவாளாவது கொஞ்சமாவது அடக்கத்தையும், புக்காத்துல எப்படிப் பழகணும்னாவது சொல்லிக் கொடுத்திருக்கணும்.  புதுசா வந்த மாடுகள் நுகத்தடியிலே பழகறவரைக்கும் கொஞ்சம் முறண்டு பிடிக்கத்தான் செய்யும். நாம்தான் கொஞ்சம் விட்டுப்பிடிக்கணும்.

     “ஓ கே  ஓகே நாம ரொம்ப விட்டுட்டோமோஇப்போ புடிக்க முடியல்லையோடி?”
    
     “வாஸ்தவம்தான்..,பட்டாத்தான் தெரியும் பார்ப்பானுக்குன்னு சும்மாவா சொல்லியிருக்கா பெரியவாஇந்தக்காலத்துப் பொண்களெல்லாம் அன்பா, பாசமா இருக்கிற  குடும்பத்தையே பிரிச்சுடறா.  இல்லைன்னா, அவாளைப் பெத்தவாளோ, அவாளோட சொந்தக்காராளோ இல்லாதது பொல்லாத்தை எல்லாம் சொல்லி  பயமுறுத்தி நன்னா ஏத்திவிட்டுடறா. என்னமோ அவாத்துப் பொண்ணு புக்காத்துல கஷ்டப்படற மாதி¡¢யும் மாமனார் மாமியார் எப்போதுமே எரிஞ்சு விழற மாதிரியும், மாட்டுப்பொண் நன்னா சந்தோஷமா இருந்தா வயித்தெரிச்சல் படற மாதிரியும் சொல்லிக் கொடுத்து தனியாப் பிரிச்சுடுவா. மாமனார் மாமியார் இயல்பாவே விட்டுக் குடுத்து, சந்தோஷமாவே பழகிண்டிருந்தாக் கூட, திடீர்னு ஒரு தடவை அவா செய்யற தப்பை திருத்த கொஞ்சம் கோபமாப் பேசினா கூட உடனே பொல்லாதவனா ஆயிடுவா. இதுக்கெல்லாம் காரணம் செல்போன்தான்னா. புக்காத்துல நடக்கிற எல்லா விஷயங்களையும் அவா பொறந்தாத்துல தினம் ஒண்ணு விடாம ஒப்பிச்சுடறளா, அங்கேதான் விவகாரமே ஆரம்பிக்கிறது. இந்தப் பொண்ணுகள் எல்லாமே பெத்தவாளுக்கு சொல்றதுல தப்பில்லை, அவா நம்ம நல்லதுக்கு எல்லாமே நினைப்பான்னு நினைச்சுண்டு சொல்லுவா. ஆனால் இவா சொல்ற விதத்தையும், விஷயத்தையும் கேக்கறவா தப்பா பு¡¢ஞ்சுண்டு இவாளுக்கு அட்வைஸ் பண்ணுவா. மொத்தத்துல மாமியார் மாமனாரெல்லாம் மாட்டுப்பொண்ணை ரொம்ப படுத்தறவா மாதிரி நினைச்சுண்டு தன்னோட பொண்களுக்கு அட்வைஸ்களை அள்ளி விடுவா. ஆனால் அவாளும் தன்னோட மாட்டுப்பொண்களுக்கு மாமியார் மாமனார்ங்கறதை மறந்துடுவா இதுதான்னா உலகம்.
     ``நம்மாத்துலேயும் இப்படித்தான் நடந்துண்டிருக்கு. அத்தோட உங்க யதார்த்தமான கோபமும் சேர்ந்துடுத்து.  உங்கப்பாவோட கோபம், அப்போ நடந்த கதைகள், பிறகு உங்களோட கோபம் அதனால நடந்த சில சம்பவங்களை எல்லாம் நாமும் சரி, நம் பிள்ளைகளும் சரி ஒண்ணு விடாம மருமகள்கிட்டே சொல்லிடறோமா, அதுவும் நம்மை பத்தி ஒரு தப்பான இமேஜை ஏற்படுத்திடறது. மருமகள்கள், பிள்ளைகளின் மனத்தையும் மாத்தி நம்மளையாரும் புரிஞ்சுக்கறதில்லை, நம்மளோட அன்பும் பாசமும் அவாளுக்குத் தப்பாப்படறது”. மூச்சுவாங்கிப் பேசி முடித்தாள் ஜானகி அம்மாள்.
   
       ``எல்லாம் சரிதாண்டி. நமக்கு பிள்ளைகள் மாட்டுப்பெண்கள், பேரன் பேத்திகள் எல்லாம் இருந்தும் யாருமே நம்மக்கிட்ட அனுசரனையா இல்லையே. நான் கோபக்காரனாவே இருந்துட்டுப்போறேன். அதுனால இவாள்லாம் என்ன கெட்டா போயிட்டா. வெளி உலகத்துல நல்லபேர் எடுக்கற மாதிரி வளர்த்திருக்கேனா இல்லையா? ஏதாவது குறை வெச்சேனா? அதட்டவும் அதட்டுவேன், செல்லமும் கொடுப்பேன். அத விடு, பேரக்குழந்தகளை நான் ஒண்ணுமே சொல்லாம, ஒரு தடவைகூட கோவிச்சுண்டதுகூட இல்லையே அவாளையும்னா என்கிட்ட அண்டவிடறதுல்லை. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி. இந்த எழபத்தைஞ்சு வயசுக்கு என்னோட கோபத்துக்கு நல்ல படிப்பனைடி எல்லாம் நேக்கு நன்னா வேணும். மூச்சுவிடமுடியாம, தொண்டைல ஆபரேஷன் நேக்கு பண்ணியிருக்குன்னு தெரிஞ்சிருந்தும், அவா நம்மை தனியா விட்டுட்டே போயிட்டாளேடி, ரெண்டு வருஷமா அதுவும் ரெண்டு மூணுமணிநேரம் இருப்பா. போயிடுவா. அவாளுக்கும் நீதான் முடியாததோட சமைச்சுப் போடுவே. பிள்ளைகளும் உன் கை சமையலை நன்னா ருசிக்கச் சாப்பிடுவான்கள். எல்லாமே ஒரே நாள். அதுவும் ரெண்டு மூணுமணிநேரம். எங்கிட்டே குழந்தைகள் கொஞ்சம் நெறுங்கிப் பழக வரும்போது அவா எல்லோரும் புறப்பட்டுப் போயிடுவா. எப்போவாவது அவாமனசு மாறமாட்டாளா. நம்மோட சேர்ந்து வாழ மாட்டாளான்னு எதிர் பார்த்துண்டே இருக்கேன். அவ்வளவுதாண்டி நான் பிறந்த பிறப்பு”  என்று சொல்லி மடாமடாரென்று தனது தலையில் அடித்துக் கொண்டார் நாரயணன்.    பதறிப்போன ஜானகிஅம்மாள் எழுந்து அவரது கையைப் பிடித்து அவர் அடித்துக் கொள்வதைத் தடுத்தாள். இம்மாதிரி நடப்பது இன்று நேற்றல்ல, எப்பொழுதெல்லாம் தனது கோபத்தை மற்றவர்களிடம் காட்டமுடியாது பொகிறதோ அப்பொழுதெல்லாம் இப்படித்தான் செய்வார் நாராயணன். இது அந்த அம்மையாருக்குப் பழகிப்போன விஷயம்தான்.  சாதாரணமாக தனது தாபங்களைப் பேசிக்கொண்டிருப்பார். அதிகமாக உணர்ச்சிவயப்பட்டுவிட்டால், தன்னைத்தானே தண்டித்துக் கொள்வார். அவரது மனதாபங்களையோ பாசத்தையோ எவரும் புரிந்து கொள்ளவில்லை என்பது இவரின் தவிப்பு.

     அப்பொழுது மாடிப்படிகளில் சிலர் தட்தடவென்று வேகமாக ஏறிவரும் சப்தம் கேட்டது.  வேகமாக மேலே ஏறிவந்த அவரது மூத்தமகன், தனது தந்தையின் கையைப் பிடித்து நிருத்தினான் தனது தாயுடன் சேர்ந்து.

     “அப்பா, இவ்வளவு பாசமும் அன்பும், ஆதங்கமும் உங்களுக்கு இருக்குங்கறதை நாங்கள் இதுவரையில் புரிஞ்சுக்காமப் போயிட்டோமேப்பா.  இப்போ உங்களை நாங்கள் பார்க்கவரும்போது நீன்க்ள் இரண்டுபேரும் பேசிண்டிருந்ததை மாடிப்படியில் நின்னுண்டு கேட்டுண்டிருந்தோம்பா.எங்க மனசுக்கு ரொம்ப கஷ்டமாய்டுத்து ,பதறிப் போயிட்டோம். இதை கேட்ட அப்புறம் எங்க மனசு மாறிப்போயிடுத்து. உங்கள் அன்பையும் பாசத்தையும்  தவிப்பையும் நன்னா புரிஞ்சுண்டுட்டோம் அப்பா. நாங்கள் இனிமேல் உங்ககூடவே இருக்கப்போறோம். நீர் அடிச்சு நீர்விலகாதுங்கறதை இப்போ நாங்க நன்னாவே புரிஞ்சுண்டுட்டோம். உங்க கோபம்தான் எங்களுக்குத் தெரிஞ்சதே தவிற அதுல இத்தனை பாசம் இருக்கும்கறதை ஏனோ எங்களால புரிஞ்சுக்க முடியாமப் போயிடுத்துப்பா. இனிமே மத்தவா பேச்சையெல்லாம் கேட்காமல் உங்களோடயே இருக்கோம்பாஎன்று தனது தந்தையைக் கட்டிகொண்டு அழுதான்.

     “ஆமாம் அப்பா, என்னையும் மன்னிச்சுடுங்கோ. நாங்க தெரியாம தப்புப் பண்ணிட்டோம். வயசான காலத்துல பெத்தவாளை தனியா தவிக்க விட்டுட்டு நாங்க தனிக்குடித்தனம் போறது எவ்வளவு பெரிய பாவம், எவ்வளவு பெரிய துரோகம்ங்கறதையும் நன்னா புரிஞ்சுண்டுட்டோம். உங்களைக் கோபக்காரரா பார்த்தோமே தவிர, ஒரு பாசமுள்ள தந்தையா நினைச்சுப் பார்க்கத் தவறிட்டோம் அப்பா. நாங்களும், எங்க மனைவிகளும், குழந்தைகளும் உங்களையும் உங்க பாசத்தையும் ரொம்ப மிஸ் பண்ணிட்டோம் அப்பா. எங்களை மன்னிச்சு ஏத்துக்குங்கோ அப்பா.என்று இரு மகன்களும் கெஞ்ச, அவரது மருமகள்களும், அவரது பாதங்களில் விழுந்து வணங்கினர். குழந்தைகளும் தாத்தாதாத்தா என்று அவரைக் கட்டிக் கொண்டன.

     இதை எதையும் எதிர்பாராத நாராயண அய்யர்மிகுந்த சந்தோஷப்பட்டார். அவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் அருவியெனக் கொட்டியது.  தனது வாயைத் திறந்து மெல்லிய குரலில்  வந்துட்டேளா செல்லங்களாநேக்கு நன்னாத் தெரியும் என்னிக்காவது ஒரு நாள் என் குழந்தைகள் என்னைப் புரிஞ்சுண்டு என்கிட்டே வருவான்னுஎன்று சொன்னார். அனைவரையும் சந்தோஷத்துடன் பார்த்தார்.  அவரது கைகள் தனது பேரக்குழந்தைகளுடன் சேர்த்து, தனது மகன்களையும் அணைத்துக் கொண்டன.  அவரது கண்கள் அவர்களையே சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, அவரது இன்னுயிர் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது.

     அவரது உயிர் அவரைவிட்டுப் பிரிந்து இறைவனடியை அடைந்துவிட்டது என்பதை அனைவரும் அறிய சிறிது நேரம் பிடித்தது.
    
                                ********
    


           4. அளவுக்குமேல் ஆசை


     வசுந்தராவிற்கு நினைக்க நினைக்க குழப்பம்தான் மிஞ்சியது.  தனக்கும் ஐம்பது வயதாகிவிட்டது. ஆனால் தனது வாழ்வில் எதுவும் நிரந்தரமாக அமையவில்லையே; என்கிற ஆதங்கம் அவளது மனத்தில் அரித்துக் கொண்டே தான் இருந்தது.
    
     “என்னோட படிச்சவங்களாகட்டும், என்னோட பழகியவங்களாகட்டும், இல்லை என் வீட்டுக் காரரின் சொந்தங்களாகட்டும், அவருடைய நண்பர்களாகட்டும் எல்லோருமே அவரவர்கள் வாழ்கையில் நிம்மதியாக சந்தோஷமாக வாழவில்லையா? அந்த மல்லிகாவை எடுத்துகிட்டா, அவளோட கணவருக்கொண்ணும் பெரிய உத்தியோகமில்லையே. சுமாரான சம்பாத்தியம் தானே!  இன்னிக்கு வரைக்கும் அவங்களுக்கு சொந்த வீடுகூட கிடையாது.  ஆனால் அவளுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளும் செவிட்டு ஊமைகள். அவர்களையும் வளர்த்து, படிக்கவைத்து, ஆளாக்கிக் கல்யாணமும் செஞ்சு கொடுத்திட்டாளே.! அவள் கணவரும் ஏதேதோ வேலைபார்த்து சம்பாதிச்சார். இன்னும் வயசான காலத்திலும் சம்பாதிச்சுக்கிட்டுதான் இருக்கார்.  அவளைக் கேட்டா, ‘நான் சந்தோஷமாத்தான் இருக்கேன் அக்கா¡ என்கிறாள்.  ஆனால் எனக்குமட்டும் ஏன் வாழ்கைல சந்தோஷமோ நிம்மதியோ இல்லை?” அவளது மனத்தில் இப்படிப்பட்ட கவலைகள் உழண்று கொண்டேதான் இருக்கும்.

     வசுந்தரா தனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தாள். மனத்திரையில் அவளது கடந்தகால வாழ்க்கை திரைப்படம்போல ஓடியது. வசுந்தராவிற்கு அப்போது வயது பத்து இருக்கும். பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருந்தாள். அவளது தந்தை ஏதோ ஒரு நிறுவனத்தில் குமாஸ்தாவாக பணிபுரிந்து கொண்டிருந்தார். அவளது தாயார் குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.. அவளது தந்தை சின்ன சாமி தினமும் தான் அலுவலகம் விட்டு வரும்பொழுதெல்லாம் இவளுக்கும் இவளது தம்பி இளங்கோ§¡விற்கும் ஏதாவது தின்பண்டம் வாங்கிவருவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார்.  வசுந்தராவின் தாய்     கல்பனாவிற்கும் பூவும் இனிப்பும் வாங்கிவருவார்.  தினமும் சந்தோஷமாகக் குடும்பம் நடந்துகொண்டிருந்தது. அந்த காலத்தில் சின்னசாமிக்கு மாதச் சம்பளம் முன்னூறு ரூபாய்தான். அந்த சம்பளத்தில் தாராளமாக கடன்வாங்காமல் குடும்பம்தான் நடத்தமுடியும். அவருக்கு மாத சம்பளத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது.  அப்படி இருக்கும்பொழுது அவரால் எப்படி தினமும் குழந்தைகளுக்கும் மனைவிக்கும் தின்பண்டங்களும், புஷ்பமும் வாங்கிவரமுடியும்? இதுவிஷயத்தில் கல்பனாவிற்கு குழப்பம்தான். தன் கணவனிடம் கேட்பதற்கும் பயம். ஏதாவது கேட்டால் கோபமாக ஏசுவார், கோபிப்பார், சத்தம்போடுவார். ஒரு மனுஷன் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, தன்னோட குழந்தைகள் மனைவிக்கு சந்தோஷமாக ஏதாவது வாங்கிவந்தால், சந்தோஷமாக வாங்கிக்கறதை விட்டுட்டு கேள்வி கேட்டுக்கிட்டிருந்தால் என்ன அர்த்தம்., நான் என்ன திருடறேனா? யாரையாவது ஏமாத்தறேனா, இல்லை கொள்ளையடிக்கிறேனா? நேர்மையா சம்பாதிச்சுகிட்டுதானே வந்து உங்களையெல்லாம் காப்பாத்தறேன்.  உங்களையெல்லாம் சந்தோஷமா வெச்சுக்கவேண்டியது என் கடமையில் லையா?” என்றெல்லாம் கத்துவார்.

     வசுந்தராவும் இளங்கோவும் சிறுவர்கள்தாமேஎந்தக்கவலையுமின்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அப்பொழுது அவர்களுடைய தாத்தா பாட்டி மற்றும் சொந்தக்கார்ர்களெல்லாம் வருவார்கள், போவார்கள்.  வரும்பொழுதெல்லாம் கல்பனா, சின்னசாமி, வசுந்தரா, இளங்கோ எல்லோருக்கும் தின்பண்டங்களும், புத்தாடைகளும் மற்றும் இதர பரிசுப்பொருள்களெல்லாம் வாங்கிவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் அவர்கள் இல்லத்தில் நொறுக்குத்தீனிக்குப் பஞ்சமிருக்காது. எப்பொழுதும் குதூகலமும் கொண்டாட்டமுமாகவே இருக்கும்.

     வசுந்தராவோ இளங்கோவோ தனது தந்தையிடம் எதை விரும்பிக்கேட்டாலும் அதை உடனே வாங்கிக்கொடுத்துவிடுவார்.  சின்னசாமிக்குத் தனது குழந்தைகளிடம் அவ்வளவு அன்பு, அவ்வளவு பாசம். இப்படியாக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தபோது, வசுந்தராவிற்கு வயது பன்னிரண்டு முடிந்து பதின்மூன்று பிறந்து சில மாதங்கள் ஆனபோது அவள் வயதிற்கு வந்துவிட்டாள்.  அந்த நிகழ்வை சிறப்பாக ஒரு விழாவாக நடத்த அவளது தந்தை மிகுந்த ஆவல்கொண்டு, தனது பெற்றோர் மனைவி எவருடைய பேச்சையும் கேட்காமல் வட்டிக்குக் கடன்வாங்கி, தனது மகளுக்கு விலையுயர்ந்த ஆபரணங்களும், பட்டாடைகளும் வாங்கி, மகளுக்குப்பூட்டி அழகுபார்த்து, ஊரில் தனக்குத் தெரிந்த நண்பர்கள் சொந்தங்கள் என்று அனைவரையும் கூட்டி மிகவும் சிறப்பாக அனைவரும் வியக்கும் வண்ணம் விழாவாகக் கோலாகலமாகக் கொண்டாடினார்.  இப்படியாக சின்னசாமி தனது குடும்ப சந்தோஷமே பெரிதென எண்ணி, பெரிய கடன்காரரானார்.  கடன் பாரம் அவரை பாடாய்ப் படுத்தினாலும் தனது குடும்ப சந்தோஷமே பெரிதென எண்ணி வாழ்ந்து வந்தார்.  கல்பனா எத்தனையோமுறை எடுத்துறைத்தும் அவை எதையுமே அவர் காதில் போட்டுக் கொள்வதே இல்லை..  அதுமட்டுமல்ல தனது ஆடம்பரச் செலவுகளையும் குறைத்துக் கொள்வதுமில்லை.  அவர் எந்த ஒரு திருமண விழாவிற்காகட்டும், கிரஹப்பிரவேசத்திற்காகட்டும் அல்லது வேறு எந்த நிகழ்சிகளுக்காகட்டும் எந்த ஒரு விசேஷத்திற்குச் சென்றாலும் தனது கௌரவம் குறைந்து விடுமோ என்று எண்ணி, தனது சக்திக்குமீறிய பரிசாகவே வாங்கி பரிசளிப்பார். கேட்டால் எப்பொழுதுமா செய்யப்போகிறோம், என்றாவது ஒருநாளைக்குத்தானே என்பார்.  தன்னை எவரும் தாழ்வாக நினைத்து விடக்கூடாது, பெருமையாகவே பேசவேண்டும் என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை எப்பொழுதும் அவரிடம் உண்டு. தனது தகுதிக்கு மீறி பிறருக்கு எதைச்செய்தாலும் பெற்றுக் கொள்பவர்கள் அதை மிக்க மகிழ்சியாகப் பெற்றுக்கொள்வதுபோல் பெற்றுக்கொண்டு, பின்னால் தூற்றுவார்கள், எள்ளி நகையாடுவார்கள் என்பது அவருக்கு ஏனோ புரியாமலே போய்விட்டது. மனைவியோ மற்றவர்களோ எடுத்துச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார்.

     கௌரவம் என்பது வெறும் ஆடம்பரமே அல்லாது எவரையும் திருப்திப் படுத்தாது, நாம் நடந்து கொள்ளும் விதமும், மற்றவர்களிடம் விசுவாசமாக நடந்து கொள்வதும், கடனில்லாத வாழ்கையும், தனது சக்திக்குள் செலவு செய்வதும்தான் என்பதுமட்டும் அவரது வாழ்நாள் முழுவதும் அவருக்கு ஏனோ பு¡¢யாமலேயே போய்விட்டது.  அவரது இத்தகைய செயல்கள் அவருடைய குழந்தைகளுக்கும் தொற்றிக்கொண்டு, அவர்களும் வீண் கௌரவம் பார்க்க தலைப்பட்டனர்.  அவரது மனைவி கல்பனாவும் தனது கணவரின் குணத்திற்குத் தகுந்தபடி மாறித்தான் ஆகவேண்டிய நிற்பந்தம் ஏற்பட்டு விட்டது..  அவர் கடைசியில் கடன்காரனாகவே இறந்தார் என்பது வேறுவிஷயம்.

     வசுந்தராவிற்கு இன்று நினைத்தாலும் மலைப்பாகத்தான் இருக்கிறது.  தனது திருமணத்தைத் தனது பெற்றோர் எவ்வளவு ஆடம்பரமாக, அதிக சீர்செனத்தியெல்லாம் செய்து, ஊரே வியக்கும் வண்ணம் மிகவும் சிறப்பாக கோலகலமாக நடத்தினார்.  தனது சிறிய வீட்டையும் அடமானம் வைத்து தனது மகளுக்குச் சிறப்பாகத் திருமணம் செய்துவைத்தாரே!

     “இந்த சின்னசாமிக்கு இப்போ என்ன வந்துவிட்டது? ஏன் இப்படி ஆடம்பரச் செலவுகள் செய்யறான்?!  இவன் என்ன பெரிய மிராசுதாரா?, சாதாரண ஒரு குமாஸ்த்தாதானே!, எல்லோருக்கும் தன் மகளுக்கு வெகு சிறப்பாகக் கல்யாணம் செய்விக்க மிக்க ஆசையாகத்தான் இருக்கும், அதற்காக இப்படியா இடுப்புத்துணியை அவிழ்த்துத் தலையில் கட்டிக்கொண்டு ஆடவார்கள்?!  அல்பனுக்கு பவிஷ¤ வரவில்லைஆனாலும் இவன் அர்த்த ராத்தி¡¢யில் குடையைப் பிடித்துக் கொண்டு அலைகிறானே.!  இவன்தான் இப்படி ஆடுகிறான் என்றால் இந்த கல்பனாவிற்கு எங்கே போய்விட்டது புத்திஅவளாவது இவனுக்கு எடுத்துச் சொல்லியிருக்க வேண்டாமோ? பாவம் இவர்கள் பின்னால் இவர்கள் எவ்வளவு கஷ்டப்படப் போகிறார்களோ?” என்று அனைவரும் இவர்கள் காதுபடவே பேசிக்கொண்டனர்.

      இளங்கோவும் படிப்பு முடிந்து அவனும் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டான்.  அவன் தனது சம்பளத்தை வீட்டிற்கு ஒழுங்காகக் கொடுப்பதில்லை, தன் இஷ்டம்போல செலவுசெய்வதும் ஊர் சுற்றுவதுமாக இருந்து வந்தான். கல்பனா அவனிடம் எவ்வளவோ  கெஞ்சியும், அவன் தனது குடும்பத்தைப் பற்றியோ, தனது தந்தை பட்ட கடனை சிறிதாவது அடைக்கவேண்டும் என்பது பற்றியோ சிறிதுகூடக் கவலைப் படவில்லை.  அத்துடன் அவன் ஏதோ ஒரு பெண்ணுடன் காதல் கொண்டவனாகவும், அவளுடன் ஊர்சுற்றுபவனாகவும் தலைப்பட்டான். சின்னசாமி எதையும் கண்டு கொள்வதே இல்லை.  குழந்தை பாவம், கஷ்டத்தைப் பார்க்காதவன். அவனாவது சந்தோஷமாகத் தன் இஷ்டம்போல இருக்கட்டுமே. நான்தான் இந்த குடுபத்துக்காகவும் எனது கௌரவத்துக்காகவும் கஷ்டப்படுகிறேன், அவனாவது ஜாலியாக இருந்துட்டுப் போகட்டுமேஎன்பார்..

     வசுந்தராவுக்கு வாய்த்த புருஷன் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை. ஒரு சிறிய ஜவுளிக்கடைக்குச் சொந்தக்காரன் அவ்வளவே.  ஏதோ சுமாராக வியாபாரம் நடந்து வந்தது. மிகவும் சிரமப்படாமலும், மிகவும் சந்தோஷமில்லாமலும் அவர்கள் வாழ்கை நடந்து வந்தது..

     வசுந்தராவும் அவள் கணவன் சுந்தரேசனும் கல்பனா சின்னசாமியான தனது தாய் தந்தை இல்லத்திற்கு அடிக்கடி வந்து போவார்கள்..  அப்படி வரும்பொழுதெல்லாம் பூ, பழம் என்று நிறைய வாங்கிவருவார்கள். சுந்தரேசன், “பூவோ அல்லது பழமோ கொஞ்சமாக வாங்கிச் சென்றால் போதும் அதை உபயோகப்படுத்த யார் இருக்கிறார்கள்?, மாமா, அத்தை இருவரும்தானேஎன்றால், அதை வசுந்தரா காதிலேயே போட்டுக்கொள்ளமாட்டாள். குறைவாக வாங்கிச் சென்றால் தனது பெற்றோரிடம் தனது கௌரவம் குறைந்து விடுமோ என்ற எண்ணமே மேலோங்கி நின்றது.  தந்தைக்கு மகள் சளைத்தவளா என்ன?

     “உங்களுக்கென்ன? இப்படி சொல்வீங்க. ஏதோ ஒரு பழம் மட்டும் வாங்கிப் போனால் நம் கௌரவம் என்னாறது? நாம கஷ்டப்படறது எங்க வீட்டுக்குத் தெரியணுமா என்னநம்ம மாப்பிள்ளை பெரிய ஜவுளிக்கடை வெச்சு ஓஹோன்னு வியாபாரம் ஆவுது, இப்படிக் கஞ்சத்தனமா நடந்துக்கிறாறேன்னு அப்பாவோ அம்மாவோ நினைச்சுக்க மாட்டாங்களா என்னஎங்கப்பா மனசு உங்க மனசைப்போல கஞ்சத்தனமான மனசு இல்லை. அவர் எங்கே போனாலும் நிறைய வாங்கிப் பொய்த்தான் பழக்கம். கையிலே காசு இருக்கோ இல்லையோ எங்கேயாவது கடனாவது வாங்கி செலவு செஞ்சுடுவார், யாரும் தன்னைக் குறைவா மதிச்சுடக்கூடாதேன்னு. தனது கௌரவத்தைக் காப்பாத்தறத்துலேயே ரொம்ப குறியா இருப்பார்.என்பாள்.

     “இதோபாரு வசுந்தரா, நான் ஒண்ணும் பெரிய பணக்காரனில்லை. கௌரவம்னு நினைச்சு சக்திக்கு மேலே செலவு செய்யவேண்டாமேன்னு பார்க்கிறேன். நாம் என்ன வாங்கிட்டுப் போறோம்,எவ்வளவு வாங்கிட்டுப் போறோம்னெல்லாம் உங்க அப்பா அம்மா பார்க்க மாட்டாங்க. நாம் அடிக்கடி அவங்களைப் போய் பார்த்துட்டு வந்தாலே ரொம்ப சந்தோஷப்படுவாங்க. நீ ஏதாவது நினைச்சுக் குழம்பிக்காதேஎன்பார்.

     “என்னங்க நீங்க; எங்க வீட்டுக்கு வாங்கிட்டுப் போறதுக்கு மட்டும் கணக்கு பார்க்குறீங்க. வேற யாராவது கஷ்டப்படறதா வந்து கேட்டா மட்டும் கையிலிருக்கறதை அள்ளிக் கொடுத்திடுறீங்க. உங்களுக்கு எங்க வீடுன்னாலே ரொம்ப இளப்பம்தான்.என்று கண்ணைக் கசக்குவாள். 

     சுந்தரேசம் பாடு படு திண்டாட்டமாகிவிடும். வசுந்தரா, அவன் எது சொன்னாலும், எது செய்தாலுலும் அதில் ஒரு குற்றம் கண்டு பிடிப்பதிலேயே கருத்தாயிருப்பாள். வேறு வழியின்றி அவள் எண்ணம் போலவே நடந்து கொள்வான்.  இதுமட்டுமல்ல. வேறு எந்த விசேஷங்களுக்குச் சென்றாலும் யார் இல்லத்திற்குச் சென்றாலும் அதிக செலவு செய்து ப்ரிசுப் பொருள்கள் வாங்கிச் செல்வதே பழக்கமாகிவிட்டது.  ஆயிற்று நாட்கள் இப்படியாக வெகுவேகமாக ஓடிக்கொண்டிருந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இருவரையும் செல்லமாக வசுந்தராவின் விருப்பப்படிதான் வளர்த்தார்கள். குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானார்கள்.

     வசுந்தராவின் தம்பி இளங்கோவும் தனது பெற்றோர் சொல்லைக் கேட்காமல் தான் காதலித்த பெண்ணையே மணந்து கொண்டு அவளது விருப்பம்போலவே குடும்பம நடத்துகிறான்.  தன் தகப்பன் பட்ட கடன்களைப் பற்றியெல்லாம் அவன் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. சின்னசாமி கடன் தொல்லை தாளாமல் தனது வீட்டை விற்று கடன்களை அடைத்துவிட்டு, தனது வயதான காலத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துத் தன் பிழைப்பை நடத்திவந்தார்.  கல்பனாவும் சிலகாலங்கள் நோய்வாய் பட்டபின் இறந்துவிட்டாள். அப்பொழுதுதான் சின்னசாமி தனது வாலிப பருவத்தில் செய்த தவறுகளை நினைத்து வருந்தினார்.  கல்பனா சொல்படி கேளாமல் கௌரவம், கௌரவம் என்று கண்டபடி கடன் வாங்கியாவது பணத்தை செலவு செய்தோமேதனது மகனை எவ்வளவு செலவு செய்து படிக்க வைத்தோம், அவனும் தறிகெட்டுப் போய்விட்டானே. இப்பொழுது தனது மனைவியின் ஈமக் கடன்கள் செய்வதற்குக் கூட கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டதே. இப்போது தன் மனைவியும் இறந்து, தனது மகனும் தனக்கு உதவாமல் தான் தனித்து விடப்பட்டு விட்டோமே: இதற்குத்தானா நான் இவ்வளவு பாடுபட்டேன். கல்பனா சொன்னது போல ஆடம்பரமாகச் செலவு செய்யாமல், சிறிதாவது சேமித்து வைத்திருந்தால் இந்த வயதான காலத்திற்காவது உதவியிருக்குமே.  கௌரவம், கௌரவம் என்று  யாருக்கெல்லாமோ செலவு செய்தோமேஇப்பொழுது அவர்களெல்லாமே நம்மை எள்ளி நகையாடுகிறார்களே.  இது ஏன் தனக்கு உறைக்காமல் போய்விட்டது. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம்செய்வது போல எல்லாமே இப்பொழுதுதானே புரிகிறது என்றெல்லாம் நினைந்து நினைந்து வருத்தப்பட்டார். 

     வசுந்தராவும் தன்னால் இயன்ற உதவிகளை தனது தந்தைக்குச் செய்துவந்தாள். அவரை, தன்னோடு வந்து இருக்குமாறு பலமுறை வேண்டியும் அவர் மறுத்துவிட்டார்.  அதற்கும் அவரது கௌரவம் இடம்கொடுக்கவில்லை.  தனியாகவே இருந்து திடீரென ஒருநாள் மாரடைப்பால் காலமானார்.

     வசுந்தரா தனது கணவன், குழந்தைகளோடு வாழ்ந்து வந்தாலும், அவளுக்கு அவளது தந்தையின் படாடோப குணம்தான் மேலோங்கி நின்றது.  சுந்தரேசன் தனது ஜவுளிக்கடையை மிகுந்த சிரமத்துடன்தான் நடத்தி வந்தான்.  கடையும் கடனில்தான் போய்க்கொண்டிருந்தது. வசுந்தராவிற்கு தனது கணவன் படும் சிரமம் நன்கு புரிந்திருந்தும், தனது ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ள இயலவில்லை. அதுவே பழக்கமாகிவிட்டது.

     வசுந்தரா தனது மகளுக்கு வரன் பார்க்க ஆரம்பித்தாள். எத்தனையோ வரன்கள் வந்து தட்டிப் போய் கடைசியில் ஒரு நல்ல வரன் வந்தது. பையனுக்கும் பையனின் பெற்றோருக்கும் பெண்ணைப் பிடித்துவிடவேசீர் செனத்தி வரவக்ஷணை பற்றி பேசினர்.  அவர்கள் கேட்டது சுந்தரேசனை தூக்கி வாரிப்போடச் செய்தது.  யோசித்துச் சொல்வதாகக் கூறி அவர்களை அனுப்பிவைத்தனர்.....

     சுந்தரேசன் மிகவும் குழம்பிப்போனான்.  வசுந்தராவுடன் கலந்து பேசினான். வசுந்தரா எதைப் பற்றியும் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.  மாப்பிள்ளை வீட்டார் கேட்ட சீர்செனத்திகளை செய்துதான் தீரவேண்டும் என்று பிடிவாதமாகவே இருந்தாள்.  தனக்கு வசதி மிகவும் குறைவாக இருப்பதாகவும், தனது வியாபாரம் மிகவும் மந்தமாகி விட்டதாகவும், கடையின் சரக்கின் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டதாகவும், எல்லாம் கடனிலேயே ஓடிக்கொண்டிருப் பதாகவும் பலமுறை எடுத்துச் சொல்லியும் வசுந்தரா கேட்காமல் மிகவும் பிடிவாதமாகவே இருந்தாள்.

     “ஏங்க, என்னை உங்களுக்கு கல்யாணம் செஞ்சு கொடுக்கும்போது எங்கப்பாவும் பெரிய பணக்காரர் இல்லை. எங்க எல்லோரையும் சந்தோஷமாகத்தான் வெச்சிருந்தார். ஆனாலும் வீட்டை அடமானம் வெச்சாவது நம் கல்யாணத்தை தடபுடலா நடத்தலையா என்னஉங்களாட்டமா கஞ்சத்தனம் பண்ணிக்கிட்டு தலைல கையை வெச்சுக்கிட்டா உட்கார்ந்தைருந்தார்நீங்களும் அவர் மாதிரி வீட்டை அடமானம் வெச்சு பொண்ணு கல்யாணத்தை நடத்துங்க.  மாப்பிள்ளை வீட்டுல கேட்ட எல்லாத்தையும் செஞ்சு கல்யாணத்தை நடத்திடலாமுங்க.  இருக்கிறது நமக்கு ஒரே ஒரு பொண்ணு. அவ கல்யாணத்தைக் கூட நாம ஒழுங்கா செய்யலைன்னா, நாளைக்கு அவ கண்ணைக் கசக்கிக்கிட்டு வந்து நின்னா நம்ம மனசுதான் கஷ்டப்படும்.  இன்னிக்கு சரியில்லாம இருக்குற வியாபாரம் நாளைக்கு நல்லா ஓடுங்க.  நாமளும் கடனெல்லாம் அடைஞ்சு சந்தோஷமாத்தான் வாழப்போறோமுங்க.. ரொம்ப யோசனை பண்ணாதீங்க.என்று அவனை தூபம் போட்டவாறு இருந்தாள் வசுந்தரா.

     “என்ன வசுந்தரா, நான் எவ்வளவு கஷ்டத்துல கடையை நடத்திக் கிட்டிருக்கேங்கறதை நீ புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறியே. நம்ம கடை டெவலப்மெண்டுக்கும், புள்ளை சீனுவாசனோட படிப்புக்குமா கடன்வாங்கி, அதை அடைக்க முடியாமல் நம்ம வீட்டை அடமானம் வெச்சுத்தானே அந்த கடனை அடைச்சேன். மறந்துட்டியா என்ன? மறுபடியும் எப்படிடீ அடமானம் வைக்கறது? கடையைத்தான் வைக்கணும்அவர் அழுவதைப் போல பேசினாலும் வசுந்தரா விடிவதாக இல்லை.

     “என்னங்க நீங்க, சொன்னதையே சொல்லிக்கிட்டு அழுவுறீங்க. பணமாங்க முக்கியம்?, இன்னிக்கு செலவு செஞ்சா நாளைக்கு சம்பாதிச்சுக்கலாம். முதல்லே நம்ம பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்தாலமுன்னு யோசனை பண்ணுங்க.பிடிவாதம் பிடித்தாள் வசுந்தரா. மகன் சீனுவாசனும் கல்லூரியில் பி.காம். இறுதியாண்டு படிக்கிறான். அவன் கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்துக் கொடுத்தே கடை காலியாகிவிட்டது.  அந்த மகனும் எதையும் புரிந்து கொள்ளாமல் தனது இஷ்டம்போல செலவு செய்துகொண்டு ஜாலியாக இருந்து வந்தான்..

     சுந்தரேசன் வேறு வழியின்றி தனது கடையை வங்கியில் அடமானம் வைத்து தனது புதல்வியின் திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்தினான்.  வசுந்தராவிற்கு மிக்க சந்தோஷம். பெண்ணிற்கு கல்யாணம் செய்வதுடன் எல்லாம் முடிந்து விடுகிறதா என்ன; அடுத்தடுத்தடுத்து மாதச் சீர்கள், ஆடிமாதம், தீபாவளி, பொங்கல், சீமந்தம் என்று எவ்வளவோ இருக்கிறதல்லவா.; அனைத்தையும் செய்துமுடிப்பதற்குள் சுந்தரேசன் திக்குமுக்காடிப் போனான்.  சுந்தரேசனின் துன்பங்கள் வசுந்தராவுக்குப் புரியாமலில்லை. ஆனாலும் என்ன செய்வது? வேறு வழியில்லையே, தனது மகளுக்கு செய்யவேண்டியதை எப்பொழுதாவது செய்துதானே தீரவேண்டும். எல்லாவற்றையும் எப்படியாவது சமாளித்துவிடலாம் என்ற எண்ணத்தில் இருந்தாள்.

     ஓரிரு வருடங்கள் ஓடிற்று. திடீரென ஒருநாள் வங்கியிலிருந்து வீட்டை ஜப்தி செய்ய ஆர்டர் வரவே சுந்தரேசன் செய்வதறியாது நிலைகுலைந்து போய்விட்டான்.  அவன் வங்கிக்குச் சென்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும், கெஞ்சிப்பார்த்தும் எந்தவித பலனுமில்லை.  ஒரு வாரத்திற்குள் வீட்டை காலிசெய்யச்சொல்லி ஆணையிட்டனர்.  ஒரிரு வாரத்திற்குள் வீடு ஏலத்திற்கு வந்துவிடும் என்றும் கூறி கைவிரித்து விட்டனர்.  வேறு வழியின்றி தனது வீட்டை காலிசெய்து தனது கடையின் பின்பகுதி அறையில் குடியேறினர்.  வசுந்தரா விக்கித்துப் போனாள். இப்படி ஆகுமுன்னு நான் கனவிலேயும் நினைக்கல்லியேஎன்று அழுதாள். ஆயிற்று ஒருமாதகாலம் பறந்தது. கடையின்மேல் வாங்கிய கடனும் வட்டி குட்டியென்று பெருகி அதுவும் கையைவிட்டுப் போயிற்று. வசுந்தராவும், சுந்தரேசனும், சீனுவாசனும் நடுத்தெருவிற்கு வந்துவிட்டனர்.

     சுந்தரேசன் தலைகுனிந்தபடி ஒன்றும் பேசாமல் சாலையின் நடைமேடையில் அமர்ந்திருந்தான்.  மகன் சீனுவாசனோ என்னப்பா இப்படி செஞ்சுட்டீங்க? நம்ம கௌரவம் என்ன, அந்தஸ்த்து என்ன, இப்போ நடுத்தெருவுல நிக்கிறாப்பல செஞ்சுட்டீங்களே அப்பா. இனிமே நான் எப்படிப் படிப்பேன், என் எதிர்காலமே பாழாப்போச்சேப்பாஎன்று சத்தம் போட்டான்.

     “என்னை ஏண்டா கோவிச்சுக்கறே? உங்கம்மாவைக் கேளூ, எல்லாம் உங்கம்மாவோட அளவுக்கு மேல் ஆசையினால வந்ததுதான். ஆடம்பர செலவு செய்யாமல், வரவுக்குள்ளேயே நமக்குத் தகுந்தபடி செலவு செஞ்சா நாம் கௌரவமா வாழலாம்.  கௌரவம்னு ஒண்ணும் தனியா இல்லை. நாம வாழறதைப் பாத்து மத்தவங்க நம்மை மதிக்கறதுதான். மத்தவங்க நம்மை பாராட்டணும்கறதுக்காக சக்திக்கு மேலே செலவு செஞ்சா யாருமே நம்மை மதிக்க மாட்டாங்க, எந்த கௌரவமும் கிடைக்காது.  நாம கஷ்டப்படறப்போ எவனும் வந்து உதவமாட்டான்.  மாறாக நமக்கு அட்வைஸ்தான் பண்ணுவான்.  பின்னாடி காரித்துப்புவான்என்று சுந்தரேசனும் பதிலுக்குக் கத்தினார்.

     சாலையில் சென்றவர்கள் அனைவரும் நின்று இவர்களைப் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் சென்றனர். எப்படியெல்லாம் ஆடினான் மனுசன்!  பொண்டாட்டி பேச்சைக் கேட்டே குட்டிசுவரானான். இப்போ மானம் மரியாதை எல்லாம் போய் நடுத்தெருவுக்கே வந்துட்டான் பாருஎன்று எள்ளிவிட்டுச் சென்றனர்.  வசுந்தராவின் மகளோ, மருமகனோ, சம்பந்தியோ அவர்களைச் சார்ந்தவர்களோ வந்து எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  சுந்தரேசனின் நண்பன் சோமுதான் விவரம் அறிந்து பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தான். தலைமேல் கைவைத்தபடி சாலையோரத்தில் அமர்ந்திருந்த சுந்தரேசனை ஆதரவாக அணைத்துக் கொண்டான். ஆறுதல் கூறினான். தனக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்று கோபித்தான். பிறகு தனக்குச் சொந்தமான சிறு இல்லத்தில் அவர்களை குடியமர்த்தினான். பிறகு சுந்தரேசனின் கடையில் ஜப்திபோக மீதமிருந்த துணிவகையறாக்களை ஒழுங்குபடுத்தி, அந்த வீட்டின் வாயிலில் உள்ள போர்ட்டிகோவில் கடைவைக்க ஏற்பாடு செய்து வேண்டிய சரக்குகளுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.  இனிமேல் கவலைப்படாதேடா சுந்தரேசா. இனிமேலாவது வரவுக்குள்ளே செலவு செய்யப் பழகிக்கோ.  எங்கிட்டே உதவி கேட்டுட்டோமேன்னு  மனசு கஷ்டப்பட்டுக்காதே. கடையை நடத்து, லாபம்வந்து கொடுக்க முடியும்போது திருப்பிக்கொடு போதும். என்ன?” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றான் சோமு.  அவனைக் கையெடுத்துக் கும்பிட்டனர் சுந்தரேசனும் அவன் குடும்பத்தாரும்.

     காலங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சோமு கொடுத்த வீட்டின் வாயிலில் வைத்த சிறிய கடை கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தது.  சுந்தரேசனின் மகன் சீனுவாசன் தனது படிப்பை முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தான்.  சுந்தரேசன் யாரையும் நொந்து கொள்ளவில்லை.  தன் மகன் கொடுக்கும் மாதச்சம்பளத்தைத் தன் கையால் தொட்டுக்கூடப் பார்பதில்லை. வசுந்தராதான் இப்பொழுதெல்லாம் குடும்ப பாரத்தை சுமக்கிறாள்.  இப்பொழுது அவளுக்கு எல்லாமே நன்றாகப் புரிந்து விட்டது.  இருப்பதை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்வதுதான் சிறந்தது என்பதை அவள் நன்கு உணர்ந்துகொண்டாள். 

     எவ்வளவுதான் உணர்ந்தாலும், எவரும் தான் செய்த செயல்களில் உள்ள தவறுகளை மட்டும் உணர்வதில்லை. அளவுக்குமேல் ஆசைப்பட்டதினால்தானே இருப்பதும்போய் துன்பப்படும் நிலை ஏற்பட்டது என்பதை மனம் ஏற்க மறுக்கிறது.  எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது நாம் அதற்கு பொறுப்பில்லை என்பது போன்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது.  அனைத்துமே தன் நிலை உணராது பிறரைப் பார்த்து அவரைப்போல இருக்க வேண்டும் என்ற பேராசையே காரணம் என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.  நாம் பிறக்கும்போதே நம் வாழ்க்கைவிதி விதிக்கப்பட்டதுதான். அதில் நாம் செய்யும் தவறுகள் ஏற்கப்படமாட்டாது.  அவைகளுக்கான பலன்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.  ஆனாலும் வாழ்வில் மீண்டும் வசந்தம் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறதே அதுதான் விதி என்பது. மொத்தத்தில் நாம் விதைத்ததை அறுவடை செய்யவைப்பதுதான் விதிச்செயல்.

     வசுந்தராவும் அப்படித்தான் சிந்தனை செய்தபடி காலத்தைக் கழிக்கிறாள். என்னுடைய நண்பர்களாகட்டும் சொந்தக்காரர்களாகட்டும், எல்லோரும் ரொம்ப சந்தோஷமாகவும் வசதியாகவும் குடும்பம் நடத்தறாங்களே, .நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமைஎன்கிற எண்ணம்தான் தினமும் அவள் மனதில் மேலோங்கி நிற்கிறது.  அதற்கு யார் பொறுப்பு? வருமுன் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக்கெடும் என்னும் திருக்குறளை யாரும் மதிப்பதில்லையா? இல்லை உணர்வதில்லையாநாம் செய்வதையெல்லாம் பின்விளைவுகளை சிந்திக்காமல் செய்துவிட்டு நமக்குமட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நொந்துகொள்வதினால் என்ன பயன்?

                                   *********








5.   மனம் சொல்லும் மாற்றங்கள்.

     கிருஷ்ணசாமி சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி உறங்கியவர் திடீரென்று கண்விழித்துப் பார்த்தார். தலையை சற்று தூக்கி சுவரில் மாட்டியிருந்த கடியாரத்தைப் பார்த்தார். அப்பொழுது மணி ஒன்று முப்பதைத் தொட்டுக் கொண்டிருந்தது.  கடியாரத்துக்கு சரியா நேரம் தெரியறதோ இல்லையோ வயித்துக்கு நல்லா நேரம் தெரியறது.  காலைல எட்டு மணிக்கும் மதியம் ஒன்றரை மணிக்கும் சரியா டான்னு வயித்துல மணி அடிச்சுடும்.என்று தனக்குள்ளாகவே சொல்லி சிரித்துக் கொண்டவர், சற்று தள்ளி தரையில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த தனது மனைவியைப் பார்த்தார்.  அந்த அம்மையார் மெல்லிய குரட்டை ஒலியுடன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

     “பாவம் இவள் தூங்கட்டும், தூங்கட்டும். இத்தனை காலமும் எத்தனை கஷ்டப்பட்டிருப்பாள்; இப்போதாவது நிம்மதியா தூங்கட்டும்.  பசி வயித்தைக் கிள்ளுது, என்ன செய்யறது? கொஞ்சம் பொறுமையாத்தான் இருப்போமே, இவள் மெதுவா தூங்கி எழுந்துக்கட்டும்என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டவர், பக்கத்தில் தரையில் இருந்த செம்பில் இருக்கும் தண்ணீரைக் குடிக்க குனிந்து, செம்பின்மேல் மூடியிருந்த தட்டை மெதுவாக எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு, செம்பை எடுத்து தண்ணிரைக் குடித்தார். பிறகு செம்பை மறுபடியும் அதே இடத்தில் வைக்கத் தலைப்படும்போது, செம்பு தவறுதலாக தட்டின் மேல்பட்டு தட்டு துள்ளிக் குதித்து தட்தடவென்று சப்தத்தை எழுப்பியது.

     சப்தம் கேட்டுக் கண்விழித்த அவரது மனைவி மரகதம் என்னங்க பசி வந்துட்டதா? மன்னிச்சுக்குங்க நேரம் போறது தெரியாம தூங்கிட்டேன்என்று சொல்லியபடி அரக்கப் பறக்க எழுந்தாள்.  பரவாயில்லை மரகதம், மெதுவா எழுந்திரு, படபடப்பிலே விழுந்துடப்போறேஎன்றார் பரிவுடன்.

     “எனக்கு ஒண்ணுமில்லீங்க. உங்களுக்குத்தான் ரொம்ப பசிக்கும். நேரமாயிடுச்சே. உங்களுக்கு டயாபடிக் வேறே. பசி தாங்கமாட்டீங்க. வாங்க எழுந்திருச்சி, கைகால் கழுவிட்டு, நான் நீங்க சாப்பிடறதுக்கு ரெடி பண்ணறேன்.என்று சொல்லியபடி மரகதம்மாள் எழுந்து கூனிக் குறுகியபடி ஓடினாள் அந்த தள்ளாத வயதிலும். தனது கணவர் ஏதாவது சொன்னாலோ அல்லது பார்த்தாலோ போதும் குறிப்பறிந்து அதை உடனே செய்துவிடுவாள். அப்படியொரு பாசம் மரியாதை அவர்மீது.

     “பாவம் மரகதம். இத்தனை நாளா இவளை எவ்வளவு அதிகாரம் செஞ்சிருப்பேன், அதட்டியிருப்பேன்: அதுக்கெல்லாம் இதுவரைக்கும் இவள் கொஞ்சம்கூட முகம் சுளிச்சதில்லையே. எல்லாத்தையும் பொறுமையாத்தானே செஞ்சுகிட்டிருக்காள். நான் ஏன் அதிகமா கோபபட்டு எல்லோரையும் விரட்டினேன்மகன், மகள், மருமகள்னு எல்லோரையும் பாடாய்ப் படுத்தியிருக்கேனே; ஆனால் யாருமே இதுவரையில் என்னை எதிர்த்துப் பேசியதில்லையே! பயமா, மரியாதையா?”.  அவரது சிந்தனையைக் கலைத்தது மருமகளின் சன்னக்குரல். மாமா தட்டு எடுத்து வெச்சாச்சு, சாப்பிட வர்றீங்களா?”

     “ம்..ம்..ம் என்றாரே தவிற பதில் சொல்லவில்லை.  மெதுவாக எழுந்து நடந்தார். உடல் சற்று தள்ளாடியது. சற்று நின்று நிதானித்துவிட்டு மீண்டும் நடக்க முயன்றார். முடியவில்லை. இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது மருமகள் பூமா சட்டென்று பாய்ந்து அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவளது தாங்கல் அவருக்குத் தேவைப் பட்டாலும் வேண்டாம் என்பதுபோல் தோளைக் குலுக்கி கையை அசைத்து அவளது பிடியைத் தள்ளலானார். பரவாயில்லை மாமா, புடிச்சுக்கறேன் வாங்கஎன்று அன்பும் பாசமும் பரிமளிக்க சொல்லியபடி அவரைத் தாங்கிப் பிடித்தபடி அவரை சாப்பிடும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

     கிருஷ்ணசாமிக்கு எல்லாம் சா¢யாக, முறையாக நடக்க வேண்டும்....எல்லாவற்றிற்கும் ஒரு முறை வைத்திருப்பார்.  அவர் சாப்பிட வருகிறார் என்றால் அவர் வந்து தட்டின் முன் காத்துக் கொண்டிருக்கக் கூடாது.  அவர் வருவதற்கு முன் எல்லாம் தயாராக இருக்கவேண்டும் அவர் வந்து தட்டின் முன் உட்கார்ந்ததும், முதலில் காய்கறிகளும் பின் அன்னமும் பா¢மாறப்பட வேண்டும்.  மாறாக ஏதும் செய்துவிட்டால் காட்டுக் கத்தல்தான்.  ஆனால் எதையும் எடுத்து வீசுவதோ உடைப்பதோ இல்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை. சரியாக இல்லையென்றால் எதிரில் இருப்பவரை சற்று கோபத்துடன் பார்ப்பார். அவ்வளவே. எப்பொழுதும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார்.  அதேபோல இன்றும் தரையில் தடுக்கு போட்டு அதன் எதிரில் தட்டு வைத்திருந்தார்கள்.  அவரை மெள்ளப் பிடித்து வந்து அமரவைத்தாள் மருமகள் பூமா.  அவருக்கு எதிரில் மரகதம் அமர்ந்திருந்தாள். தட்டில் ஏதும் பரிமாறாமல் இருந்தது. அவர் வந்து அமர்ந்து கொண்டதும் பரிமாறப்பட்டது.  மெதுவாக உண்டு முடித்தபின் மீண்டும் சாய்வு நாற்காலியில் சயனித்தார்.

     கிருஷ்ணசாமியின் மனத்தில் ஏதொ நெருடல் இருந்துகொண்டே இருந்தது. அவரது மனமோ பின்னோக்கி ஓடியது.  அவர் ஒரு உயர்பதவி வகித்த அரசாங்க அலுவலர்.  அனைவரையும் தனது பார்வையாலேயே அடக்கி ஆண்டுகொண்டிருந்தவர்.  அவர்கீழ் பணிபுரிவோர் ஏதாவது தவறுதலாகத் தவறு செய்துவிட்டாலோ, அல்லது அவர் கூப்பிட்டவுடன் அவர்முன் ஆஜர் ஆகாவிட்டாலோ மனிதருக்கு மூக்கின்மேல் கோபம் வந்துவிடும்.  தாம்தூமென்று குதிப்பார். அதனால் அவரைக் கண்டால் அனைவருக்கும் சிம்ம சொப்பனம். அவருக்கு விஸ்வாமித்திரர் என்று பெயரிட்டிருந்தார்கள். தானெனும் கர்வம் அவரிடம் அதிகமாக மேலோங்கி நிற்கும்.  ஆனால் மிகவும் இரக்க சுபாவமுள்ளவர்.  மற்றவர்கள் துன்பப்படுவதையோ, வறுமையால் வாடுவதையோ கண்டு மனம் பொறுக்கமாட்டார்.  அவர்களைக் கூப்பிட்டு விசாரிக்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை தன்னால் இயன்றளவு செய்வார். என்னதான் இளகிய மனம் இருந்தாலும் அவரது கோபம் மற்றவர்களை அவாரிடம் நெருங்க விடாது.  தாமாகப் போய் அவா¢டம் ஏதாவது உதவி கேட்டால் கோபித்துக்கொண்டு விடுவாரோ என்கிற பயம்தான் மற்றவர்கள் மனத்தில் நிலைத்து நிற்கும்.

     கிருஷ்ணசாமியே பலசமயங்களில் தன்னைத்தானே நொந்து கொள்வார்.   எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வர்றதுகொஞ்சம் நிதானமா இவங்ககிட்டே பேசியிருக்கலாமோ? யார்தான் தப்பு செய்யறதில்லைநான்தான் இந்த உலகத்திலேயே பர்·பெக்டானவனோ? ஒரு தவறும் நான் செய்ததில்லையோமத்தவங்க தவற்றை சுட்டிக்காட்டி நிதானமா அமைதியா திருத்திக்கச் சொல்லலாமே தவிற அவர்களைத் திட்டற உ¡¢மையை எனக்கு யார் கொடுத்தாங்கநான் ஏன் இப்படி நடந்துக்கறேன்நான் ரொம்ப பொல்லாதவனோகோபக்காரனோ? எல்லோரையும் கொடுமைப் படுத்தறவனோகல்நெஞ்சக் காரனோஈவு இரக்கமே என்கிட்டே இல்லையோஆனால், யாராவது கஷ்டப்படறதைப் பார்த்தாலோ, உதவின்னு கேட்டாலோ தயங்காமல் அவங்களுக்கு உதவறேனே.! அப்படியும் நான் மத்தவங்க கண்ணுக்கு பொல்லாதவனாத்தான் தெரியறேன் போலயிருக்கு”. என அவரது மனத்தில் கேள்விகள் அடிக்கடி ஆணவக்காரனாகவே காட்டிக் கொண்டிருந்தது..

      அதனால் இவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நண்பர்கள் இல்லை. அப்படி இருக்கும் ஓரிருவர் கூட கிருஷ்ணசாமி ரொம்ப கோவக்காரண்டா, அவன்கிட்டே ரொம்ப ஜாக்கிரதையாத்தான் பழகணும்என்று பேசிக்கொள்வர். ஆனால் கிருஷ்ணசாமிக்கும் ஒரு பால்ய நண்பர் இருக்கிறார். அவர்பெயர் நாராயணன். கிருஷ்ணசாமி வசிக்கும் தெருவிற்கு இரண்டு தெருக்கள் தள்ளித்தான் நாராயணனின் இல்லம் இருக்கிறது.

     கிருஷ்ணசாமிக்கு இப்பொழுதெல்லாம் தன்னைப் பற்றியே சற்று வியப்பாக இருக்கிறது. அவர் தனக்குத்தானே புலம்பிக்கொண்டார்.  இப்போ எல்லாமே தலைகீழா மாறிட்டதோஏன்இப்படி? நான்திருந்திட்டேனோ?  இல்லை எனக்கு விவேகம் வந்துட்டதோ?. இல்லை, வயசானாலே எல்லாமே அடங்கிடுமோஎன்னை என்னாலேயே நம்பமுடியல்லையே! இப்போ இருக்கிற மாதிரி முன்னயெல்லாம் பொறுமையா இருந்திருந்தா, எனக்கு ஏகப்பட்ட மரியாதையும், ·ப்ரண்ட்ஸ¤ம் கிடைச்சிருப்பாங்களே!; ஹ்ம்..ஹ்ம்.. எல்லாம் விதிப்படிதானே நடக்கும்.  இப்போ நொந்துகிட்டு என்ன பண்ணறது? ஏதோ ·ப்ரண்டுன்னு சொல்லிக்க நாராயணன் மட்டும் இல்லேன்னா, எனக்கு பயித்தியமே புடிச்சுடும்என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டிருக்கும் போதே, “என்னடா கிருஷ்ணா, என்னைத் தான் திட்டிண்டிண்டிருக்கியோஇங்கே வர கொஞ்சம் லேட்டாயிடுத்துடா.சாரி.., வெரி வெரி சாரிடாஎன்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் நாராயணன்.

     “வாடா நாராயணா, வா வா  வந்து உட்கார்  என்று தனது பக்கத்து இருக்கையைக் காட்டினார் கிருஷ்ணசாமி.,   நாராயணன் சிரித்தபடியே வந்து கிருஷ்ணசாமியின் அருகின் அமர்ந்து கொண்டார். சற்றுநேரத்தில் மரகதம் அம்மாள் அவர்கள் இருவருக்கும் காபி கொண்டுவந்து கொடுத்தாள்.

     “வந்துட்டேன். தினமும்தான் வந்துண்டிருக்கேனேகழுதை கெட்டால் குட்டிச்சுவர்தானேஎன்று ஏதோ ஹாஸ்யம் சொல்லி விட்டதைப்போல கலகலவென்று நகைத்தார் நாராயணன். எனக்கொண்ணும் உன் ஹாஸ்யத்தால சிரிப்பே வரலைடா நாராயணா.  அதுசரி கழுதை குட்டிச்சுவர் கிட்டேதான் நிற்குமா? அது என்ன லாஜிக்? எல்லோரும் இதையே சொல்லி அலையறீங்க.  சாரிடா, உன்னை காபி குடிக்க விடாம நானே பேசிகிட்டே இருக்கேன். நானும் காபி குடிக்கணுமேஎன்று சொன்னவர் காபி வைத்திருந்த பக்கம் தன்கையைக் காட்டி அவரை எடுத்துக்கொள்ளச்சொல்லிவிட்டு தானும் காபியை எடுத்து உறிஞ்சவாரம்பித்தார் கிருஷ்ணசாமி.

     “ஏண்டா நாராயணா, அப்போ நீ கழுதை நான் குட்டிச்சுவரா? என்னை குட்டிச்சுவர், ஒண்ணுக்கும் உபயோகமில்லாதவன்னா சொல்றே?” பொய் கோபத்துடன் நாராயணனைத் தட்டினார்

     “நான் கழுதையுமில்லை, நீ குட்டிச்சுவருமில்லை. நீதான் பெரிய மதில் சுவராச்சே. உன்னைப்போல பெரிய மனசுக்காரன் யாருடா இருக்க முடியும்?” இருவரும் கலகலவென நகைத்தனர்.

     “ஏண்டா நாராயணா, உனக்குமட்டும் எப்படிடா ஹாஸ்யமா சிரிக்கச் சிரிக்க பேசவர்றது? எனக்கு அப்படி பேச வரமாட்டேங்கறதேடா;”

     “போடா இது என்ன கம்பசூத்திரமா, வர்றதுக்கு.  முயற்சி பண்ணனும்டா, முயற்சி பண்ணனும். சும்மா சொல்லப்படாதுடா கிருஷ்ணா நீ வளர்ந்தவிதமும் வாழ்ந்த விதமும் அப்படி. நீ என்னடா பண்ணுவே? போனதெல்லாம் போகட்டும், இப்போலேர்ந்து முயற்சி பண்ணலாமே, பண்ணு தானா பழகிடும்

     “ஆமாண்டா, இருக்கற காலமெல்லாத்தையும் விட்டுட்டு சாகப்போற காலத்துல சங்கரா சங்கரான்னு சொன்னா மோட்சம் கிடைச்சுடுமா என்ன?”

     “மோட்சமெல்லாம் ஹாஸ்யமாப் பேசினா கிடைக்காதுடா, சங்கரனை நினைக்கணும்.  ஆனால், சாகப்போற காலத்துல ஹாஸ்யம் பேசப்படாதுன்னு உனக்கு யார் சொன்னா? எந்த வயசுல சிரிக்கச் சிரிக்கப் பேசினாலும் நமக்கும் சரு மத்தவாளுக்கும் சரி மனசு லேசாயிடும்டா. எப்போ சாகப்போறோம்னு யாருக்கும் தெரியாது, அதுவரைக்கும் சந்தோஷமா இருப்போமே, காசா பணமா செலவாறதுக்கு? என்ன நான் சொல்றது?” சொல்லி சிரித்தார் நாராயணன். முயற்சி பண்ணறேண்டா, அஞ்சுல வளையாதது அம்பதுல வளையுமா என்ன?”

     “வளையணும்னா வளைஞ்சுதாண்டா ஆகணும், சூடு பண்ணினா எல்லாமே வளைஞ்சுதானே ஆகணும். இப்போ உன்னையே எடுத்துக்கோயேன். முன்னேயெல்லாம் இப்படி உன் எதிரிலே உட்கார்ந்து பேசமுடியுமா என்ன/ எங்கே கோவிச்சுப்பியோன்னு பயந்துண்டேதான் பேசணும். ஆனால் இப்போவெல்லாம் நீ மாறல்லியா என்ன? மாற்றம் எப்போ வேணும்னாலும் வரும்டா கிருஷ்ணா

     “ஏண்டா நீயும் என்னை கோபக்காரன்னே முத்திரை குத்திட்டயா? நீயே சொல்லு உங்கிட்டே இன்னிவரைக்கும் நான் கோபமா பேசியிருக்கேனா? இல்லை முகத்தைத்தான் கோணியிருக்கேனா? நீயே சொல்லுடா. நான் கோபக்காரனா?”

     “அப்படி சொல்லல்லேடா கிருஷ்ணா, நீ என்கிட்டே கோபப்பட மாட்டேதான், ஆனால், சாதாரணமா யாராவது உன்கிட்டே பேசினாக் கூட ரொம்ப மரியாதையை எதிர்பார்ப்பியே. நீ நேரடியா கோபப்படலைன்னாகூட அப்போ உன்னோட முகம் காட்டிக் கொடுத்திடுமே. அப்போ நீ பார்க்க கொஞ்சம் பயங்கரமாய்த்தான் இருப்பேடா கிருஷ்ணா. த்தோ, த்தோ இதோ பாரேன், இப்போகூட உன் முகம் மாறிண்டு வர்றதேடாஎன்றுகூறி அவரை லேசாகத்தட்டிச் சிரித்தார் நாராயணன்.

     கிருஷ்ணசாமி வாய்விட்டுச் சிரித்தார். பதில் ஒன்றும் சொல்ல வில்லை.  சிறிது நேரத்திற்குப் பிறகு பேசவாரம்பித்தார். இருந்தாலும் அவரது கண்கள் எங்கோ சூனியத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, மனமும் எங்கோ சஞ்சரித்தபடி இருக்க அவரது உதடுகள் மட்டும் பேசவாரம்பித்தன.

     “நாராயணா, உனக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ, நான் என்னைப் பெத்தவங்களுக்கு முதல் பிள்ளையில்லையா; அதிகமா செல்லம் கொடுத்து வளர்த்துட்டாங்க. அதுவும் என் தாயார், கிருஷ்ணனுக்கு அது பிடிக்காது, இது பிடிக்காது, அவனுக்குக் கோபம் வந்துடும் அது இதுன்னு சொல்லிச் சொல்லியே மத்தவங்களை பயமுறுத்தி, என் தம்பி தங்கைகள் என்னோட சகஜமா பழகறமாதிரி இருந்தாலும் எனக்கு எப்போ எதற்குக் கோபம் வந்துடுமோன்னு பயந்து பயந்தே என்கிட்டே பழகுவாங்க. ஆனால் அப்போ எனக்கு எதுவுமே புரியாது. ஏன் எங்கிட்டே எல்லோரும் பயப்படறாங்க, சகஜமா பழகமாட்டேங்கறாங்கன்னெல்லாம் யோசிப்பேன்.  ஆனாலும் மத்தவங்க எங்கிட்டே மரியாதை காட்டறதும் பயத்தோட பழகறதும் மனசுக்கு ஒரு சுகமாகத்தான் இருந்தது.  வீட்டிலே மூத்த பிள்ளையாப் பொறந்தா கொஞ்சம் கர்வத்தோட தான் நடந்துக்கணும் போலன்னு நினைச்சு அதையே டெவலப் பண்ணிட்டேன்.  என் அப்பாவும் ரொம்ப கௌரவம் பார்ப்பார். வீட்டிலே எல்லோரும் அவருக்கு அடங்கி நடக்கணும்னு எதிர்பார்ப்பார். ஆனால் பாசத்தாலே என் சொல்லுக்கு மட்டும் கட்டுப்படுவார்  அதுகூட எனக்கு என் அப்பா என்கிட்டே பாசமாப் பழகறாங்கிறது புரியாம அடங்கிப் போறார்ன்னே நினைச்சு என் மனசுலே கர்வத்தை வளர்த்துக்கிட்டேன்னு நினக்கிறேண்டா.

     “அம்மா கொஞ்சம் அந்தக்காலத்துப் பொம்பளை. புருஷனுக்குப் பயப்படுவா, மரியாதையா நடந்துக்குவா, எதிர்த்துப் பேசமாட்டா. அதுமட்டுமில்லை, ஆண்பிள்ளைன்னாலே அவனுக்கு மரியாதை கொடுக்கணும்கிற பாரம்பரியத்தனத்துல ஊரிப்போனவள். சாண் பிள்ளை யானாலும் ஆண்பிள்ளை, ஆண்பிள்ளைதான் என்பாள். அப்படி ஒரு வளர்ப்பு.  இதுதாண்டா என்னோட வீராப்பின் அஸ்த்திவாரமேசற்று நிறுத்தினார் கிருஷ்ணசாமி.

     “அதுதானே நம்மோட பாரம்பரியம். பொம்பளைங்க ஆம்பளைகளுக்கு மரியாதை கொடுத்துக் கொடுத்தே அவங்களை கோபக்காரங்களாகவும், ஆணவக்காரங்களாகவும், சர்வாதிகாரிகளாகவும் மாத்திடறாங்களே. இதுதான் அன்னிலேர்ந்து இன்னிவரைக்கும் நடந்துக்கிட்டுவர்ற கலாச்சாரம். இந்த காலத்துப் பெண்கள் அதை மாத்தணும்னு போராடறாங்க. அதுல அவங்க நடந்துகறதுல பாதி சரி, பாதி சரியில்லை. எல்லாத்துக்கும் அவங்க சொல்றதுதான் சரிங்கறமாதிரி நடந்துக்கறாங்க.நாராயணன் ஆதங்கப் பட்டார்.

     “வாஸ்த்தவம்தான் நாராயணா.  இப்போ கொஞ்ச வருஷங்களாத்தானே பெண்கள் தங்களைப் புரிஞ்சுண்டு தாம் அடிமையா வாழ்ந்திண்டிருக்கோம்னு நினைச்சு, ஆண்கள் என்னவோ அவங்களை அடிமைப் படுத்தறமாதிரி சொல்லிண்டிருக்காங்களே அது நிஜமா சொல்லு. பெண்கள் தானே, தாமே ஆண்களுக்கு அடங்கிப்போய் அடிமைபோல உழண்டுகிட்டிருந்தாங்க, இப்போ என்னடான்னா வாய்கிழிய கத்துறாங்க? பெண்களுக்கு சுதந் திரம் வேணும் சுதந்திரம் வேணும்னு. ஆனால் முப்பது நாப்பது வருஷமா ஆண்கள் பெண்களை அடிமைப் படுத்தறதில்லை. பெண்கள்தான் அடிமை மாதிரி படிப்பறிவில்லாமல் மத்தவங்ககிட்டே புறம் பேசிகிட்டு, தமக்கு ஒன்றுமே தெரியாதுங்கறமாதிரி கற்பனை பண்ணிக்கிட்டு வாழ்ந்துகிட்டு ஆண்களைக் குறை சொல்றாங்க.  ஆண்கள்தான், ‘ஐயோ பாவம் இதுகள் அறிவில்லாமல் நடந்துக்கறதுகள், இவங்களுக்கு படிப்பறிவைக் கொடுத்தால் இவங்களும் சுயமரியாதையோட ஆண்களுக்கு அடிமைப் படாமல் ஆண்களுக்கு சமமா வாழட்டும்னு அவங்களுக்கு கல்விகற்க ஏற்பாடு செஞ்சுகொடுத்து, ஆண்களுக்கு சமமா வெளியிலே போய்வந்து உலகத்தை பு¡¢ஞ்சுக்கட்டும்னு எவ்வளவோ சலுகைகளை கொடுத்தாங்க. இப்போ பெண்கள் ஆண்களைவிட அதிகம் படிப்பதோடயில்லாமல் பெண்களுக்கு தனியுரிமை வேணும், பெண்ணடிமை ஒழியணும், ஆண்களுக்கு நாங்கள் ஒன்றும் குறைவில்லை, உலகையே ஆளும் அதிகாரம் வேண்டும் என்றெல்லாம் கோஷம் போட்டுகிட்டு, படிச்சிருந்தும் அறியாமையாலே கோஷம் போட்டுக்கிட் டிருக்காங்க.கிருஷ்ணசாமி பேச்சை நிறுத்திவிட்டு கொஞ்சம் மூச்சுவிட்டார். தொடர்ந்து உணர்ச்சி வயப்பட்டு பேசியதால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

     “கிருஷ்ணா உணர்ச்சிவயப்படாதேடா. நீ என்ன ஆண் ஆதிக்கம் உள்ளவனா? இல்லையே, பெண்ணடிமை ஒழியணும்னு நீயும் நானும் சின்ன வயசிலே போராட்டங்களிலே கலந்துகிட்டும் மேடையிலே பேசிகிட்டும் இருக்கல்லியா என்ன?”- நாராயணனின் இடைப் பேச்சு இது.

     “ஆமாமாம், இதெல்லாம் யாருக்குத் தெரியப்போறது? ஏண்டா, நாராயணா, இப்போல்லாம் பெண்கள்தானே ஆண்களைவிட அதிகம் மார்க் வாங்கறாங்க. எல்லா படிப்பிலேயும் முதல் இடத்திலேதானே இருக்காங்க. இன்னும் அவங்களுக்கு என்ன வேணுமாம்ஆண்கள்தான் பின்தங் கிட்டாங்களே.

     “ப்பூ..இவ்வளவுதானா நீ தெரிஞ்சுகிட்டது? ஆண்களைவிட மார்க் எடுக்கலாம் ஆனால் ஆண்களைவிட தொழிலில் முன்னேற முடியாது. அண்மையிலே டி.வி. நிகழ்ச்சியிலே ஒரு பெண்மணி இதைத்தான் சொன்னாள், நீ கேட்கலையோ? பெண்கள் எல்லா பாடங்களையும் மனப்பாடம் செஞ்சுடறாங்களாம். அதை அப்படியே பரீட்சையிலே கொட்டிட றாங்களாம். அவங்க மனசை ஒருநிலையிலேயே வெச்சுண்டு ஒரு விஷயத்துலதான் கவனம் செலுத்தறாங்க. ஆனால் ஆண்கள் எல்லா விஷயத்துலயும், சுத்தி நடக்குற எல்லாத்துலேயும் கவனம் செலுத்தறாங்க. அதனால தேர்வுகள்ல குறைஞ்ச மார்க்கு எடுத்தாலும் வேலையில தன் திறமையைக் காட்டுறாங்க. இதுதான் இப்போதய நிலைமை புரிஞ்சுக்கோ”.

     “சரிடா, அதெல்லாம் இருக்கட்டும் நாம பேசவந்த விஷயத்தை விட்டுட்டு எதையோ பேசிண்டிருக்கோமே. இப்போ என் விஷயத்துக்கு வா. அப்பா, அம்மா, தம்பி, தங்கைன்னு அத்தனைபேரும் என்னை ஒரு பெரிய மனுஷனாத்தான் மதிச்சாங்க. அதனால என் பெண்டாட்டி பிள்ளைகளும் அப்படித்தானேடா மதிக்கறாங்க. வீட்டில ஒரு வேலையும் செய்ய விடறதில்லை. ஒரு வென்னீர் வெக்கக்கூடப் பழனதில்லைடா நாராயணா. ஏன், என்னோட துணிகளைக்கூட நான் துவைச்சுக்க பழகவிடல்லியே.  நானும் அதெல்லாம் செய்யத் தெரிஞ்சுக்கவும் இல்லையே. அப்படி நான் ஏதாவது செய்ய முயன்றால் கூட, சின்னவயசுல சின்னப்பையன், வாலிப வயசுல படிக்கற பையன், சம்பாதிக்கிற வயசுல வேலைக்குப்போய் கஷ்டப்பட்டு சம்பாதிக்கறவன் அப்படி இப்படின்னு சொல்லியே என்னை சோம்பேரியாவே வளர்த்துட்டாங்கடா. சரி, ·பீஸ்ல போய் வேலை செய்யலாம்னாலும், என் அதிர்ஷ்டம், அரசாங்கவேலை. பெரிய படிப்பெல்லாம் படிச்சதினாலே அதிகாரியாவே போய் சேர்ந்து அங்கேயும் அதிகாரம் பண்ணி மத்தவங்களை வேலை வாங்கற வேலை. இதெல்லாம் எனக்கு உலகத்தை புரிஞ்சுக்கற, அதை ஆளற அந்தஸ்த்தைக் கொடுத்ததே தவிர, மத்தவங்களுக்கு அடங்கிப்போகணும்கிற மனோபாவத்தை ஏற்படுத்தல்லே. நான் ரொம்ப பர்·பெக்ஷனை எதிர்பார்க்கறதினால, என்கீழே வேலை பார்க்கறவா என்னைப் பார்த்து பயப்படுவா. அதேமாதிரி என் மேல் அதிகாரிகளும் என்னை ரொம்ப அதிகாரம் பண்ணமாட்டா. என் நேர்மை, பர்·பெக்ஷன் அந்தமாதிரி. இதுல உண்மை என்னன்னா, இதுவரைக்கும் நான் யாரிடமும், கோபமாகவோ, அதிகாரம் பண்ணியோ வேலை வாங்கினதில்லை. மெதுவாத்தான் பேசுவேன், அதுல ஒரு உறுதி இருக்கும். அதை எல்லோரும் நான் கோபமாப் பேசுறேன்னு நினைச்சா அதுக்கு நான் என்னடா பண்ணமுடியும்? இப்போ நீயே சொல்லு, நான் கோபக்காரனா? அவங்க அப்படி நினைக்க நானா காரணம்எல்லோருமா சேர்ந்து எனக்கு மரியாதை கொடுத்து, மரியாதை கொடுத்தே என்னை சோம்போ¢யாகவும், கோபக்காரனாகவும் ஆக்கிட்டாங்க இல்லையா?” அவரது குரலில் பரிதாபம் தெரிந்தது.

     “எல்லாம் சரிதான், இப்போ அதை நினைச்சு ஆதங்கப்பட்டுக்கிறியே, அப்போவே நீ மத்தவங்களை மீறி உன் வேலைகளை நீயே செய்ய பழகிக்கிட்டிருக்கலாமே

     “அதாண்டா சொல்றேன் யாருமே என்னை என் வேலைகளை செஞ்சுக்கக்கூட விட்டதில்லையே

     “அது தப்பு, நீ சொல்றதை ஒத்துக்கமுடியாது. உனக்கு, உன்னோட வேலைகளை நீயே செஞ்சுக்கணும்னு ஒரு பிடிவாதம் உனக்குள் இருந்திருந்தா, உன்னை யாராலே தடுத்திருக்க முடியும்? சொல்லு. அப்போல்லாம் மத்தவங்க உன்னை மதிக்கிறாங்கங்கற திமிர், ஆணவம் எதுவும் செய்ய, கத்துக்கல்லேநாராயணன் உண்மையை எடுத்துரைத்தார்.

     கிருஷ்ணசாமி கோபித்துக் கொள்ளவில்லை. மௌனமாயிருந்தார். சற்று நேரம் கழித்துப் பேசினார். ஆமாண்டா நாராயணா, நீ சொல்றதும் சரியாத்தான் இருக்கணும்என்றவர் சற்று தாழ்ந்த குரலில், “எனக்கும் அப்போல்லாம் கொஞ்சம் கர்வம் இருந்ததுன்னுதான் நினைக்கிறேன். யாரையும் மதிக்கறதில்லை, என்னை விடச்சின்னவங்க எதைச் சொன்னாலும் கேட்கறதில்லை. வெளியில என்னைவிட கொஞ்சம் தாழ்ந்த நிலையில இருக்கறவங்களையும் கொஞ்சம் கிண்டலும் கேலியுமாத்தான் பேசுவேன். நிறைய அட்வைஸ் பண்ணுவேன். இப்போதான் எனக்கு எல்லாமே புரியறதுடா நாராயணா.

     “கிருஷ்ணா, ரொம்ப ·பீல் பண்ணாதேடா. உன் மனசறிஞ்சு நீயா எந்த தப்பும் பண்ணல்லை. உன்னை வளர்த்ததில்தான் தவறு நேர்ந்திருக்கு. அதையும் தவறுன்னு சொல்லமுடியாது. இந்தமாதிரி புள்ளைங்களை வளர்க்கிறதுங்கிறது உன் குடும்பத்துல மட்டும் நடக்கிறதில்லை, நிறைய குடும்பத்துல நடக்குற நடப்புதான்.  உனக்கு      இப்போதான் புரியறது, பலருக்கு எப்பவுமே புரியறதில்லை. அதனாலதான் பல குடும்பத்துல, வயசானவங்களை வீட்டை விட்டே வெளியே அனுப்பிடறாங்கடா. கொஞ்சம் மனச்சாட்சியும், நன்றி உணர்வும் இருக்கிறவங்க முதியோர் இல்லத்துல சேர்த்துடறாங்க. ஆனால் உனக்கு அந்த நிலைமை ஏன் வரலைன்னு யோசிச்சுப்பாரடா கிருஷ்ணா. உனக்கே எதுனாலைன்னு நன்னாப் புரியும்என்று நிறுத்தினார் நாராயணன்.

     “ஆமாண்டா நாராயணா, எனக்குப் புரியுது. நான் என் அப்பா அம்மா மாதிரி இல்லை, என்குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்தாலும் அவங்களை எனக்கு சரிசமமா பழகவிடறேன். அவங்க வேலைகளை அவங்களே செஞ்சுக்கவும் பழகிக்கவிட்டிருக்கேன். என் மனைவியும் அப்படியேதான் செய்யறாள்.  அப்படி சகஜமாப் பழகியும் அவங்களுக்கு என்மேலேஇருக்கிற மரியாதையும் பயமும் போகலையேடா. எவ்வளவோ குடும்பத்துல வயசானவங்க தங்களோட பிள்ளை குட்டிகள், பேரன் பேத்திகளோட வாழறதில்லையே. நானும் கேள்விப்பட்டும் கவனிச்சுக்கிட்டும்தானே இருக்கேன். ஒண்ணு, மாமனார், மாமியார், மருமகள் ஒத்துமை இல்லாதது, எதுக்கெடுத்தாலும் பெரியவங்க சின்னவங்கமேலே ஏதாவது குத்தம் குறைகளைக் கண்டுபிடித்து கண்டிப்பது, அதனால சின்னவங்களுக்கு பெரியவங்களைப் பிடிக்காமல் போவது, இல்லைன்னா, பிள்ளைகள் பெரிய படிப்போ, சின்ன படிப்போ படிச்சு முடிச்சதுக்கப்புறம் அயல்நாட்டுல வேலை தேடிண்டு, கல்யாணமும் செஞ்சுகிட்டு அங்கேயே பிள்ளை குட்டிகளோட செட்டில் ஆயிடறதுன்னுதானே இப்போல்லாம் நடந்துகிட்டு வர்றது. ஆனால் நான் பாக்கியம் செஞ்சவன். நான் பிள்ளை குட்டிகளோட, மருமகள், மாப்பிள்ளை பேரன் பேத்திகள்னு ஜாம்ஜாம்னு வாழ்ந்துகிட்டிருக்கேன். ஆனால் நான் கண்டிப்பானவந்தான், ஆனால் அன்புள்ளவன். இருந்தாலும் இன்னி வரைக்கும் என் பெண்டாட்டி ஆகட்டும், பிள்ளைகள், மருமகள் ஆகட்டும் ஒருவித பயத்தோடவும் மரியாதையோடவும் இருக்கிறாங்களே ஏன் என்கிட்டே சகஜமா சி¡¢ச்சுப் பழகமாட்டேங் கிறாங்க? அதுதாண்டா பு¡¢யல்லை நாராயணா?” அங்கலாய்த்தார் கிருஷ்ணசாமி.

     சிறிது நேரம் கிருஷ்ணசாமியின் முகத்தையே உற்றுப்பார்த்தார் நாராயணன். பிறகு ஏதோ யோசித்தார். பிறகு அவர் பக்கத்தில் நெறுங்கி அமர்ந்தவர், “கிருஷ்ணா, நீ சரியாத்தான் வாழ்ந்துண்டிருக்கேன்னாலும் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கே. நீ ரொம்ப நல்லவண்டா.  அது உனக்கே தெரியல்லேடா.  சரி, உனக்கு இப்போ எத்தனை வயசாறது?”

     “அது..அது.. வந்து ஒரு எண்பத்தி இரண்டு இருக்கும்

     “சரி எனக்கும் அதே வயசுதான் ஆறது. ஆனால் நான் எப்படி இருக்கேன்? உனக்குத் தெரியுமா?”

     “ஏன் உனக்கு என்ன குறைச்சல்? ராசாவாட்டமா, நல்ல குடும்பத்தோட சந்தோஷமாத்தான் இருக்கே”.

     “அதுதான் இல்லை, உன் நினைப்பு தப்பு

     “நாராயணா என்னடா சொல்றே நீ? நீ சந்தோஷமா இல்லையா?” கிருஷ்ணசாமியின் குரலில் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் தொனித்தது.

     “முழுசா சந்தோஷமா இல்லைன்னு சொல்லமுடியாது., ஆனால் என் மனசுக்கு திருப்தியில்லை.

     “ஏண்டா குழப்பறே? நீ வேற, உன் மனசு வேறயா என்ன?”

     “ஆமாண்டா, வர்றதை ஏத்துகிட்டு சந்தோஷமா இருக்கேன்

     “புரியல்லியே

     “நான் யார், எப்படிப்பட்டவன்னு உனக்குத்தெரியுமா? நான் மஹா ரோஷக்காரண்டா. ரொம்ப முன்கோபக்காரன். எனக்கும், நேர்மை, நியாயம், உண்மை, சத்தியம் இதுதான் பிடிக்கும். ஏன் என் உடம்பிலேயே ஊ¡¢ப்போனது. என் மனசுக்குப் பிடிக்காமல் யார் என்னிடம் நடந்துகிட்டாலும் சட்டுன்னு எனக்கு கோபம் வந்துடும். எனக்கு யாருடனும் கல கலப்பாகப் பேசவோ பழகவோ தெரியாது. உம்.ம்.னுதான் இருப்பேன். உம்மணா மூஞ்சின்னு எனக்கு எல்லோரும் பெயர் வெச்சிட்டாங்கன்னா பார்த்துக்கோயேன்.  என்னோடு கூடப் பிறந்தவங்க மூணுபேர் உண்டு. அவங்கள்ல பெரியவர் உன்மாதி¡¢, எல்லோரையும் அடக்கி தன் கண்ட்ரோல்லேயே வெச்சுக்குவார். அதனால அவர்கிட்டே யாருமே நெறுங்கிப் பழகி, பேசமாட்டோம். இரண்டாவது அண்ணன் வீட்டிலேயே இருக்க மாட்டான்.. ஏதோ பிஸினஸ் பிஸினஸ¤ன்னு வெளியிலேயே இருப்பான். அதனால அவனோடவும் அதிகம் பேசிட, பழகிட முடியாது.  மூணாவது அண்ணன்தான் கொஞ்சம் அதிகமாக சம்பாதிக்கிறவன். அவனும் மூத்தவரும் சேர்ந்துதான் குடும்ப வரவுசெலவுகளைச் செய்வார்கள். எங்கள் அப்பா ரொம்ப சாது, யாருடனும் அதிகம் பேசமாட்டார். ஒருவார்த்தை பேசினாலும் மிகவும் சரியாக இருக்கும். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். இப்படி இருக்கும் பொழுது மூன்றாவது அண்ணன்தான் வரவு செலவுகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பில் இருந்ததால், வீட்டில் ஏதாவது பற்றாக்குறை இருந்தால், அதை அம்மா சொன்னால் எப்பொழுதும் திட்டுவதும் எரிந்து விழுவதுமாகவே இருப்பான். இருந்தாலும் எல்லோரது குணாதிசயங்களையும் பொறுமையாக அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு அம்மா குடும்ப மானத்தைக் காப்பாற்றுவாள். ஆனால் அவளது மனது எப்பொழுதும் வருத்தத்துடனேயே இருக்கும். நான் கொஞ்சம் அம்மாக்கோண்டு, எப்பொழுதும் அம்மாவுடனேயே பேசிக்கொண்டிருப்பேன். கூடுமானவரையில் நான் என் அம்மாவிடம் என் கோபத்தையோ சிடுசிடுப்பையோ காட்டமாட்டேன்.  ஏன்னா, எனக்கு அம்மாவுடைய பொறுமையும், அனைவரையும் அனுசரித்துப்போகும் விதமும் வியப்பை அளித்ததாலும், பள்ளிக்கே செல்லாத ஒருபெண் எல்லாவற்றையும் சாதுர்யமாக சமாளிக்கிறாள் என்பதாலும் அவளிடம் அப்பாவை விட அதிகமான மதிப்பை மனத்தினுள் ஏற்படுத்தியிருந்தது.சற்று நிறுத்தினார் நாராயணன்.

     நாராயணன் சொல்வதையே பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணசாமி, “சரிடா உன்கதைதான் எனக்குத் தெரியுமே, இப்போ ஏன் அதை மறுபடியும் சொல்லுறே: நீ உன்சகோதரர்களோட வாழ்ந்தபோது ஒரு அடிமையைப் போலத்தான் வாழ்ந்ததாகச் சொல்லுவியே, ஆனால் உன் கல்யாணத்துக்குப் பிறகு சந்தோஷமாகத்தானே வாழ்ந்துண்டிருக்கே?” கிருஷ்ணசாமி முடிக்கவில்லை, “ஏண்டா அவசரப்படறே? நான் சொல்லவந்த விஷயமே வேற. ஒரு சின்ன சம்பவம்தாண்டா என்னை டோட்டலா மாத்திடிச்சு.

     “ஹ்ம்..ம்..ம். சொல்லு, அது என்ன சம்பவம்?” உற்சாகமானார் கிருஷ்ணசாமி.

     “நான் சின்னவயசுலேர்ந்தே ரொம்ப கஷ்டப்பட்டவன். அப்பாவுக்கும் சொற்ப சம்பளம், சாதாரண ஸ்கூல் வாத்தியார். ஆனால் நாங்கள் எல்லோரும் பெரிய அண்ணனுடைய முயற்சியால சென்னைக்கு வரவேண்டியதாகிவிட்டது. நான் சென்னையிலேயேதான் படித்தேன் வேலைக்கும் போனேன். வேலை செய்யற இடத்துலேயும் ஓயாத ப்ரச்சினைதான்.  முதலாளி ஏதாவது சொல்லிக் கொண்டே, திட்டிக்கொண்டேதான் இருப்பார். அதனால எப்போதுமே மனசுல ஒரு நிலையில்லாத போராட்டம். வீட்டிற்கு வந்தாலும் அண்ணன்களின் தொல்லை. இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு இருந்தாலும் என் அம்மாவிடம் மட்டும் என் ஆற்றாமையைப் பகிர்ந்து கொள்வேன். ஆனால் கோபப்படமாட்டேன். ஆனால் ஒருநாள், அலுவலகத்தில் ஏகப்பட்ட குழப்பங்களும் மனக்கஷ்டங்களும் இருந்ததால் என் மனநிலை சற்று நிலையில்லாமலேயே இருந்தது. அந்தசமயத்தில் என் தாயார் ஏதோ ஒரு செய்தியை என்னிடம் பகிர்ந்து கொள்ளக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னாள். ஆனால் நானோ அம்மா சொன்ன எதையுமே சரியாகப் புரிந்து கொள்ளாமல் சற்று எரிச்சலுடன் அம்மாவைக் கோபித்தேன். அப்பொழுது அம்மா ஒன்றும் சொல்லவில்லை. சரிடா நாராயணா, அப்புறம் பேசலாம்என்றவளின் முகம் வாட்டமுற்றது.  பிறகு மிகவும் தணிந்த குரலில் அங்கலாய்த்துக் கொள்வதுபோல் பேசினாள். எப்போதும் உன் அண்ணன்கள்தான் சிடுசிடுன்னு பேசறாங்க., நீயாவது என்கிட்டே கொஞ்சம் அனுசரணையாப் பேசிண்டிருந்தே. நீயும் சம்பாதிக்கிறே, பெரிய மனுஷணாயிட்டே, அதனால நீயும் என்கிட்டே எரிஞ்சுவிழறே. எனக்கு அனுசரணையா நீ ஒருத்தனாவது இருக்கியேன்னு நம்பிண்டிருந்தேன். சரி சரி போஎன்றவள் தன்வேலையைத் தொடர்ந்தாள்.

     “என்மண்டையில் அப்போதுதான் உரைத்தது. சே..எப்போதுமே அம்மாகிட்டே ரொம்ப அன்பாகவும், மரியாதையாவும் பேசிண்டிருக்கிற எனக்கு ஏன் இப்படி கோபம் வரணும். பெரிய தப்பு பண்ணிட்டேனே.  அம்மாவோட முகம் ரொம்ப வாடிப்போச்சே. நானும் அவ மனசைக் கஷ்டப்படித்திட்டேனோ? பாவம் அம்மா வாழ்கையிலே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா, இப்போ கஷ்டங்கள் ஓரளவு விலகியும் அண்ணன்கள், அண்ணிகளால மனக்கஷ்டம். இனிமே நாம அம்மாகிட்டே கோபப்படாம அவளை சந்தோஷமா வெச்சுக்கணும்னு முடிவு பண்ணி, அம்மாகிட்டே திரும்ப வந்து அவகையைப் பிடிச்சு என்னை மன்னிச்சுடும்மா, ஏதோ மூடுல இருந்துட்டேன். உன் மனசை கஷ்டப்படுத்தியிருந்தா மன்னிச்சுடு. இனிமே நான் எப்பவுமே உங்கிட்டே கோபமா பேசமாட்டேன். இது சத்தியம்னு சொன்னவன் அவள் கையைப்பிடித்துக் கொண்டு அழுதேன்.  அந்த சம்பவத்துக்குப் பிறகு நான் என்னையே பல விஷயங்களிலும் மாத்திக்கிட்டேன். எல்லோரிடமும், உம்..ம்னு இருந்தவன் கலகலப்பாக பேச பழகிக்கிட்டேன். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் என்னோட எல்லோரும் சிரிச்சுப் பேசறபோது மனசுக்கு ரொம்ப சந்தோஷமாத்தான் இருந்தது.இப்போ அதை கண்டினியூ பண்ணிண்டிருக்கேன்ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தார்.

     “இவ்வளவு இருக்காடா நாராயணா உன் வாழ்கைல? நான் இந்தமாதிரி கஷ்டமெல்லாம் பட்டதில்லை. நான்தான் எல்லோரையும் படுத்தியிருக்கேனோ என்னவோ. என் மனசுக்கு மத்தவங்களைக் கஷ்டப்படுத்தினமாதிரி எதுவும் தோணலைடா நாராயணா. எண்பத்திரண்டு வயசுக்குமேலே இதையெல்லாம் நினைச்சுண்டு என்ன ஆயிடப்போறது?” கிருஷ்ணசாமியின் முகத்தில் உண்மையிலேயே சற்று வருத்தம் தெஇந்தது.

     “கிருஷ்ணா, அடிச்சவனுக்கு எதுவுமே ஞாபகம் இருக்காதுடா. அப்படி இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை கற்பிச்சுக்குவான்.  ஆனால் அடிபட்டவனுக்குத்தான் அந்த வடு மாறாது. எப்பவாவது ஞாபகம் வரும்போது அந்த வடு புண்ணாய் மாறி அவன் நெஞ்சைக் குத்தும். ரத்தம்கூட வடியும்

     “அப்படின்னா, நானும் மத்தவங்களைக் கஷ்டப்படுத்தி யிருப்பேனோ? எனக்குப் புரியலைடா நாராயணாஅவர் உள்ளம் கசிந்தது. சேசே.., கிருஷ்ணா, நீ அப்படிபட்டவன் இல்லைன்னாலும் உனக்கே தெரியாமல் அப்படி ஆகியிருக்க லாமில்லையாஆனால் நான் சொல்றது வேறே. எனது வாழ்கையே மத்தவங்களுக்கு அடங்கிப்போற வாழ்கையா ஆகிட்டதாலே உள்ளுக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை ஆழமா பதிஞ்சுட்டுது.  என்னைவிட மத்தவங்க அதிகம் சம்பாதிக்கறதினாலயும், எனக்கு அதிக சம்பளத்துல ஒரு நல்ல வேலை கிடைக்காததினாலயும் மனசு ரொம்ப வலிச்சுக்கிட்டே இருக்கும். இன்னொரு விஷயம், குடும்பத்துல நான் கடைக்குட்டியானதினால, எல்லோர்க்கும் நான் சின்னப் பையனாத்தான் தெரிந்தேன். நானும் படிச்சு ஒரு வேலை பார்க்கறவன்கிறது யாருக்கும் உறைக்கிறதே இல்லை. இத்தனைக்கும் நான் என்னோட சம்பளம் முழுசையும் ஒரு பைசா பாக்கியில்லாமல், என் கைசெலவுக்குக்கூட எடுத்துக்காமல் வீட்டுக்குக்கொடுத்துடுவேன். அது என் அப்பா, அம்மா கைமாறி கடைசியில் சாமிரூமில் படங்களுக்கு அடியில் இருக்கும்.  பிறகு பொ¢ய அண்ணன் , அண்ணி, மூன்றாவது அண்ணன் கைகளில் போய் குடுபச்செலவுக்குப் பயன்படுத்தப்படும். ஆனால் எனது பஸ் செலவுக்கோ, கைச்செலவுக்கோ நான் என்னசெய்வேன் என்று யாரும் கவலைப் பட்டதாக இன்னிவரையிலும் தெரியல்லைடா கிருஷணா. நானும் எதுவும் யாரிடமும் கேட்கமாட்டேன், ஏன்? அதிகம் பேசுவதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நான் ஆபீசுக்கு நடந்தேதான் போவேன், வருவேன். இதெல்லாம் மத்தவாளுக்குத் தெரியுமோ தெரியாதோ; ஆனால் அம்மாவுக்குத் தெரியும். நான் அம்மாவிடம்தான் அதிகம் பேசுவேன். என் மனத்தாங்கலையும் சொல்லுவேன். ஆனல் அம்மா யாரையும் விட்டுக் கொடுக்கமாட்டாள்.  எங்கிட்டேயும்தான் எல்லோரும் கோவிச்சுக்கிறாங்க. அதனால அவங்களுக்கு என்னைப்பிடிக்கலைன்னு அர்த்தமா. குடும்பம் நடத்தறதுங்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? என்னையும் அப்பாவையும் கலந்துகிட்டு குடும்பத்தை பராமரிக்கலாம்.  ஆனால் அப்பாவும் இப்போ சம்பாதிக்காமல் வயசானதினால வீட்டிலேயே இருக்கிறதால அவரிட்டே யாரும் எந்த யோசனையும் கேட்கறதில்லை. அவரோட கொஞ்ச சம்பளத்துலதானே உங்க எல்லாரையும் பெத்து வளர்த்து, படிக்கவெச்சு ஆளாக்கியிருக்கார்.

     அப்போல்லாம் எனக்கு மாத்தி உடுத்துக்க மறுபுடவைகூட கிடையாது. உங்கப்பாவுக்கு கையில காசு வந்தா அதை மளிகைசாமான் வாங்கறதுக்குத்தான் சரியா இருக்கும்கறதினால, எப்பவாவதுதான் புடவை வாங்கிக்குடுப்பார்நானும் எனக்கு கட்டிக்க புடவையில்லைன்னு அவரிட்ட சொல்லமாட்டேன். சொன்னா எப்படியாவது கட்னுடன் பட்டாவது வாங்கிக்குடுத்துடுவார். ஒரு புடவையையே கிழிசலைத்தைச்சு தோச்சு உலர்த்தி கட்டிக்குவேன்இதெல்லாம் அப்போ உங்க அண்ணன்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்ஏன்னா அவங்களோட படிப்பு வேலை தேடறதுன்னே இருந்துட்டாங்க. அதனால என்மேலே யாருக்கும் அக்கரை இல்லைன்னு அர்த்தமா என்ன? அப்போ காலநேரம் அப்படி இருந்தது. பொருமையா இருந்தேன். ஆனால் அப்பா இப்போ சம்பாதிக்கலை. அதனால அவரை யாரும் தொந்திரவு செய்யறதில்லை. அதனால, அவரை அவங்கள்லாம் மதிக்கறதில்லைன்னு அர்த்தமா. அதை உன் அப்பாவும் எப்பவாவது பொருட்படுத்தியிருக்காரோ? இல்லையே. அதுமாதிரிதான் உன்னையும் வைச்சிருக்காங்க. நீ எல்லோரையும் விட சின்னவன் இல்லையா, அதனால உன்கிட்டே எப்படி எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறதுன்னு நினைக்கிறாங்களோ என்னவோ. நீ ஒண்ணும் மனசைப்போட்டுக் கஷ்டப்படுத்திக்காதேஎன்று பெரிதாக எனக்கு ஆறுதல் சொல்லுவாள்.

     “என் அம்மா சொல்வதிலுள்ள நியாயம் எனக்குப் புரிந்தாலும் என் மனது சமாதானம் ஆகாது. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையில் வாடிய குடும்பமாயிருந்ததால், கொஞ்சம் கொஞசமாய் அதை சரிசெய்யத் துடித்தார்கள் என் அண்ணன்மார்கள் என்பது உண்மையாகவே இருந்தாலும் அவர்கள் மிகவும் அதிகார கர்வம் பிடித்தவர்களாகவே என் மனதிற்குப் பட்டது.  நான் பள்ளி இறுதிப்படிப்பு முடிந்து மற்ற டைப்ரைட்டிங், ஷார்ட் ஹாண்ட், மற்றும் இதர துணை படிப்புகளெல்லாம் எப்படியோ படித்தாலும் அவர்களது உதவி மிகவும் வேதனை தரக்கூடிய சொற்களுக்கிடையேதான் கிடைக்கும். அதனால் அதையும் நான் கூடுமானவரையில் கேட்காமல், நான் மாதம் முழுவதும் அலுவலகத்தில் லீவு எடுக்காமல் வேலைசெய்தால் ஒரு தொகை கொடுப்பார்களே அதை வைத்து எல்லாவற்றையும் சமாளிப்பேன். என் கஷ்டங்களை அவர்களிடம் சொல்லலாம், அவர்களும் அதை நிவர்த்தி செய்யலாம்ஆனால் என் தன்மானம் அவர்களிடம் கேட்க இடம்கொடுக்காது. என் தேவை என்னவென்று அவர்களுக்குத் தெரியாதா என்ன, அவர்களாகவே அதை தெரிஞ்சுகிட்டு கொடுக்கட்டுமேன்னு நானும் இருந்துடுவேன். இப்படி ஒரு தனிமை வாழ்கைதான் எனக்குக் கிடைத்ததே அல்லாமல் எல்லோருடனும் சரிசமமாக உட்கார்ந்துகிட்டு சிரிச்சுப்பேசி பழகற வாய்ப்பு அதிகமா ஏற்படவே இல்லை. ஏதாவது அவங்களால சமாளிக்க முடியாத கஷ்டங்கள் ஏற்பட்டாலும் நேரடியா எங்கிட்டே சொல்லமாட்டாங்க, என் அம்மாகிட்டே நாந்தான் எல்லாத்தையும் சமாளிக்கணுமா, உன் மத்த பிள்ளைங்க இல்லையா அவங்களிடம் சொல்லுன்னு சொல்லுவாங்க. கஷ்டம் அதிகமாகிற சமயத்துல நான் என்னால் முடிந்தது என்று எங்காவது கடன் வாங்கிக்கொடுப்பேன். அதற்கும் அண்ணன்மார்களின் பேச்சு ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.

     இதுக்கெல்லாம் முன்னால, நான் பள்ளிப்படிப்பை முடிச்சுட்டு, கொஞ்சநாள் வீட்டிலேயே இருக்கும்போது, ஒரு நாள் என் மூத்த அண்ணன் என் அம்மாகிட்டே, ‘இது ஒண்ணும் அன்ன சத்திரம் இல்லை, சும்மா உக்காந்துகிட்டு சாப்பிடறதுக்கு, படிச்சுட்டு சும்மா உட்கார்ந்துகிட்டிருந்தா  வீடு எப்படி உறுப்படும்? இனிமே அடுத்த வேளை சோத்துக்கு சம்பாதிச்சு கொண்டுவந்தா சாப்பாடு போடுன்னு சொன்னார். நான் அம்மாவிடம் அழுதேன். நான் என் நண்பர்களிடமெல்லாம் சோல்லியிருக்கேன், நிறைய கம்பெனிகளுக்கு அப்ளிகேஷனெல்லாம் போட்டிருக்கேன், நிச்சயமா சீக்கிரம் ஒரு வேலை கிடைக்கும்மாஎன்று சொல்லி அழுவேன்.  அதற்கு அம்மா சமாதானம் சொல்வாள். நீ எதுக்காக மனசு கஷ்டப்பட்டுக்குறே, உன்னோட மத்த அண்ணன்களையும் இப்படித்தானே பெரியவன் சொன்னான். இதுக்கெல்லாம் கஷ்டப்பட்டுக்காதேஎன்பாள்.  ஆனால் இதையெல்லாம் சொல்லுறேனே தவிற, என் அண்ணன்களுக்கு என்மேலே சின்ன வயசுலேர்ந்தே ஒரு அலாதி பிரியம், அன்பு உண்டு. ஆனாலும் இப்படி வளர்ந்ததுக்கு அப்புறமும் இப்படி சின்னப் பையனைப்போல நடத்துறாங்களேன்னு மனசுக்குள்ளே ஒரு தாபம். அவ்வளவுதான்.

     நான் பள்ளிப்படிப்பு முடிச்சத்டுக்கப்புறம், எனக்கு காலேஜுல படிக்க ரொம்ப ஆசையாயிருந்தது. அண்ணன்களோ `அதுக்கெல்லாம் இப்போ நம்மகிட்டே வசதி இல்லைஎன்று கையை விரித்துவிட்டார். அப்பா ஒரு என்.ஜி.ஓங்கறதால கொஞ்சம் சலுகை கிடைக்கும்ஆனாலும் என்னால் காலேஜுல படிக்க முடியல்லைசரி, வாத்தியார் உத்தியோகமாவது பார்க்கலாம், அதுக்கு டீச்சர் ட்ரைனிங்குல சேர்த்துவிடுன்னாலும், `ஏழை வாத்தியார் உத்தியோகம் உனக்கும் வேண்டாம்ன்னுட்டார்.

     “சரி, இதெல்லாம் இப்படி இருக்கட்டும்னு சகிச்சுக்கிட்டாநான் எங்கே போனாலும் குடும்பத்துல தெரிஞ்சவங்க வேண்டியவங்க கிட்டேயே போகவேண்டிய பழகவேண்டிய சூழ்நிலை இருந்ததாலே, நான் நானாக பழக முடியாம, என்னோட சுய கௌரவத்தையும் குடும்பத்தாரோட கௌரவத்தையும் காப்பாத்தும் பொருட்டு கொஞ்சம் எல்லாவற்றிலும் அடங்கியே போகவேண்டி இருந்த்து. இப்படி எத்தனையொ சொல்லிகிட்டே போகலாம். அதெல்லாம் சொன்னா நான் மத்தவங்களைப் புரிஞ்சுக்காம குறை சொல்றதுபோலத்தான் தோணும். இதெல்லாம் சரியோ தவறோ என் மனசுக்குக் குறைதான். இந்தமாதிரி எத்தனையோ விஷயங்களிலெல்லாம் என்னை மட்டம்தட்டிப் பேசுவது, பழகுவதுன்னு நடந்துப்பாங்க. என் கல்யாண சமயத்துலகூட என்னை தப்பா புரிஞ்சுகிட்டு, அவங்களை நான் மதிக்காத மாதிரியெல்லாம் நடந்துகிட்டாங்க.  உண்மையில் அவங்க என் கல்யாண விஷயத்துல எந்தவிதமான ஈடுபாடும் காட்டல்லை.  என் அப்பா அம்மாகிட்டே எல்லாத்தையும் கலந்துகிட்டதுக்கப்புறம் அவங்க சொல்படி சில வேலைகள் செய்யவேண்டியதாயிடுத்து. அண்ணன்களிடம் சொல்லும்போது அவர்கள் நான் சொல்லுவதை காதில் போட்டுக் கொள்ளாமல் தன்னால் எதுவும் முடியாது என்று சொல்லிட்டாங்க.. அந்த விஷயத்திலும் நான் அலட்சியம் செய்யப் பட்டேன்.      என்னோட கல்யாணக்கதையைப்பத்தி உனக்கு தெரியுமா கிருஷ்ணா?”

     ``ம்..ம்ம்..நீ எப்பவோ ஏதொ சொன்னதா ஞாபகம்ஏதோ உன் சொந்தத்துல ரொம்ப கஷ்டப்படற குடும்பத்துப் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க பிரியப்பட்டு, நீயே கஷ்டப்பட்டு கடனுடன் வாங்கி கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொன்னதா ஞாபகம்டா நாராயணா

     ``அதான்அதேதான். அதுக்குக்கூட அவங்களெல்லாம் எவ்வளவு முட்டுக்கட்டை போட்டாங்க தெரியுமாஎன்னோட அப்பாவுக்கு அந்த சம்பந்தத்துல ரொம்ப இஷ்டம்அம்மாவுக்கும் இஷ்டம்தான்ஆனால் மத்த யாருக்குமே அதுல இஷ்டமில்லைஅந்த சம்மந்தி வீட்டுக்காரங்க வசதி இல்லாதவங்கங்கறதுனால, செலவெல்லாம் எங்கே தங்களோட கையைப் புடிக்குமோன்னு நினைச்சிருப்பாங்களோ என்னவோஇத்தனைக்கும் அவங்களை இவங்களுக்கும், இவங்களுக்கு அவங்களையும் ரொம்ப பிடிக்கும். ஆனாலும் பல இடையூறுகள் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. என்னோட சகோதரிகள் உள்படஅதனால, நான் என் கல்யாணத்துக்கு அவங்களுக்கு சில உதவிகள் செஞ்சேன்அது அவங்களை அவமானப்படுத்தினதுபோல ஆயிட்டுதாம். அவங்களும், என் கல்யாண விஷயத்துல அக்கரை காட்டல்ல, அதனால நாந்தான் எனக்கு நானே பலவித உதவிகளையும் செஞ்சுக்க வேண்டியதாயிட்டுதுஅதனால என்னை பலமாதங்கள் ஒதுக்கியே வெச்சுட்டாங்கபேசறதில்லை, பழகுறதில்லை.
      
     ``எனக்குக் கல்யாணம் ஆகி குழந்தைகுட்டிகள் பிறந்து, அவர்களை வளர்க்கும் வரையில் எனது எல்லா கஷ்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தினாலும் பரிதாபப்படுவதாய் இருப்பார்களே தவிற நக்கலாகவும் கேவலமாகவும் பேசுவார்கள். எனது சின்ன அண்ணா கொஞ்சம் பணக்காரராயிட்டார். அவர் முதலில் கொஞ்சம் சத்தம் போடுவார். பின்னர் கொஞ்சம் உதவிசெய்வார். அவைகளை என்னால் முடிந்தவரையில் திருப்பிக் கொடுக்கப் பட்டிருந்தாலும், கொஞ்சம் கொடுக்கமுடியாமலும் போயிருக்கிறது. எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து எல்லோருடைய கடன்களையும் சமன் செய்து இப்போது என் மகன் சம்பாத்தியத்தில் ரொம்ப சௌக்கியமா இருக்கேன். என் மனைவி எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்னே சொல்லுவேன். அவள் என்னிடம் வைத்திருக்கிற மதிப்பும் மரியாதையும், நான் அவளுடன் என் அம்மாவிடம் சொல்லி யோசனை கேட்பதுபோல் கேட்பவைகளுக்கு சரியான யோசனையைச் சொல்லும் புத்திசாலித்தனமும், நான் குடும்பச் செலவுகளுக்காகக் கொடுக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து என் கஷ்ட நிலைமையின் போது எதிர்பாராவிதமாக செய்யும் உதவிகளும்  என்னை மிகவும் நெகிழ்த்தியிருக்கின்றன. அவளால்தான் நான் இன்னும் சந்தோஷமாக வாழ்ந்துகிட்டிருக்கேன் கிருஷ்ணா.  எனது இரண்டு மகள்களும் மாப்பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் என்மீது அளவு கடந்த அன்பும் பாசமும் வைத்திருக்காங்க. என் மகன் என்மீது அளவுகடந்த மதிப்பும் மரியாதையும், ஏன் பக்தின்னு கூடச் சொல்லலாம் வைச்சிருக்கிறதும், அதைவிட பெரிய விஷயம், எனக்கு வாய்த்த மருமகள் நான் எதிர்பார்த்ததைவிட அன்பும் பாசமும் அனைவரையும் அரவணைத்துப்போகும் சாதுர்யமும் கொண்டவளாக அமைஞ்சதுதான் நான் வாழ்வில் பெற்ற மிகப்பெரிய பேறுன்னே சொல்லலாம். இந்த என் குடும்ப அமைப்பால்தான் என் தாழ்வுமனப்பான்மை, தனிப்பட்ட சோகம் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா வாழ்ந்துகிட்டிருக்கேண்டா கிருஷ்ணா.  இதுதானேடா எல்லோரும் எதிர்பார்க்கிற வாழ்க்கை. அது எனக்கு அமைஞ்சிருக்கு. என் மகன் என்னை மீறி எதுவும் செய்யறதில்லை. இப்பவும் நான் எனக்குன்னும் ஒரு பைசாகூட செலவு செஞ்சுக்கிறதில்லை. என்  மனைவி, மகன்களின் வற்புறுத்தலினால் அவர்கள் சொல்படி ஏதாவது செய்துக்குவேன். மற்றபடி குடும்பத்தை நான்தான் நிர்வகிக்கிறேன். ஆனாலும் கிருஷ்ணா, என் மனசுல இன்னும் ஒரு இயலாமை குடிகொண்டிருக்குடா. அது என்னிக்குமே மாறாதுஒரு நீண்ட கதையே சொல்லிமுடித்தார் நாராயணன்.

     கிருஷணசாமி, நாராயணனின் முதுகில் ஆதரவாகத்தட்டிக் கொடுத்தார். என்னமோ என் ஆதங்கத்தை சொல்ல வந்தால் உன் கதை பெரிய சோகக்கதையான்னா இருக்கு நாராயணா. ஆனால் ஒண்ணு மட்டும் நன்னா புரியறது, எல்லாருடைய மனசுலேயும் ஏதோ ஒரு சுமை இருந்து அழுத்திகிட்டேதான் இருக்கு. நாம பரபரப்பா வாழும்போது அதெல்லாம் பெரிசாத் தொ¢யறதில்லை. இந்தமாதிரி வயசானகாலத்துல வேலை வெட்டி இல்லாம உட்கார்ந்துகிட்டு யோசிக்கும்போதுதான் நம்மோட தவறுகள், நம்மோட மடத்தனமான நினைப்புகள், மத்தவங்களைப் பத்தி தப்பா நினைச்சுக்கிட்டிருந்தது, நாம என்ன தவறு செஞ்சோம்கிறதே புரியாததுன்னு எல்லாமே  நல்லா மனசுக்குப் புரியறது. ஆனால் ஒண்ணு மட்டும் நல்லா புரியுதடா நாராயணா, நீ உன்னோட மனகஷ்டங்களைப்பத்தி சொன்னாயே தவிற, நீ உன்னோட அண்ணன்களை தப்பாவோ மட்டமாவோ சொல்லல்லை. நீ என்ன நினைச்சேங்கறதைத்தான் சொன்னே. அப்போ அவங்க நிலைமை அப்படிங்கறதையும் நீதான் சொன்னேஆனாலும் உன்னோட மனசு ரொம்ப காயம் பட்டிருக்குடா நாராயணாஎன்றார் கிருஷ்ணசாமி.

     “ஆமாண்டா கிருஷ்ணா, ஒவ்வொருத்தர் வாழ்கை ஒவ்வொரு மாதி¡¢. நாம தப்பு செஞ்சோமா, மத்தவங்க நம்மை எப்படி நினைச்சாங்கன்னெல்லாம் நினைச்சுப் பார்க்கறது தப்பில்லைன்னாலும், எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துகிகிட்டு இப்போ இருக்கிற வாழ்கையை ஓட்டணுமே தவிற, நாம் நல்லவனா, கெட்டவனான்னெல்லாம் மனசை அலைபாய விடக்கூடாதுடா.  ஏன்னா, இதுவரைக்கும் உன் வாழ்கையிலும் சரி, என் வாழ்கையிலும் சரி நாம மத்தவங்களை பின்பத்தி நம்ம சுயகௌரவம் கெடாம வாழ்திருக்கோமேங்கறதுதான் நிறைவான விஷயம். இன்னும் சொல்லப்போனால் நம்மோட பெரியவங்களைப் பின்பற்றித்தான் அநேக பல நல்ல விஷயங்களை கத்துக்கிட்டோம்கிறதுதான் உண்மை. அவங்களால நம்மோட மனசு கஷ்டப்பட்டிருந்தாலும், நாம் ஒண்ணும் கெட்டுப்போகல்லியே. இப்போ, அவங்க மெச்சற அளவுக்கு நல்லாத்தானே வாழ்ந்துகிட்டிருக்கோம். சரிடா என்னென்னமோ பேசிகிட்டு இருந்துட்டோம் நேரம் போனதே தெரியல்லை. மறுபடியும் நாளைக்கு சந்திப்போம்என்று கூறியபடி நாராயணன் எழுந்துகொண்டு கிருஷணசாமியின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, “கிருஷ்ணா நீ ரொம்ப நல்லவன், இனிமேலும் உன் மனசுல ஏதாவது சங்கடங்கள் இருந்தா எல்லாத்தையும்தூக்கிப் போட்டுட்டு உன் குடும்பத்துல உனக்குக் கொடுக்கிற மரியாதையை நன்னா என்ஜாய் பண்ணுடா. நான் வரட்டுமா ரொம்ப நாழி ஆயிட்டுது. நாளைக்கு மறுபடியும் சந்திக்கலாம். வரட்டுமா¡” என்றபடி எழுந்து நடந்தார் நாராயணன்.

     நாராயணன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணசாமி, “நான் ரொம்ப நல்லவன்தான் போலிருக்கு. நான்தான் ஏதேதோ போட்டு மனசைக் குழப்பிக்கிட்டேன். பாவம் நாராயணன், வாழ்கைல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான். வயசான காலத்திலேயாவது நிம்மதியா சந்தோஷமா பேரன் பேத்திகளோட இருக்கட்டும்என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார். இப்பொழுது அவர் மனது மாசற்று அமைதியாக இருந்தது.

                             ----------- 0000000 ---------





              6.   பாசப்புலம்பல்
    
     பத்மாவின் மகன் சாதிக்கின் திருமணம் எனும் நிக்காஹ் இனிதே நடந்தேறியது. அந்த இரவு வேளையிலும் பத்மாவின் புக்ககத்தாரின் சொந்தங்களும், நண்பர்களும், அண்டை வீட்டாரும் குழுமியிருந்தனர். ஒரே கூச்சலும், பாட்டும், கூத்தும், கும்மாளமுமாக அந்த மண்டபம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது. பத்மா என்னும் நசீருன்னிசா பேகம் தனது முகத்தை மூடியிருந்த பர்தாவை சற்று விலக்கி. கூட்டத்தைச் சுற்றி தன் கண்களை ஓடவிட்டாள். அவளது கணவன் பஷீர் அஹமத், வந்திருந்த விருந்தினர்களுடன் சிரித்துப் பேசி அளவளாவிக் கொண்டிருந்தான். பஷீர் நல்ல அழகு, சிவந்த களையான உடற்கட்டு. இந்த ஐம்பத்தியிரண்டு வயதிலும் ஒரு முப்பது வயது இளளஞனைப் போல காட்சியளித்தான். வந்திருந்தோரில் பாதிப்பேர் சாப்பிடச் சென்றுவிட்டார்கள். மீதம் இருப்பவர்கள் மட்டும் குழுக்களாகப் பிரிந்துநின்றும், தன் சௌகரியத்திற்கு நாற்காலிகளைப் போட்டுக்கொண்டும், குபீர் சிரிப்புகளுக்கிடையே உரையாடிக் கொண்டிருந்தனர். பத்மாவின் மகன் சாதிக்கும் தனது நண்பர்களுடன் கலகலவென்று நகைத்தபடி பேசிக்கொண்டிருந்தான். அவன் தனது திருமண வேஷத்தைக் கலைத்துவிட்டு வெறும் பைஜாமா ஜிப்பாவிலுமாக இருந்தான். மணமகளை அங்கு காணவில்லை. ஏனெனில் அவள் வெளியில் வந்து யாருடனும் பேசக்கூடாது. மற்ற சடங்குகள் முடிந்தபின்னர்தான், மாப்பிள்ளையும் பெண்ணும் ஒரு சடங்கில் சந்தித்திக் கொள்ளலாம். நிக்காஹ்கூட பெரியவர்கள் செய்துவைப்பதுதான். மணப்பெண்ணுக்கும் பிள்ளைக்கும் தனித்தனியே பெரியவர்கள் மூதாட்டிகள் பால்பழம் கொடுப்பார்கள். பிறகு இருவரையும் தனித்தனியே, இந்தப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள சம்மதமா என்று மணமகனிடமும், இந்தப் பையனைக் கல்யாணம் செய்துகொள்ள சம்மதமா என்று மனப்பெண்ணிடமும் கேட்பார்கள். இருவரும் தனித்தனியே சம்மதம் என்று சொன்னால்தான் தாலி கட்டுவார்கள். முகம்மதியர்களின் திருமணம் எப்பொழும் இரவுவேளையில்தான் நடக்கும். இந்துக்கள் சூரியனை வழிபட்டு திருமணம் செய்வார்கள். ஆனால் இவர்களோ சந்திரனை வழிபட்டுத்தான் எல்லா காரியங்களும் செய்வார்கள்.  அவளது வாழ்கையில் நடந்தவை  அனைத்தும் பத்மாவின் மனத்திரையில் ஓடின. அவளது கண்கள் தனது கணவன் பஷீர் இருக்குமிடத்தையே சுற்றி சுற்றி வந்தன.

     பத்மாவின் கண்களிலிருந்து நீர்த்திவலைகள் உருண்டு அவளது கன்னத்தில் வழிந்து கோடிட்டன. அவளது மனமோ, “இந்த மனுஷனின் அழகையும் சிரிப்பையும் பார்த்துத்தானே மயங்கிப்போனேன்.  அலுவலகத்தில் பஷீரை எல்லோரும் பாஸ் பாஸ் என்றுதானே  கூப்பிடுவார்கள். அதனால் அவர் பெயர் பாஸ்கர் என்று நினைத்தல்லவா அவருடன் பழகவாரம்பித்தேன்.  அவருடைய பேச்சுகூட அசல் பிராம்மணர்கள் பேசுவதுபோலத் தானே இருந்தது. பாவி மனுஷன் என்னை மயக்கி என் சொந்தங்கள் கிட்டேருந்து என்னை பிரிச்சுட்டானே. அவனா மயக்கினான்? இந்த பாவிதானே மயங்கிப்போனேன்.”  பத்மாவின் மனத்திரையில் பழைய சம்பவங்கள் ஒவ்வொன்றாக திரைப்படம்போல ஓடவாரம்பித்தன.

     பத்மாவின் குடும்பம் அவ்வளவு வசதியில்லாத குடும்பம்தான். பத்மாவின் தகப்பனார் ஸ்ரீநிவாச அய்யங்கார் ஒரு பெரிய கோயிலில் பட்டாச்சார்யராக பணிபுரிபவர். மிகவும் ஆசாரமான குடும்பம். ஸ்ரீநிவாச அய்யங்காருக்கு ஐந்து பெண்களும் கடைசியாக ஒரு பையனும் உண்டு. மனைவி அலர்மேலு அம்மாள் அதிகம் படிக்காதவள் ஆனாலும் நல்ல புத்திசாலி. எவரையும் எளிதில் கவர்ந்து விடுவாள். அதிகமாக பேசமாட்டாள். கணவனின் குறிப்பறிந்து காரியங்கள் ஆற்றுவாள். ஸ்ரீநிவாச அய்யங்காரும் மானஸ்தர். தானுண்டு தன் கடமையுண்டு என்று இருப்பவர். தனது எல்லா பொறுப்புகளையும் கடவுளிடமே விட்டுவிட்டு தன்னால் இயன்றவைகளைச் செய்வார். எதற்கும் அதிகமாக ஆசைப்பட  மாட்டார். தமக்கு ஐந்து பெண் குழந்தைகள் பிறந்துவிட்டதே என்று ஒருநாளும் அவர் கவலைப் பட்டதில்லை. எல்லாம் பெருமாள் கொடுத்த தனம் என்று சொல்லி பெருமைப் பட்டுக்கொள்வார்.

     கோவில் உத்யோகம் தவிற பலவித பூஜைகளும் மற்றும் இதற காரியங்களும் செய்து தனது பிழைப்பை நடத்திவந்தார் கோவில் மானியத்திலேயே வசிப்பதற்கு வீடும் கொடுத்திருந்தார்கள்.  ஆகவே, அவர் மிகவும் ஏழ்மையில்லாமலும், மிகுந்த செல்வச்செழிப்பிலில்லாமலும் தனது குடும்பத்தை நடத்திவந்தார். எப்படியோ தனது மூன்று பெண்களுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்வித்து, அவர்களும் ஏதோ மிகுந்த சிரமமில்லாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர். முதல்பெண் ருக்மணியின் கணவர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பணிபுரிகிறார். இரண்டாவது மகள் கோதையின் கணவர் முதலில் சிறுசிறு கோவில்களில் பணிபுரிந்து கொண்டிருந்தாலும், அவரது நண்பர்களின் உதவியினால் அமெரிக்காவில் உள்ள ஒரு வைணவ கோயிலில் பணிபுரிகிறார். அதனால் கோதையும் அவர்களது குடும்பமும் அங்கேயே நிரந்தரமாகி விட்டனர்.

     அடுத்த பெண் ஞானலக்ஷ்மி கல்லூரியில் படித்தவள், படிக்கும்பொழுதே ஒரு வாலிபனைக் காதலித்தாலும், அந்த குடும்பம் ஸ்ரீநிவாச அய்யங்காருக்கு மிகவும் தெரிந்த குடும்பமாக ஆகிவிட்டதினால் அவளது கல்யாணமும் எந்தவித தடங்கலுமின்றி நடந்தேறியது. அந்தமாப்பிள்ளையும் பொரியியல் படித்த பட்டதாரி ஆனதால் அவனும் நல்லதொரு உத்யோகத்தில் இருக்கிறான். நான்காவதாகத்தான் பத்மா. தனது மூன்று பெண்களுக்கும் இருபது வயதிற்குள்ளாகவே திருமணத்தை முடித்து வைத்த ஸ்ரீநிவாச அய்யங்காருக்கு, தனது நான்காவது பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்கும் அளவிற்கு வசதியில்லாமல் போய்விட்டது. பத்மாவும் முதுநிலை பட்டதாரி ஆகையால் அவளுக்கு ஒரு அயல்நாட்டு நிறுவனத்தில் உடனே வேலை கிடைத்துவிட்டது. அவளது சம்பளத்தை சேமித்து வைத்துத்தான் அவளது கல்யாணத்தை நடத்தவேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. பத்மா தனது இருபத்தியிரண்டாம் வயதில் பணிக்குச் சென்றும், இருபத்தி ஐந்து வயதாகியும் ஸ்ரீநிவாச அய்யங்கார் அவளுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்காததால், அந்தக் குடும்பத்துக்குத் தெரிந்தவர்களும், தூரத்துச் சொந்தக் காரர்களும் பலவாறாகப் பேசவாரம்பித்துவிட்டனர்.

     “ஸ்ரீநிவாசன் முதல் மூணு பெண்களுக்கும் கல்யாணம் பண்ணவே ரொம்ப கஷ்டப் பட்டுட்டான். இந்த நாலாவது பெண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணப் போறானோ? இந்த பெண்வேறே நிறைய படிச்சுடுத்து. அதுக்கேத்த மாப்பிள்ளை தேடவேண்டாமோ: அடுத்த அஞ்சாவது பெண் வசுந்தரா வேற இருக்கா. அவளும் பெரிய படிப்பெல்லாம் படிச்சுண்டிருக்கா. அந்த மனுஷன் என்னபண்ணுவான்? வரன் பாத்துண்டுதான் இருப்பான். ஏதாவது குதிருதோ? ஹ்.ம்.ம். இந்த பொண்ணாவது தானே ஏதாவது ஒரு புள்ளையாண்டானைத் தேடிக்க வேண்டியதுதான்.  அப்போதான் வரதக்ஷணை கிரதக்ஷணை யெல்லாம் கொடுக்க வேண்டாம்.என்று அந்தக் குடும்பத்தார் காதுபடவே பலரும் பேசிக்கொள்வார்கள். இவை எல்லாவற்றையும் கேட்டும் கேட்காதவர் போல எல்லாம் பகவான் செயல்என்று தனது வேலையில் முனைந்துவிடுவார் ஸ்ரீநிவாச அய்யங்கார். இப்படிப்பட்ட தருணத்தில்தான் பஷீர் பத்மாவின் கண்ணில் பட்டான். பத்மாவும் பஷீரும் நன்றாக ஒரு நல்ல நண்பர்களாகவே பழகிவந்தாலும், பத்மாவிற்கு பஷீர் ஒரு முஸ்லிம் என்பதைத் தெரிந்துகொள்ள ஒருவருடகாலம் ஓடிவிட்டது. அதற்குள் அவர்களது நட்பு காதலாக மலர்ந்துவிட்டது. ஒரு சமயம் இருவரும் மதிய உணவு சாப்பிடுவதற்காக வெளியில் சென்றபொழுதுதான், பாஸ்கர் என்று நம்பிக்கொண்டிருந்த பஷீர் ஒரு அசைவ உணவகத்திற்குள் நுழைவதைக் கண்டவள், “என்ன பாஸ், நீங்கள் அசைவ உணவு சாப்பிடுவீங்களா என்ன?” என்று கேட்க, அவளைத் திரும்பிப் பார்த்த பாஸ் எனும் பஷீர் வாய்விட்டுச் சிரித்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் சிரிக்கிறீங்க?”என்று கேட்க, அவன் என்ன கேள்வியிது பத்மா? ஒரு முஸ்லிம் அசைவம் சாப்பிடுவான்னு உனக்குத் தெரியாதா என்ன?” என்று கேட்ட பொழுதுதான் பத்மாவின் தலையில் யாரோ சம்மட்டி கொண்டு ஓங்கி அடித்ததுபோல உணர்ந்தாள் பத்மா. அவள் அப்படியே பிரமை பிடித்தவள்போல நின்றாள். தனது நிலையை உணறவே அவளுக்கு சில மணித்துளிகள் பிடித்தன. என்ன பத்மா அப்படியே நின்னுட்டே., நான் முஸ்லிம்ங்கறது உனக்குத் தெரியாதா என்ன?” என்று ஒரு கேள்வியையும் எழுப்பினான் பஷீர். பத்மாவிற்கு ஒன்றுமே புரியவில்லை அவள் தனது சுய உணர்விற்கு வர சிறிது நேரம் பிடித்தது. என்ன பத்மா என்னாச்சு? ஏன் நின்னுட்டே? வா உள்ளே போகலாம்என்று அவளது கையைப் பிடிக்கப் போனவனின் கையைத் தட்டிவிட்டவள், “ஏன் இதுவரைக்கும் என்னிடம் உண்மையைச் சொல்லலை?”.என்றாள் நா குழற. நான் சொல்லலையா? என்பெயர் பஷீர் அஹமதுங்கறது உனக்குத் தெரிந்திருக்கும்னு நினைச்சேன். என் ·ப்ரண்ட்ஸ் எல்லாரும் என்னை பாஸ், பாஸீன்னே கூப்பிடுவாங்க. அதனாலதான் நீயும் என்னை பாஸுன்னு கூப்பிடறேன்னு நினைச்சேன்.  ஐயேம் வெரிசாரி பத்மா, வெரி வெரி சாரிஎன்று மன்னிப்புக் கேட்டான் பஷீர். பத்மாவிற்கு தலை கிர்ரென்று சுற்றியது. தன்னை சுதாரித்துக் கொண்டவள் அந்த உணவக வாயிலில் நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறிக்கொண்டு தனது அலுவலகம் நோக்கி விறைந்தாள்.

     நான்கைந்து நாட்கள் ஓடிவிட்டன. பத்மா பஷீரைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். ஆனாலும் ஒருவருட காலம் பழகிய பழக்கம் அவளது மனத்தில் இனம் புரியாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. பலமுறை பஷீரும் அவளைப் பார்க்க முயன்றும் பத்மா அவனிடம் முகம்கொடுத்துப் பேசாது இருந்துவிட்டாள். இத்தனைக்கும் அவர்களது அலுவலகம் அடுத்த அடுத்த கட்டிடத்தில் இயங்குவதாக அமைந்தைருந்ததால்  வெளியில்வரும்பொழுதும் போகும்பொழுதும், அல்லது உணவகத்தில் காபி சாப்பிட வரும்பொழுதும் சந்தித்துக் கொள்ளவேண்டிய அவசியம் ஏற்படத்தான் செய்தது. பத்மாவின் நண்பிகளும் அவளிடம் பாஸை ஏன் சந்திக்க மறுக்கிறாய் என்று கேட்டபொழுது, தனது உண்மை நிலையை அவர்களுக்கு எடுத்துரைத்தாள் பத்மா. அவர்கள் பத்மாவை ஏளனமாகப் பார்த்தனர்.

     “ஏண்டி பத்மா, நீ எந்த காலத்துல இருக்கே? காலம் மாறிண்டு வர்றதுடீ. ஒரு வருஷமா பாஸ் ஒரு முஸ்லிம்ங்கிறது தெரியாமலேயா பழகிண்டு வந்தே? இப்போல்லாம் சாதி மதமெல்லாம் இல்லேடீ. பையன் நல்லவனா இருக்கானா, குடும்பத்துக்கு அடங்கினவனா இருக்கானான்னு பார்த்தாப் போதும்டீ. நீ என்ன லூஸாடீ? உன்னோட பழகறவன் யாரு, என்ன பேரு, எந்த ஊரு, அவன் குலம் கோத்திரம் என்னன்னு தெரிஞ்சுக்காமலா பழகுவே? போடீ பயித்தியம். இப்போ போயி, இவன் ஒரு முஸ்லீம் அவனை நான் மறந்துடுவேன். அவனைக் கல்யாணம் பண்ணிக்கமுடியாதுன்னு சொல்றது பயித்தியக்காரத்தனம்டீ பத்மா. உங்க சாதில பொறந்தவன்தானே பாரதியும்: அவன் சாதி மதங்களைப் பாரோம்ம்னு பாடல்லியா? இதோ பாரு, உனக்கும் வயசாயிண்டே போறது, மனசுக்குப் புடிச்சவனாப் பாத்து கல்யாணம் பண்ணிக்கணும். உங்க வீட்டிலே உனக்கு இப்போதைக்குக் கல்யாணம் பண்ணிவைக்கிற நிலைமையிலே இல்லைன்னு வேறே சொல்றே: அதனால காதலிச்ச, நல்லவனான பஷீரையே நீ கல்யாணம் பண்ணிக்கறதுதான் எங்களுக்கு சரின்னு தோணறதுஎன்று அடிக்கடி பத்மாவிற்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

     பத்மாவிற்கு என்னசெய்வதென்றே புரியவில்லை. பாஸ்கர் நல்லவன், அவனும் நம்ம ஜாதிக்காரனாத்தான் இருக்கணும், அதனால அப்பா அம்மாவிடம் சொல்லி சம்மதம் வாங்கிடலாம். ஞானமும் காதலிச்சுத்தானே அப்பா அம்மா சம்மதத்தோட கல்யாணம் பண்ணிண்டா, நானும் அப்படியே செஞ்சுக்கலாம்என்று நினைத்துதான் பஷீரை பாஸ்கர் என்று நம்பியே காதலித்துவந்தாள். இப்பொழுது உண்மை தெரியும் பொழுது முழுதுமாக மனம் மாறமுடியாமல் தவிக்கிறது. நம்ம குடும்பமோ ரொம்ப ஆசாரமான குடும்பம். அப்பாவோ, கோவில் வேலை செஞ்சுண்டு கௌரவமா காலத்தை ஓட்டிண்டிருக்கார். நான் என் காதல்தான் முக்கியம்னு நெனச்சு பஷீரைக் கல்யாணம் பண்ணிண்டால் என் குடும்பத்துக்கே களங்கம் வராதாநான் ஒரு முஸ்லீமை கல்யாணம் பண்ணிண்டேங்கறது தெரிஞ்சா, ஊர்ல எல்லாரும் நம்ம குடும்பத்தை கேவலமா நினைக்க மாட்டாளா? பேசமாட்டாளா? என் குடும்பத்தையே ப்ராமண சமூகத்திலேர்ந்து ஒதுக்கி வெச்சுட மாட்டாளா? நான் என்ன செய்வேன்? பாவி, இந்த பஷீரை மறக்க முடியல்லியேஎன்று பலவாறாக யோசனை செய்தவள், ஒரு மாதகாலம் பலவிதமான யோசனைக்குப் பிறகு, மெள்ள தனது தாயிடம் நடந்தவைகளை விவா¢த்தாள்.

     பத்மா தனது தாயிடம் நடந்தவைகளைக் கூறுவதற்கு ஒருவாரகாலத்திற்கு முன் அலமேலுவின் நெறுங்கிய தோழி ஒருத்தி தனது பெண், பத்மா வேலை பார்க்கும் அலுவலக வளாகத்தில் பணிபுரிவதாகவும், பத்மாவை ஒரு வாலிபனுடன் அடிக்கடி சுற்றுவதைப் பார்ப்பதாகவும் கூறியதாகச் சொன்னாள். அவளுக்கு, ‘என் பத்மா அப்படியெல்லாம் பழகக்கூடியவள் இல்லை, ஆபீஸீல கூட வேலை பார்க்கறவாகூட பேசிண்டும், பழகிண்டும் இருக்கலாம். நீ ஒண்ணும் அவளைப் பத்தி தப்பா நினைச்சுக்காதேஎன்று அவளுக்குப் பதில் கூறிவிட்டாலும் அலமேலுவின் மனதில் திக் திக்கென்றே இருந்தது. எந்த சமயம் பத்மா என்ன சேதி சொல்லப்போறாளோஎன்று மனம் எண்ணியெண்ணி குமைந்து கொண்டிருந்தது. இப்பொழுது பத்மா தனது காதலைப்பற்றி விவரிக்கும் பொழுது அவளது வயிற்றில் தீ பற்றி எரிவதுபோல உணர்ந்தாள். அந்த அம்மாளுக்கு பத்மாவின் செய்தி அதிர்வை ஏற்படுத்தினாலும், தனது கணவரிடம் இதை எப்படிச் சொல்வது என்று புரியாமல் பயத்தால் உடல் நடுங்கியது. தாயும் மகளும் தனி அறையில் பலவாறாகப் பேசிக்கொண்டனர். இறுதியில் பத்மா பஷீரை மறந்துவிடுவதுதான் உசிதம் என்று முடிவானது.  ஆனாலும் பத்மா கால் மனதுடனேயே அதற்கு ஒப்புக்கொண்டாள்.

     ஆனால், பஷீர் பொறுமை இழந்தவனாக, பத்மாவை அடிக்கடி சந்திக்க முயன்று அவளிடம் பேச மன்றாடினான்.  பத்மாவிற்கு அவனைப் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.. பஷீரின்மேல் எந்த தப்பும் இல்லை. தன்மேல்தான் தப்பு இருக்கிறது. அவன் ஒரு முஸ்லீம் என்று தெரிந்து கொள்ளாமலே ஒருவருட காலம் அவனுடன் பழகியதும், அவனது மனதில் காதல் உணர்வை ஏற்படுத்தியதும் தனது பயித்தியக்காரத்தனம்தான் என்பதை அவளது மனது அடிக்கடி அவளுக்கு உணர்த்திய வண்ணம் இருந்தது. ஒரு நாள் பஷீர் தனது தந்தையை அலுவலக உணவகத்திற்கு வரவழைத்து, அங்கு பத்மாவையும் வரச்செய்து அவனது தந்தைக்கும் பத்மாவை அறிமுகம் செய்து வைத்தான். பஷீரின் தகப்பனாரும் பார்ப்பதற்கு பிராமணரைப்போலவே நல்ல சிவந்த தோற்றத்துடனும் அன்பாகப் பழகுபவராகவும் இருந்தார். பத்மாவிடம் மிக்க அன்பாகவும் நாகரீகமாகவும் பேசினார். முதலில் பத்மாவின் குடும்பத்தைப் பற்றியும், அவள் தந்தை என்ன உத்யோகம் பார்க்கிறார் என்றும் விசாரித்தார். பிறகு, அவரே பேசலானார்.

     “பத்மா, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. என் மகனுக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ எனக்கு உன்னைப் பிடிச்சுப்போச்சு. என் மனைவி உன்னைப் பார்த்தாலும் அவளும் உன்னை விடமாட்டாள். இப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்? மதம்தானே? ஆனால் மனசுகள் ஒத்துப்போனதுக்கப்புறம் ஜாதி என்ன மதம் என்ன வேண்டிக்கிடக்கு? இதுல என்ன வித்தியாசம்னா, நாங்க நான்வெஜ் சாப்பிடுவோம்.  எங்க ஸ்பெஷாலிடியே ஆட்டு மாமிசம்தான். ஆனால் நீங்களெல்லாம் சுத்த சைவம், அசைவத்தைப் பார்த்தாலோ, ஏன் அதன் வாசனைகூட உங்களுக்குப் பிடிக்காது. குமட்டிக்கொண்டு வரும். இதுதானே வித்தியாசம். ஆனால் நாங்கள் நல்ல கடவுள் பக்தி உள்ளவர்கள். அஞ்சுவேளை தொழுகை நடத்துவோம். எங்களுக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அதைவிட்டு மீறமாட்டோம். எந்த அடிதடி வம்புக்கும் போகமாட்டோம்.  ஆனால் ஒண்ணைமட்டும் நான் உனக்கு உறுதியா, வாக்கு கொடுக்கமுடியும். அதாவது உனக்கு எதிரில் நாங்கள் புலால் சாப்பிடமாட்டோம். உன்னையும் புலால் சமைக்கச் சொல்லிக் கஷ்டப்படுத்த மாட்டோம். இது சத்தியம். இதுமட்டும் உனக்காகத்தான் சொல்றேன். பஷீர் உன் மேலே ரொம்ப உசுரையே வெச்சுக்கிட்டிருக்கான். நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவன் பிடிவாதமா இருக்கான்.  இந்த சம்பந்தத்தாலே உங்க குடும்பத்துக்கு அவமானம்தான், பெருத்த அவமானம்தான். நான் இல்லைங்கல்ல. ஆனால் நீ எங்க வூட்டுக்கு மருமகளா வரணும்னு ப்ராப்தம் இருக்கு போல. தயவு செஞ்சு இதைப் புரிஞ்சுக்கோம்மா. ப்ளீஸ்.  நான் ஒரு கவர்மெண்ட் உத்தியோகஸ்தன்தான். எங்கள் குடும்பமும் நல்ல கௌரவமான குடும்பம்தான்.  நான்வேணூமானால், உங்க அப்பாகூட பேசட்டுமாம்மா?” என்று கெஞ்சாத குறையாகப் பேசினார் பஷீரின் தந்தையான அமீர்பாஷா.

     பத்மா ஒன்றும் பதில்சொல்லத் தோன்றாமல் தலைகுனிந்தவண்ணமே அமர்ந்திருந்தாள். அவர் பேசி முடித்து சிலமணித்துளிகள் கழித்துத்தான் தன் திருவாய் மலர்ந்தாள். அங்கிள், என் அப்பா ரொம்ப மானஸ்தர். எங்க மதம்விட்டு வேற மதத்துல சம்பந்தம் வெச்சுக்க சம்மதிக்கமாட்டார். அப்படி நடந்தா எங்க குடும்பத்தை ஜாதியைவிட்டே ஒதுக்கி வெச்சுடுவாங்க. எங்கப்பா, கோவில்ல பூஜை பண்ணறவர்.  ஆசார அனுஷ்டானங்களிலெல்லாம் ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்கிறவர். அதனால, என்னோட ஆசைக்காக, என் குடும்பத்தை பழி வாங்க முடியாது அங்கிள். என்னை மன்னிச்சுடுங்க பஷீர் நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க, மறந்துடுங்க.என்றாள் தலை நிமிறாமலேயே.

     பஷீரின் முகம் வாடிவிட்டது. தனது தகப்பனார் வந்து பேசினால் பத்மா சம்மதித்துவிடுவாள் என்று நம்பிக்கொண்டிருந்தவனுக்கு, பத்மாவின் இத்தகைய பதில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.  ப்ளீஸ் பத்மா, நான் உன்மீது எவ்வளவு ஆசை வெச்சிருக்கேன். உனக்கே இது நல்லா புரியும். நீயும் என்னை ரொம்ப விரும்பறேங்கறதும் உண்மை. இருந்தாலும் உன்னோட குடும்பத்துக்காக நாம் பழகிய பழக்கத்தை மறந்துடச் சொல்றியே நியாயமா? எங்க ஜாதியிலே ஆண்பிள்ளைகளுக்கு இருபத்தியிரண்டு, இருபத்துமூணு வயசுக் கெல்லாம் நிக்காஹ் செஞ்சுடுவாங்க.  ஆனா எனக்கு கல்யாண ஆசையே வரல்ல. உன்னைப் பார்க்கறவரைக்கும் வேற எந்த பொண்ணையும் புடிக்கல்ல. இப்போ எனக்கு இருபத்திஏழு வயசாறது. எங்கம்மா தினமும் நச்சரிச்சுக்கிட்டே இருக்காங்க. ஆனால் உன்னோட பழகவாரம்பிச்ச இந்த ஒரு வருஷத்துல, நான் நிச்சயமா உன்னை மறக்கமுடியாமல், நிக்காஹ் செஞ்சுக்கிட்டா உன்னைத்தான் செஞ்சுக்கிடுவேன்னு எங்கம்மா கிட்டேயே சொல்லியிருக்கேன்னா, நீ என் மனசுல எவ்வளவு தூரத்துக்கு இடம்பிடிச்சிருக்கேன்னு உனக்கே புரியும். நீ என்னைப் பத்தியும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கணும். வேணும்னா சொல்லு, நானும் என் வாப்பாவும் உன் அப்பாக்கிட்டே வந்து பேசறோம். என்ன சொல்லு பத்மாஎன்று கண்களில் நீர்மல்க கெஞ்சினான் பஷீர்.

     பத்மா யோசித்தாள். பஷீரைப் பார்த்தால் மிகவும் பாவமாக இருந்தது. அவனது அப்பாவைப் பார்த்தாலும் பாவமாக இருந்தது. என் ஒருத்திக்காக இருவரும் எப்படியெல்லாம் கெஞ்சுறாங்க! என்கிட்டே என்ன அப்படி இருக்கு? எனக்காக தனது புலால் சாப்பிடும் பழக்கத்தையும் மாத்திக்கறதா சொல்றாங்களே. எனக்கு, அப்பா இதுக்குமேலே வரன்பாத்து, ஜாதகம் பாத்து, வரதக்ஷணை பேசி, அதுக்கு ஏற்பாடு பண்ணி கல்யாணம் பண்ணறதுங்கறது ரொம்ப சிரம சாத்யமா இருக்குமே.  அப்பா கெட்டிக்காரர், என் நிலைமையை எடுத்துச் சொன்னா நிச்சயமா மனசு மாறுவார் இன்னிக்கு ராத்திரி ஏதாவது சொல்லி எப்படியாவது அப்பாவையும், அம்மாவையும் சம்மதிக்க வைச்சுடணும்என்று சிந்தித்தவள், “அங்கிள், எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, எப்படியாவது பேசி, என் வீட்டிலே சம்மதம் வாங்கிடறேன். என் பெற்றோர் எங்க சந்தோஷம்தான் முக்கியம்னு நினைப்பாங்க. அதனால எப்படியாவது அவங்ககிட்டே சம்மதம் வாங்கிடலாம். இல்லேன்னா நீங்க என்ன சொல்றிங்களோ அதுமாதிரி செஞ்சுடலாம். நான் வர்றேன்என்று சொன்னவள் தனது இருகைகளையும் குவித்து வணங்கிவிட்டு அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.

     அன்று இரவு பத்துமணியளவில் அந்த வீடு மிகவும் சோகத்திலும், அதிர்ச்சியிலுமாக காணப்பட்டது. அதாவது பத்மா தனது எண்ணத்தைத் தனது தாயிடம் சொல்ல, தாய் பதறிப்போனாள், பிறகு காரசாரமாக இருவருக்கும் விவாதம் நடந்தது. பத்மா பிடிவாதமாக இருக்கவே, தாயார் தனது கணவரிடம் மெதுவாக எடுத்துரைத்தாள்.

     செய்தி அறிந்த ஸ்ரீநிவாச அய்யங்கார் மிகவும் அதிர்ந்து போனார். அவருக்கு மயக்கமே வந்துவிட்டது. தனது குடும்பம் பரம்பரை பரம்பரையாக எவ்வளவு ஆச்சாரமான குடும்பம், அதுக்கு தன்காலத்திலா சோதனை வரவேண்டும்? என்றும் இன்னும் பலவிதமாக சிந்தனை செயதவர், தனது மனைவியை தனியாகக் கூப்பிட்டுப் பேசினார். அலமேலு அம்மாளும் பத்மா மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும், அந்த முஸ்லிம் பையனும் அவன் தகப்பனாரும் இவளுடன் மிகவும் பிடிவாதமாகப் பேசியதாகவும், இவளாலும் அவர்கள் சொல்லுவதைக் கேட்பதைத் தவிற வேறு எதுவும் செய்யத்தோன்றவில்லை என்றும் இன்னும் பலவிதமாக தாயும் மகளும் பேசிக்கொண்டிருந்ததை நன்றாக விவரித்தாள். அவள் கூறிய அனைத்தையும் அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீநிவாச அய்யங்கார், தீர்க்கமாக யோசித்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தார். தனது மகளைக் கூப்பிட்டு, தனது மனதில் உள்ளவற்றை விவரித்தார்.

     “பத்மா, வா, வந்து உட்கார். இதுதான் நாம் பேசிக்கொள்ளும் கடைசி நாளாக இருக்கும். நீ படிச்சவ. உலகத்தை நன்னா புரிஞ்சுண்டவ. அதனால, நான் நன்னா யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.  நீ அந்த முஸ்லிம் பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு பிடிவாதமா இருக்கேன்னு உன் அம்மா சொன்னா. அவளுக்கு அழுது அழுது முகமெல்லாம் வீங்கிப்போச்சு. இதுல அழறதுக்கு ஒண்ணுமில்லை.  உனக்கு அவனைப் புடிச்சிருக்கு. அவனோடதான் வாழுவேன்னு அடம்பிடிக்கிறே; உன்னை பெத்து வளர்த்து இவ்வளவு பெரிய படிப்பெல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்கவெச் சதுக்கெல்லாம் எனக்கொண்ணும் பெரிய பலனெல்லாம் வேண்டாம்னாலும், அவப்பெயராவது இல்லாமல் இருக்கலாம். நீ ஒரு முஸ்லிம் பையனைக் கல்யாணம் பண்ணிண்டுட்டேன்னு, வெளியிலே தெரிஞ்சா நம்மோட குடும்ப மானம் பரிபோயிடும். நாங்க இதுக்கும் மேலே உயிர் வாழறதுல அர்த்தமே இல்லைன்னு ஆயிடும்.  நாங்க இந்த சமுதாயத்துக்கு முன்னாடி தலைநிமிர்ந்து நடக்கமுடியாது. நான் எந்த கோயில்லேயும் வேலை பார்க்கமுடியாது. எல்லோரும் என்னை காரித்துப்புவா. அதனால, உன்னை கொன்னுடறதா முடிவு பண்ணிட்டேன்.  அலமு, நீயும் நன்னா கேட்டுக்கோ. இவளை உயிரோட சாகடிக்கப்போறோம். எப்படின்னா, இவள் நம்மைச் சேர்ந்தவாளிட்டேயும், இவளோட ·ப்ரண்ஸ் கிட்டேயும், இவ இன்னும் இரண்டு நாள்ல அமொ¢க்காவுக்கு கம்பெனி வேலையா போகப்போறதா சொல்லணும். நாமும் இவளை இரண்டுநாள் கழிச்சு இவளுக்கு சேரவேண்டிய நகை நட்டெல்லாம் கொடுத்து, நல்ல துணிமணிகளெல்லாத்தையும் வாங்கி சந்தோஷமா கொடுத்தனுப்பணும். நாமும் அந்த பையனை ஒரு தடவையாவது பார்த்துக்கணும். அதனால இரண்டு நாள் கழிச்சு ·ப்ளைட்டுக்குப் போறாப்பல, இவ பெட்டி படுக்கைகளோடவும், சீர் செனத்திகளோடவும் புறப்படணும், அப்போ, இவ ஆபீஸீலேர்ந்தும் சிலபேர் இவகூட ·பாரின் போராப்போல மத்தவாகிட்டே சொல்லிக்கணும். அதனால், இவ வாழப்போறவன் கார்ல வந்து நம்மாத்து வாசல்லே இவளை அழைச்சுண்டு போகணும்.  நாமும் இவளை சந்தோஷமா எல்லாருக்கும் தெரியறாப்பல அனுப்பிவைக்கணும். நம்மால நம்ம பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்கையை அமைச்சுக் கொடுக்கமுடியல்லைன்னாலும், அவளுக்கு மனசுக்குப் புடிச்சாப்போல வாழறதுக்கு நாம தடையா இருக்கப்படாது.சற்று நிறுத்தினார் ஸ்ரீநிவாச அய்யங்கார். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகி வழிந்தது. மேற்கொண்டு அவரால் பேசமுடியவில்லை. அப்படியே சிறிது நேரம் சாய்வு நாற்காலியில் சாய்ந்தார். அலர்மேலு வாய்திறக்கவில்லை. எது செய்தாலும், சொன்னாலும், தன் கணவர் நன்றாக யோசித்துத்தான் சொல்வார், செய்வார் என்பது அவளுக்கு நன்றாகப் புரியும். அவர் என்றுமே பிறர் மனம் புண்படும்படி பேசியதுமில்லை. பழகியதுமில்லை. எல்லாம் பகவான் செயல் என்றேதான் நினைப்பார். தன்னைவிட தன் குழந்தைகளிடம் அவருக்கு மிகுந்த பாசமும் அன்பும் உள்ளது என்பதையும் அவள் நன்கு அறிவாள்.

     தன்னை சிறிது ஆசுவாசப் படுத்திக்கொண்ட ஸ்ரீநிவாச அய்யங்கார், ஒரு பெருமூச்சு விட்டார். அவரே மேலும் தொடர்ந்தார். இதோ பார் பத்மா, உன் சந்தோஷம்தான் முக்கியம்னு நாங்க நினைக்கிறோம்கிறதுக்காக, எங்களால அவமானப்பட முடியாது.  ஆனால் துக்கப்பட முடியும்.  அதாவது, நீ இங்கேயிருந்து ·ப்ளைட்டுல கிளம்பிப் போற அன்னிக்கு ·ப்ளைட் ஆக்ஸிடெண்ட் ஆகிட்டதாகவும் அதுல நீயும் உன்கூடப்போறவாளும் செத்துட்டதாகவும், நாங்க மத்தவாளை நம்பவைச்சுடுவோம். அதுக்கப்புறம் உனக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.  நாங்களும் இந்த ஊரைவிட்டு சில நாட்கள்ல வேற எங்கேயாவது போயிடுவோம். இனிமேல் நீ யாரோ நாங்கள் யாரோ. நீயும் எங்களைப் பார்க்கவேண்டாம். நாங்களும் உன்னைப் பார்க்க மாட்டோம். எக்காரணம் கொண்டும் எங்களை நீ யார் மூலமாகவும் தொடர்பு வைச்சுக்கக் கூடாது. இதுக்கெல்லாம் சம்மதம்னா, நீ உனக்குப் புடிச்சவனோட தாராளமா போகலாம்என்று சொன்னவர் வாய்விட்டு அழுதார். பெற்ற பாசம் அவரை ஆட்கொண்டது.

     இப்படியெல்லாம் தனது தகப்பனார் முடிவெடுப்பார் என்று கனவிலும் நினைக்கவில்லை பத்மா. அவளும் தனது தாயைக் கட்டிக் கொண்டு அழுதாள். சிறிது நேரம் கழிந்ததும், பத்மா தன் தந்தையை நோக்கி,            
     “அப்பா, உங்களுக்கு கோபமே வராதா? எல்லாத்துக்கும் ஒரு சொல்யூஷன் வெச்சிருக்கேளே: நீங்க அழாதீங்கோ அப்பா. அதுக்குப் பதிலா என்னை ரெண்டு அடி அடிச்சுடுங்கோ, இல்லை வாயில வந்தபடி திட்டிடுங்கோப்பாஎன்று சொல்லி தனது தந்தையின் மடிமீது விழுந்தாள் பத்மா.  ஸ்ரீநிவாச அய்யங்கார் அவளை மெள்ள தூக்கி, அணைத்துக் கொண்டார். இதோ பாரு பத்மா, ஜாதி, மதம் எல்லாமே நாமதான் வகுத்துண்டது. கடவுள்களே ஜாதிமதம் பார்க்காம கல்யாணம் பண்ணிண்டதா புராணங்கள்லாம் சொல்லலியா என்ன? வாழ்கைங்கறது எதுக்காக? வாழற நாள் பூரா சந்தோஷமா, சௌக்யமா இருக்கணும்கிறதுக்குத்தானே! அதுக்காக, நாம நம்ம பாரம்பர்ய தர்மம் பிசகி நம்ம இஷ்டம் போல வாழணும்னு சொல்லல்லை. நம்மளோட குல தர்மப்படி வாழ்ந்துதான் ஆகணும். அதுக்குத் தடைவந்தா, அதுக்குத் தகுந்தபடி நம்மளை நாமளே மாத்திக்கணும். எல்லாமே பகவான் கிருபைதான். இப்போ நாங்க உன் சந்தோஷத்தையும் பார்க்கணும், அத்தோட, உன் தங்கையோட வாழ்கையையும் பார்க்கணும். நம்ம குடும்ப அந்தஸ்த்தையும் கவனிக்கணும். அதுக்காக சில தியாகங்களை செஞ்சுதான் ஆகணும் குழந்தே.என்று அவர்களுக்கு வாழ்கையின் நிலையைப் புரியவைத்தவர், எழுந்து, தனது மேல்துண்டால் தனது வாயைப் பொத்தி விசும்பியபடியே உள்ளே ஓடினார்.

     அடுத்த இரண்டு நாட்களில் ஸ்ரீநிவாச அய்யங்கார் தீர்மானித்தபடியே எல்லாம் நடந்து முடிந்தன. அமெரிக்கா சென்ற விமானமும் விபத்துக்குள் ளானதாக அனைவருக்கும் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, பத்மாவிற்கு மகமதியர் குலவழக்கப்படி கோலாகலமாக அவர்களின் சொந்த ஊரில் திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற்றது. பத்மா, நசீருன்னிசா பேகம் ஆனாள். அன்று முதல் தான் செய்தது சரியா தவறா என்னும் கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறாள் பத்மா.

     இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்தவைகளை அசைபோட்டுப் பார்த்தாள் பத்மா. அவளது கன்னத்தில் வழியும் கண்ணீர் மட்டும்  நிற்கவில்லை.

     “நான் பாவி, பெத்தவாளைத் தள்ளிவெச்சுட்டு, என்னோட சந்தோஷம்தான் பெரிசுன்னு வந்த மஹாபாவி நான். நான் அந்தாத்தை விட்டு வந்தப்புறம், அப்பா தான் வேலைபார்த்த கோவிலை விட்டுட்டு ஸ்ரீரங்கத்துக்குப் போயிட்டதா, வசுதான் யாருக்கும் தெரியாம சொன்னா. அவளுக்கும் ஸ்ரீரங்கத்துலேயே நல்ல மாப்பிள்ளையாப் பார்த்துக் கல்யாணம் நடந்துடுத்தாம். அவளுக்கும் மூணு குழந்தைகள் இருக்காளாம். அக்காக்களும் அடிக்கொரு தடவை அம்மாவாசைக் கொரு தடவை அப்பா அம்மாவிற்குத் தெரியாமல் ·போன் பண்ணுவா. நாங்கள்ளாம் உறவாடிண்டுதான் இருக்கோம், ஆனால் என்னைப் பெத்து கஷ்டப் பட்டு வளர்த்து, படிக்கவெச்சு, ஆளாக்கி, என்னோட சந்தோஷமே தங்கள் சந்தோஷமா ஏத்துண்டு வாழ்ந்தவாளை தலைகுனிய வெச்சு, ஊரைவிட்டே போக வெச்சு பொழப்புக்கே அல்லாடறமாதிரி செஞ்சுட்டேனே. அவாளும் என்னை நினைச்சு தினமும் உள்ளுக்குள்ளே அழுதுண்டுதான் இருக்காளாம். என்ன பண்ணறது? இதுனால நான் என்ன பெரிசா சாதிச்சுட்டேன்? பெத்தவாளுக்கு மனவேதனையையும் அவமானத்தையும் கொடுத்தேனே தவிற என்னால் வேற என்ன கொடுக்கமுடிஞ்சுது? முன்பின் தெரியாத ஒருத்தரோட நட்பு வெச்சுக்கறதும், அவா யார் என்ன, எப்படிப்பட்டவான்னு தெரிஞ்சுக்காம பழகறதும், அதுக்கும்மேலே காதலிக்கறதும், மனசை மாத்திக்க முடியாம அவதிப்பட்டு, பெத்தவா மனசையும் கஷ்ட்டப்படுத்தறதும், எந்தவிதத்தில நியாயம்? என் அப்பான்னாலும், பெரிய ஞானி, தத்துவம் தெரிந்தவர், மத்தவா மனசு நோகப்படாதுன்னு நினைப்பவர். ஆனால் மத்தவாளா இருந்தா பெரிய களேபரமே பண்ணியிருப்பா. ஊரையே நார அடிச்சிருப்பா. இல்லைன்னா, குடும்பத்தோட தற்கொலை பண்ணிண்டிருப்பா. அப்பா சொல்றபடி எல்லாம் பகவான் சங்கல்பம்னுதான் நினைச்சுக்கணும்.

     ``ஆனால், பாழாப்போன மனசு கேட்கமாட்டேங்கறதே. நான் செஞ்ச தப்பை நினைச்சு மனம் புழுங்கறதைத் தவிற என்னால் வேற என்ன செய்யமுடியும்நான், என் அல்ப சந்தோஷத்துக்காக, என் குடும்பத்தையே தூக்கி எறிஞ்சுட்டு வந்துட்டேனே. எவ்வளவு பெரிய பாவி நான். எனக்கு விமோசனமே கிடையாது.  இப்போ, என்னோட மனுஷாள்லாம் என் மகன் கல்யாணத்துல கலந்துக்கலியேன்னு தாபப்பட்டா என்னைப் போலப் பயித்தியக்காரி உலகத்துல யாருமே இருக்க முடியாது.  பெரியப்பா, சித்தப்பா, சித்தியா, அத்தை, அத்தங்கா, அம்மங்கா, அம்மாஞ்சி, அத்தான்னு எவ்வளவு பெரிய குடும்பத்தை நான் இழந்துட்டேன். அவாள்லாம் நான் அல்பாயிசுல போயிட்டதா நினைச்சு வருத்தப் பட்டிருப்பா. ஆனால் என்னால அவாளையெல்லாம் மறக்க முடியல்லியே. அவாளோட பழகின பழக்கங்களும், விளையாடின விளையாட்டுக்களும் இன்னும் என்னால மறக்க முடியல்லியே. இப்போ நினைச்சாலும் நான் யாரோடயும் பேசமுடியாதே. ஏன்னா, நான் அல்பாயிசுல செத்துப்போனவள்.பத்மா, தனியே அமர்ந்து புலம்புவதோடல்லாமல் பக்கத்து சுவரில் தலையை மோதிக்கொண்டாள். அவள் கண்கள் குளமாயின. இப்படி இன்றுமட்டும் நடக்கவில்லை அடிக்கடி பத்மாவிற்குத் தனது பெற்றோரின் ஞாபகம் வரும்பொழுதெல்லாம் இப்படித்தான் புலம்பித்தவிப்பாள்.

     “என்ன நசீமா டியர், தனியா உட்கார்ந்துகிட்டு என்ன பண்ணறே? சீக்கிரம் எழுந்துவா புள்ளைகளுக்கு பாலும் பழமும் கொடுக்கணுமாம், அம்மா உன்னைத் தேடிக்கிட்டிருக்காங்கஎன்று சொன்னபடி அவள் அருகில் வந்த பஷீர், அவள் கண்களில் பனித்த நீரைக்கண்டு பதறினான். என்னாச்சு டியர்? என்னாச்சு? ஏன் அழுவறே? புள்ளைக்கு நிக்காஹ் நடந்துட்ட சந்தோஷக் கண்ணீரா? இல்லை உன்னைப் பெத்தவங்க, கூடப்பொறந்தவங்க நினைப்பு வந்துட்டதா? எதுவா இருந்தாலும் டேக் இட் ஈஸி டியர் என்று சொல்லியபடி அவள் கண்ணீரைத் துடைத்தான் பஷீர். பத்மா, தன் மனக்கவலையை அவனது அன்பான பரிவால் மறந்து நகைப்பைத் தூவ எத்தனித்தாள்.

                             *************                     




                        .7. அறுவடைகாலம்
    
     சுந்தரேசன் தனது மகன் ஜெயராமனின் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். அவருக்கு ஜெயராமன் ஒரேமகன். மூத்தவன். அவனுக்கு அடுத்தவள் ஜனனி. இருவரையும் மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார்கள். சுந்தரேசனின் மனைவி வாசுகிதன் கணவனிடம் அலாதி அன்பு வைத்திருந்தாலும்அவர் அவள்மீது அதீத உரிமையும் பாசமும் வைத்திருந்ததால்அவள் அவரை மீறி எதைச்செய்தாலும் கண்டுகொள்ளமாட்டார். ஆனால் எதைச் செய்தாலும் அவரிடமும்சொல்லாமல் இருக்கமாட்டாள். அவர்கள் இருவரும் தனது இரு செல்வங்கள் மீதும் அதிக அக்கரையும் அன்பும் பாசமும் வைத்திருந்ததால் அவர்கள் எது கேட்டாலும் உடனை செய்து கொடுத்து விடுவார்கள். இப்படி இருக்கும் பொழுதுஜனனிக்கு வரன் பார்த்து ஒரு நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்தார்கள்.

     ஜனனியின் புக்கஹத்தார் மிகவும் நல்லவர்கள். உயரிய குணம் படைத்தவர்கள். சமூகத்தில் நல்ல பெயர் எடுத்தவர்கள்.  ஆகவே ஜனனியைத் தனது மகள்போலவே வைத்திருந்தார்கள். அவர்களுக்கு ஜனனியின் கணவன் சாரங்கன் ஒரேமகனாகையால் அவனையும் நல்ல ஒழுக்கசீலனாகவும்பண்புள்ளவனாகவும் வளர்த்தார்கள். சாரங்கன் ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு பெரிய பதவியில் இருப்பதால் அவனது நடை உடை பாவனை அனைத்துமே ஒரு சிறந்த கனவானைப் போலவே தோற்றமளிக்கும். அதிகமாக இறைந்து பேசமாட்டான். எதைச் சொன்னாலும் மற்றவர்களுக்குப் புரியுமாறு அமைதியாகவும் நேர்த்தியாகவும் எடுத்துச் சொல்வான். ஆகவே அந்த குடும்பம் மிகவும் நன்றாகவும் அமைதியாகவுமே ஓடிக்கொண்டிருந்தது. வாசுகியும் சுந்தரேசனும் அடிக்கடி அங்குபோய் தனது மகளைப் பார்த்துவிட்டு வருவார்கள். போகும்போது ஏதாவது வாங்கிக்கொண்டுதான் செல்வார்கள்.

     அப்படிப் போகும்பொழுதெல்லாம்வாசுகி தனது மகளுடன் தனியாக அமர்ந்துஅவளது புக்கஹத்தைப் பற்றி விசாரிப்பாள்.  எங்கே தன் மகளை அவர்கள் கொடுமைப் படுத்துகிறார்களோ என்ற பயம்தான். ஜனனியும் மிகுந்த பயந்த சுபாவம் உள்ளவளாதலால். தனது புக்கஹத்தாரிடம் நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தன் தாயாரிடம் பல விஷயங்களையும் மறைக்காமல் சொல்லுவாள். தனது மாமியார் தன்னை தினமும் சமையல் செய்யவிடாமல்தானே சமையல் செய்வதுவீட்டு சாமான்களையெல்லாம் தானே நிர்வகிப்பதுதனது கணவரின் துணிமணிகளைத் தானே துவைப்பது என்று கூடுமானவரையில் அதிகமாக எந்தவேலையும் ஜனனிக்குக் கொடுக்காமல் தானே செய்துவந்தாள்.  தினமும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிடுவதும் அதில் ஒன்று. பாவம் சின்னஞ்சிறிசுகள் தூங்கட்டும் என்று ஜனனியிடம் சொல்லாமல் தானே செய்வாள்.  இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனனிதனது மாமியாரிடம் வந்து அம்மா நான் தினமும் வாசல் தெளித்துக் கோலம் போடறேனே” என்பாள்.  அதற்கு அவள் மாமியார், “ஏண்டி மருமகளே உனக்கு ஏன் வீண் சிரமம். நீ உங்க வீட்டில ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணுஇந்த வேலையெல்லாம் செய்யறதுக்கு இப்போ என்ன அவசரம். புதுசா கல்யாணம் ஆனவஉன் கணவனோட சந்தோஷமா இரு. எங்களுக்கு ஒரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுத்ததுக்கப்புறம் நீ எல்லா வேலையும் செய்யலாம். என்ன:என்று அன்புடன் சொல்லுவாள். அதனால் ஜனனி காலை ஆறு மணிக்கு மேல்தான் தூங்கி எழுவாள். இதையெல்லாம் ஜனனி தனது தாயிடம் கூறுவாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வாசுகியும் ஒன்றும் சொல்லாமல் போய்விடுவாள். இதுபோல் எல்லா நடப்புகளையும் கேட்டுத்தெரிந்து கொள்வாள். எல்லாவற்றையும் கேட்கும்போது பெருமையாகத்தான் இருக்கும் வாசுகிக்கு. தனக்குள் சந்தோஷப்பட்டுக் கொள்வாள். அதைத் தனது கணவனிடமும் சொல்வாள். தனது மகள் சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறாள் என்று சுந்தரேசனும் பெருமைப் பட்டுக் கொள்வார்.

     சுந்தரேசனின் இல்லத்திற்கு இரண்டு வீடுகள் விட்டு ஒரு வீட்டில் அன்னம் என்றொரு மாது வசித்துவருகிறாள். அந்த அம்மாள் எல்லோருடைய இல்லத்திற்கும் சென்று செய்திகளை சேகரித்து வருபவள். நல்லவள்தான்இருந்தாலும் பொழுது போகாததால் அனைவரிடமும் சகஜமாகப் பழகுவாள். தான் தனது வீட்டில் செய்யும் பலகாரங்களைக் கொண்டுவந்து வாசுகியிடமும் கொடுப்பாள்.  வாசுகியிடமிருந்தும் ஏதாவது வாங்கிச் செல்வாள். மதிய வேளையில் தூங்கமாட்டாள். அதனால் வாசுகியிடம் அடிக்கடி வந்து குசலம் விசாரித்துக் கொண்டு செல்வாள்.  அப்படி செல்லும்பொழுதுஒருநாள் வாசுகியிடம் உன் பெண் சமத்தா குடித்தனம் பண்ணறாளோ?” என்று கேட்க. வாசுகியும், “என் பொண்ணுக்கு ஒரு குறைச்சலுமில்லைஅவ மாமியார் அவளை ஒரு வேலையும் செய்ய விடறதில்லையாம். தானே எல்லா வேலையையும் செஞ்சுக்கறாளாம். ரொம்ப நல்லாத்தான் வெச்சுக்கிறாங்க என்றாள். இதைக்கேட்ட அன்னம், ‘என்ன வாசுகி நீஒண்ணும் தெரியாதவளா இருக்கே: இப்படிப்பட்டவங்களை நம்பக்கூடாது. ஒரு வேலையும் செய்யவிடாமல் கடைசி வரையிலும் ஒதுக்கியே வெச்சுட்டுஉங்கிட்டே உன் பெண் ஒருவேலையும் செய்யறதில்லைதன் வீட்டுக்காரனோடவே இருக்கணும்கறான்னு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவா. அதனால உன் பொண்ணை கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கச் சொல்லு. மாமியார் சொல்றபடி கேட்காம அவளையும் மாமியாரோட சேர்ந்து வேலை செய்யச்சொல்லு என்பாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை அன்னம்அந்தம்மா ஒண்ணும் அப்படிப்பட்டவளில்லை” என்ற வாசுகியிடம், “உனக்கு ஒண்ணும் தெரியாது வாசுகிநீயும் சரி உன் பொண்ணும்சரி வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கறவங்க. நான் உலகத்தை நன்னா புரிஞ்சுண்டவநாலுபேரோட பழகறவ அதனால யார் யார் எப்படிப் பட்டவங்கன்னு பார்த்தவுடனேயே கண்டுபுடிச்சுடுவேன். நான் சொல்றதைச் சொலிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். அன்னம் சொன்னதைத் தனது கணவனிடம் கூறய வாசுகி, “என்னங்கஇப்படியுமா இருப்பாங்க?” என்றாள். அதற்கு சுந்தரேசனோ ஏய் யாராவது ஏதாவது சொல்லிகிட்டுத் தான் இருப்பாங்க. இதுக்கெல்லாம் நீ மனசைப் போட்டுக் குழப்பிக்காதே. நம்ம ஜனனி ஒண்ணும் சின்னக் குழந்தையில்லை. அவ அவளோட குடும்பத்தைப் பார்த்துப்பாநீ போய் அதுல உன் மூக்கை நுழைக்காதே” என்றார்.

     “நான் ஏங்க அவள் குடும்ப விஷயத்துல தலையிடப்போறேன்ஆனாலும் நம்ம குழந்தையில்லையாநல்லது கெட்டதுகளை நாம் சொல்லிக்கொடுக்காமல் யாருங்க சொல்லிக்கொடுப்பாங்கநான் ஒண்ணும் தப்பால்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டேங்க. நல்லபடியா இப்படி இருக்கணும் அப்படியிருக்கணும்னுதான் சொல்லிக்கொடுப்பேன். நீங்க எதுக்கும் பயப்படாதீங்க.” என்று சொல்லியவள் தனது மகளுக்குக் கைபேசிமூலம் தன் மனதிற்குத் தெரிந்த அறிவுரைகளை அள்ளி வீசவாரம்பித்தாள். ஜனனிம்மாஎப்படி இருக்கேநல்லா இருக்கியாநான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே. உங்க மாமியார் மாமனாரெல்லாம் ரொம்ப நல்லவங்கதான். உன்னை ஒரு வேலையும் செய்ய விடறதில்லைன்னு சொல்றேஅதப்பத்தித்தான் கொஞ்சம் யோசிச்சு முடிவு செஞ்சுக்கோ. நீ படிச்சவதான்உனக்கும் எல்லாம் புரியும். இருந்தாலும் சொல்லுறேன்நீ உன் மாமியார் சொல்லுறாளேன்னு மசமசன்னு காலைல எட்டு மணிவரைக்கும் தூங்காதே. மாமியாரிட்டே சொல்லி நீயே காலைல அஞ்சு மணிக்கு எழுந்து வாசல் தெளிச்சு கோலம் போடறதாச் சொல்லிடு. அத்தோட வீட்டு வேலைகளைக் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கறதாவும் சொல்லிவை. இல்லேன்னாஒண்ணுநீ முழு சோம்பேரியா ஆகிடுவேஇல்லேன்னாநாளைக்கு அந்தம்மா நீ ஒரு வேலையும் செய்யறதில்லைன்னு குறை சொல்ல ஆரம்பிச்சுடுவா. அதுக்கெல்லாம் நீ கொஞ்சம்கூட இடம் கொடுக்கக்கூடாது. என்ன புருஞ்சுதாஜாக்கிரதையா இருக்கணும். வாயை மூடிக் கிட்டு கம்முன்னு இருந்தா சரிப்பட்டு வராது என்னபுருஞ்சுதா ஜனனி கண்ணு?”என்று தன் மகளுக்குப் பாடம் ஓத ஆரம்பித்தாள். அது நாளடைவில் சுப்ரபாதம்போல் ஜனனியின் காதில் தினமும் ஒலிக்கவாரம்பித்தது. 

     ஒருநாள் ஜனனி தனது மாமியாரிடம் மெள்ள தனது உள்ளக்கிடக்கையைக் கூற ஆரம்பித்தாள். முதலில் அவள் மாமியார் மறுத்தாலும், ‘பாவம் குழந்தை ஆசைப்படறா அவ ஆசைக்கு நான் ஏன் குறுக்கே நிக்கணும்?” என்று நினைத்தவளாக, ‘சரி ஜனனிஉன் இஷ்ட்டம். தினம் காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து பல்தேச்சுட்டுவாசல் பெறுக்கிதண்ணிதெளிச்சு கோலம் போடணும். காலைல ஆறு மணிக்குமேலே கோலம் போடக்கூடாது. அப்படிப் போட்டா லக்ஷ்மி வீட்டுக்கு வரமாட்டாளாம். மூதேவிதான் வருவாளாம். அப்படிச் செய்யறது உன் மாமனாருக்கும் புடிக்காது. என்னசெய்யறியா?” என்றாள் அன்புடன்.  சரிங்க அப்படியே செய்யுறேன். காலைல ஆறு மணிக்குள்ளாற வாசல் தெளிச்சுக் கோலம் போட்டுடறேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தாள்.

     மறுநாள்முதல் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து தான் ஏற்றுக் கொண்ட பணியைச் செய்ய ஆரம்பித்தாள். இரண்டு மூன்று நாட்கள் செய்தாள். பிறகு அவளால் அதிகாலையில் எழுந்திருக்க முடியவில்லை. தினம் அலாரம் வைத்துத்தூங்கினாலும்காலையில் அலாரம் அடித்ததும் தூக்கக்கலக்கத்தில் அதை நிறுத்திவிட்டு தூங்கிவிடுவாள். இல்லையேல் அவளது கணவன் அவளை எழுந்திருக்கவிடாமல் ஆசையால் அணைத்துக்கொண்டு தூங்குவான். அவள் எவ்வளவு சொன்னாலும் அவன் கேட்கமாட்டான். எல்லாம் அம்மா செஞ்சுக்குவாங்க. ம்.ம்.ம். நீ இங்கேயே இரு. அப்புறம் போகலாம் . என்றுசொல்லி அவளை இறுக அணைத்துக் கொள்வான். அவனுக்கு அவளும் கட்டுப்பட்டுகாலையில் தாமதமாகவே எழுந்திருப்பாள். அதனால் சில நாட்கள் அவள் அதிகாலையில் கோலம் போடுதலைச் செய்யமுடியவில்லை. அப்பொழுதும் அவளது மாமியார் ஒன்றும் சொல்லமாட்டாள். ஒரு புன்சிரிப்புடன்  தலையை ஆட்டிக்கொண்டு தனது வேலையில் ஈடுபடுவாள். 

     சிலநாட்கள் கழிந்துகுற்ற உணர்ச்சியால் உந்தப்பட்ட ஜனனி தனது மாமியாரிடம், `‘அத்தைஎன்னை மன்னிச்சுக்குங்கஎன்னால் நான் உங்ககிட்டே சொன்னபடி நடந்துக்க முடியல்லை. அப்படி நான் எழுந்திருந்தாலும்உங்க பிள்ளை என்னை எழுந்திருக்க விடறதில்லை. இனிமேல் நான் எப்படியாவது அஞ்சுமணிக்கு எழுந்திருக்க முயற்சி பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்க” என்றாள். அதற்கு அவளது மாமியார், ‘அடி அசடேஇதெல்லாம் கல்யாணம் பண்ணின கொஞ்சநாளைக்கு சகஜம் தாண்டி. கொஞ்சநாள் போகட்டும்.  இப்போதானே உனக்கு கல்யாணமாகி மூணு மாசம் ஆவுது.” என்றாள்.  அதற்கு ஜனனிஅப்படின்னாநான் வீட்டு வேலைகளையாவது செய்யறேனே. வீட்டு வேலைகளை எனக்குச் சொல்லிக் கொடுக்கிறீங்களாஎங்க வீட்டில நான் எல்லா வேலையையும் செய்வேன். எங்க வீட்டு வேலைக்கும்இந்த வீட்டு வேலைக்கும் நிறைய மாறுதல் இருகும் இல்லையாஅதனால இந்த வீட்டு வேலைகளின் நெளிவு சுளிவுகளையும்யாருக்கு என்னயென்ன பிடிக்கும்கிறதையும் எனக்குச் சொல்லிக் கொடுத்தீங்கன்னா நான் புரிஞ்சுக்குவேன் அத்தை. உங்களை வேலை செய்ய விட்டுட்டு நான் சும்மா இருக்கறது என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அத்தை” என்றாள். அவள் மாமியாரும் சிரித்துக்கொண்டே சரி உன் இஷ்ட்டம்” என்று சொல்லி அன்றுமுதல் அந்த வீட்டு வேலைகளை அவளுக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தாள்.  அன்றுமுதல் வீட்டு வேலைகளை ஜனனி செய்யத்தொடங்கினாள்.

     



.                                                              
                                  

                      










                  

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக